under review

கிந்தனார் கதாகாலட்சேபம்

From Tamil Wiki

கிந்தனார் காலட்சேபம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடத்திய பகுத்தறிவு கருத்துகளைக் கொண்ட கதாகாலட்சேப நிகழ்ச்சி. உடுமலை நாராயண கவி இயற்றியது.

கிந்தனார் காலட்சேபம் உருவான வரலாறு

திரைப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, சென்னை தியாகராயர் நகரில் கட்டிய மாளிகையின் திறப்பு விழாவுக்கு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சதரின் 'நந்தன் சரித்திரம்' கதாகாலட்சேபம் நடத்துவதற்கு அவரை அழைத்தபோது அவர் மறுத்ததாகவும், இதையறிந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அதற்கு எதிர்வினையாக உடுமலை நாராயண கவியோடு இணைந்து 'கிந்தனார் காலட்சேபம்' என்னும் இசை நாடகத்தை உருவாக்கி நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.

கதைச் சுருக்கம்

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த கிந்தன் பட்டணம் போய்ப் படிக்க ஆசைப்பட்டான். தந்தையார் அது முறையல்ல என்று கோபப்படுகிறார். அதை மீறிச்சென்று சென்னையில் கல்லூரியில் படித்து, பிறகு கல்வி அதிகாரியான கிந்தன் உள்ளூருக்கு வரும்போது, தனக்கு ஆசிரியராக இருந்த உயர்ஜாதி பார்ப்பன ஆசிரியரே வரவேற்று மகிழ்ந்து, தம் வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரிக்கிறார்.

வரவேற்பு

கிந்தனார் காலட்சேபத்தின் பாடல்வரிகள் நந்தனார் சரித்திரத்தின் பாடல்களின் மெட்டிலும், சந்தத்திலும் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறின.

கிந்தனார் காலட்சேபம் மக்களிடையே தனது பகுத்தறிவுக் கருத்துகளாலும், அழகிய நகைச்சுவையான வனங்களுக்காகவும், இசைக்காகவும் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே முதல் தேவை என வலியுறுத்தியது.

கலைவாணரின் 'நல்லதம்பி' திரைப்படத்திலும் இடம்பெற்றது.

சாதிக் கொடுமைகளுக்கு எதிர்வினையாகவும் அமைந்தது. ஈ.வே. ராமசாமிப் பெரியாரால் ""நாட்டுக்கு நல்லது செய்யவும், முன்னேற்றவும் கிருஷ்ணன் போன்ற அறிஞர்களும், பகுத்தறிவாளர்களும் பெருஞ்சேவை செய்கின்றனர். இவ்வளவு பெரிய புரட்சிகரமான செயல் செய்து அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் கிருஷ்ணனுக்கு உள்ள அபார சக்தியெல்லாம் தன்னலம் இல்லாத தன்மைதான்" என்று பாராட்டப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page