under review

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

From Tamil Wiki
இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள், சிலம்பு நா. செல்வராசு (நன்றி: காலச்சுவடு பதிப்பகம்)

கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ், பரணி, ஆற்றுப்படை முதலிய இலக்கிய வகை நூல்கள் சிற்றிலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளதாக இலக்கிய வரலாற்று நூல்கள் கூறுகின்றன. என்றாலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை அந்த எண்ணிக்கையை விட அதிகம் என்ற கருத்தும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய புதுவகைச் சிற்றிலக்கிய நூல்களாக கீழ்காணும் நூல்களை முனைவர் சிலம்பு நா. செல்வராசு தனது ’இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' நூலில் (காலச்சுவடு வெளியீடு) தெரிவித்துள்ளார். அந்நூலில், நானூற்றுப் பதினேழு சிற்றிலக்கிய வகைமைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் பட்டியல்

கும்மி கும்மிப்பாட்டு
மெய்ப்பர் கும்மி
நாட்டுக்கும்மி
பெண்கள் விடுதலைக் கும்மி
அந்தாதி அரிமதி அந்தாதி
அழகப்பர் அந்தாதி
காந்தி அந்தாதி
செந்தமிழ் அந்தாதி
புரட்சித் தலைவர் புகழ் அந்தாதி
அம்மானை புரட்சித் தலைவி அம்மானை
ஆற்றுப்படை அச்சக ஆற்றுப்படை
இயற்கை ஆற்றுப்படை
இரவலராற்றுப்படை
ஈழப்புலி ஆற்றுப்படை
செந்தமிழ்த் தொண்டர் ஆற்றுப்படை
தலைவர் ம.பொ.சி. ஆற்றுப்படை
தொண்டர் ஆற்றுப்படை
மக்கள் திலகம் பற்றிய மாணவர் ஆற்றுப்படை
மாணவராற்றுப்படை
மாணாக்கர் ஆற்றுப்படை
உலா தமிழ்ச்செல்வி உலா
தமிழன் உலா
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உலா
பெரியார் பேருலா
எண் செய்யுள் தமிழ் இருபது
அண்ணா நாற்பது -1
அண்ணா நாற்பது -2
கீழ்நாற்பது
நல்லவை நாற்பது
மேல் நாற்பது
தமிழ் நூறு
அழகிய வெண்பா அறுநூறு
குறவஞ்சி கூட்டுறவுக் குறவஞ்சி
சிந்து உழைப்பாளர் சிந்து
கலைஞர் காவடிச் சிந்து
காந்தி சரித்திர நொண்டிச் சிந்து
சிந்துமாலை
தமிழ்ச் சிந்து
வைரச் சிந்து
திருத்தசாங்கம் காந்தி திருத்தசாங்கம்
பாரததேவி திருத்தசாங்கம்
திருப்பல்லாண்டு காந்தி திருப்பல்லாண்டு
திருப்பள்ளியெழுச்சி காந்தி திருப்பள்ளி எழுச்சி
பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி
தூது காக்கை விடு தூது
சிலேடைத் தூது
திருக்குறள் விடு தூது
திருக்குறள்வேள் வரதராசர் தமிழ்விடு தூது
புலவர் விடு தூது
முகில் விடு தூது
வெய்யோன் விடு தூது
பரணி சீனத்துப் பரணி
புரட்சித் தலைவி போர்ப் பரணி
பாவை கலைஞரின் வாகையும் மார்கழிப் பாவையும்
தைப்பாவை
பிள்ளைத்தமிழ் அண்ணா பிள்ளைத்தமிழ்
எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்
கம்பன் பிள்ளைத்தமிழ் - 1
கம்பன் பிள்ளைத்தமிழ் - 2
கலைஞர் கருணாநிதி பிள்ளைத்தமிழ்
காந்தி பிள்ளைத்தமிழ் - 1
காந்தியண்ணல் பிள்ளைத்தமிழ் -2
காமராசர் பிள்ளைத்தமிழ்
கிருபானந்த வாரியார் பிள்ளைத்தமிழ் -1
வாரியார் பிள்ளைத்தமிழ் -2
தமிழ்த்தாய் பிள்ளைத்தமிழ்
திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் -1
தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் -2
தொன் போஸ்கோ பிள்ளைத்தமிழ்
பண்டிதமணி பிள்ளைத்தமிழ்
பாரதி பிள்ளைத்தமிழ் -1
மகாகவி பாரதி பிள்ளைத்தமிழ் - 2
பாரதி பிள்ளைத்தமிழ் -3
பெரும்பாவலர் பாரதி பிள்ளைத்தமிழ் -4
பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
பெரியார் பிள்ளைத்தமிழ் - 1
பெரியார் பிள்ளைத்தமிழ் -2
மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - 1
மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் -2
மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - 3
வள்ளலார் பிள்ளைத்தமிழ்
வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ்
முதுமைத் தமிழ் பாட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம் முதுமைத்தமிழ்
வெண்பா கலைஞர் சிலேடை வெண்பா
தமிழ்க்குடிமகனார் வெண்பா
கலம்பகம் திரு.வி.க. கலம்பகம்
மாலை புரட்சிக் கவிஞருக்குப் புகழ்மாலை

உசாத்துணை


✅Finalised Page