under review

காமக்கணிப் பசலையார்

From Tamil Wiki
பசலையார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பசலையார் (பெயர் பட்டியல்)

காமக்கணிப் பசலையார் (காமக்கணி நப்பசலையார்) சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

காமக்கணி என்பது இயற்பெயர். பசலை நோயின் இயல்பைப் பாடியதால் 'பசலையார்' என்றழைக்கப்பட்டார். 'நல்' என்ற அடைமொழியும் சேர்த்து காமக்கணிப் நப்பசலையார் என்றழைக்கப்பட்டார். மதுரைக் காமக்கணிப் நப்பசலையார் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

காமக்கணிப் பசலையார் நற்றிணையில் 243-ஆவது பாடல் பாடினார். இது பாலைத்திணைப்பாடல்

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • தூய மணல் மேட்டுக் கரையில் சலசலக்கும் கிளைகளுடன் தழைத்திருக்கும் மாமரம் இருக்கும் சோலை. அந்தச் சோலையில் தங்கி வாழும் பூப்போன்ற கண்களை உடைய நீலநிறக் குயில்.

பாடல் நடை

துறை: பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்! என
கையறத் துறப்போர்க் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2023, 07:32:01 IST