under review

கடலூர்ப்‌ பல்‌கண்ணனார்‌

From Tamil Wiki

கடலூர்ப் பல்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்று நற்றிணையில் 380-ம் பாடலாக உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

கடலூர்ப் பல்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

கடலூர்ப் பல்கண்ணனார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 380-ம் பாடலாக உள்ளது.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • தொட்ட நெய்யும், தாளிக்கும்போது சிதறிய நெய்யும் பட்டு தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. சுருங்கிய முலையும், தோளும், ஊறும் பாலும், பருகும் குழந்தையின் வாயும் பட்டு, குழந்தை பிறந்த பச்சுடம்பு நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை என தோழி பாணனுக்குக் கூறுகிறாள்.
  • பாணனுக்குத் தோழி வாயில் மறுப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு பயனற்ற சொற்களைப் பேச வேண்டாம் என்று தடுக்கிறாள்.
  • பரத்தையருடன் தொடர்பு கொள்ளும் தலைவன் பற்றிய குறிப்பு உள்ளது.
  • சீறியாழின் பொன் போன்ற நரம்பில் இசை கூட்டிப் பாட வல்லவன் பாணன்.
  • ஊரனை - ஊரை மேய்பவன் என்ற பொருளில் வரும் சொல். இன்றும் வழக்கில் உள்ளது.
  • நிலைகொள்ளாமல் துடிக்கும் தலைவனின் தேரில் பூட்டியிருக்கும் குதிரைகள் அவனின் நிலையற்ற மனதிற்கு உள்ளுறையாக உள்ளது.

பாடல் நடை

நற்றிணை 380

திணை: மருதம் துறை: பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;
கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்
புரவியும் பூண் நிலை முனிகுவ;
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:14:52 IST