under review

இராமலிங்க வள்ளலாரின் மாலை இலக்கியங்கள்

From Tamil Wiki

இராமலிங்க வள்ளலார், மாலை இலக்கியங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். சிவன், நடராசர், திருத்தணிகை முருகன், வடிவுடை அம்மன் போன்ற பல தெய்வங்கள் தனக்கு அருள் புரிந்த விதத்தை, அத்தெய்வங்களின் சிறப்பை, பெருமையை, குருவாக வந்து தன்னை ஆட்கொண்ட தன்மையை மாலை இலக்கியங்களில் பாடியுள்ளார்.

இராமலிங்க வள்ளலாரின் மாலை இலக்கியங்கள் பட்டியல்

  1. தெய்வமணி மாலை
  2. பிரார்த்தனை மாலை
  3. செழுஞ்சுடர் மாலை
  4. ஜீவ சாட்சி மாலை
  5. கருணை மாலை
  6. செல்வச்சீர்த்தி மாலை
  7. எழுத்தறியும் பெருமான் மாலை
  8. வடிவுடை மாணிக்க மாலை
  9. தனித்திரு மாலை
  10. இரங்கன் மாலை
  11. அருண்மொழி மாலை
  12. இன்பமாலை
  13. இங்கித மாலை
  14. மகாதேவ மாலை
  15. சிகாமணி மாலை
  16. வல்லபை கணேசர் பிரசாத மாலை
  17. கணேசத் திரு அருள் மாலை
  18. கணேசத் தனித் திருமாலை
  19. தெய்வத்தனித் திருமாலை
  20. அன்பு மாலை
  21. அருட்பிரகாச மாலை
  22. பிரசாத மாலை
  23. ஆனந்த மாலை
  24. பத்தி மாலை
  25. சௌந்தர மாலை
  26. அதிசய மாலை
  27. அபராத மன்னிப்பு மாலை
  28. ஆளுடைய பிள்ளையார் அருள் மாலை
  29. ஆளுடைய அரசுகள் அருள் மாலை
  30. ஆளுடைய நம்பிகள் அருள் மாலை
  31. ஆளுடைய அடிகள் அருள் மாலை
  32. திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை
  33. நடராச பதி மாலை
  34. சற்குருமணி மாலை
  35. உத்தர ஞான சிதம்பர மாலை
  36. அருள் விளக்க மாலை
  37. அனுபவ மாலை

இராமலிங்க வள்ளலாரின் மாலை இலக்கியங்கள் அமைப்பு

பாட்டியல் நூல்கள் கூறும் மாலை இலக்கியங்களுக்கும் வள்ளலாரின் மாலை இலக்கியங்களுக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. வள்ளலாரால் பாடப்பெற்ற முப்பத்தேழு மாலைகளில் இருபத்தெட்டு மாலைகள் அறு சீர், எழு சீர், எண் சீர், பன்னிரு சீர், கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்துள்ளன. கட்டளைக் கலித்துறையில் ஐந்து மாலைகளும் கலிவிருத்தத்தில் ஒன்றும், கொச்சகக் கலிப்பாவில் இரண்டும், தரவு கொச்சகக் கலிப்பாவில் ஒன்றும் ஆக மொத்தம் ஐந்துவகை யாப்புகளில் முப்பத்தேழு மாலைகளைப் புனைந்துள்ளார்.

வள்ளலாரின் மாலைகளில் பேரெல்லை சில மாலைகளில் நூறு பாடல்களாகவும், சில மாலைகள் பத்துப் பாடல்களாகவும் அமைந்துள்ளன.

உசாத்துணை

  • வள்ளலாரின் மாலை இலக்கியங்கள், சி.வெ. சுந்தரம், கங்காராணி பதிப்பகம், முதல் பதிப்பு, 2012
  • இராமலிங்கரும் தமிழும், ஊரன் அடிகள், சமர சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், முதல் பதிப்பு, 1967


✅Finalised Page