உருத்திர பசுபதி நாயனார்
- பசுபதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பசுபதி (பெயர் பட்டியல்)
உருத்திர பசுபதி நாயனார் சைவ அடியவர்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். ருத்திரனை நினைத்து இரவு பகலும் குளத்தில் தவம் செய்ததால் உருத்திர பசுபதி நாயனார் எனப் பெயர் பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
உருத்திர பசுபதி நாயனாரின் சொந்த ஊர் சோழ நாட்டிலுள்ள திருத்தலையூர். இதில் வேதியர் மரபில் வந்தவர். பசுபதியார் சோழ நாட்டிலுள்ள தாமரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கைகளை தலைமேல் வைத்து இரவும் பகலும் சிவனை வேண்டினார். நித்தமும் சிவனை நினைத்து வேண்டி குளத்தில் தவமிருந்ததால் உருத்திர பசுபதியார் என்று பெயர்பெற்று சிவலோக பதவியை எய்தினார். (பெரிய புராணம்)
சிற்ப அமைப்பு
உருத்திர பசுபதியாரின் சிற்ப அமைப்பு தாராசுரம் கோவிலில் காணப்படுகின்றன. இதில் பூ, வாத்து, மீன்கள் நிறைந்த குளத்தினுள் நின்றவாறு இருகைகளையும் தலைமேல் உயர்த்தி வணங்கி ருத்திரம் ஓதி உருத்திர பசுபதியார் நிற்கிறார். எதிரே சிவனும், உமையும் ரிஷபத்தின் மேல் அமர்ந்து உருத்திர பசுபதியாரை வாழ்த்தும் காட்சி இடம்பெற்றிருக்கும்.
திருத்தொண்டத்தொகை
"முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்"
குருபூஜை
உருத்திர பசுபதியாரின் குருபூஜை புரட்டாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
உசாத்துணை
- தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவில், குடவாயில் பாலசுப்ரமணியன்
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Mar-2023, 07:22:57 IST