under review

ஆர். சுமதி

From Tamil Wiki
எழுத்தாளர் ஆர். சுமதி
ஆர். சுமதி

ஆர். சுமதி (ஜூன் 15, 1971) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை எழுதினார். மகாராஷ்டிராவில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 200-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

ஆர். சுமதி, ஜூன் 15, 1971 அன்று, சீர்காழியில், ஆர். ராதாகிருஷ்ணன் - ரேணுகா இணையருக்குப் பிறந்தார். இளங்கலை தமிழ் பயின்று பட்டம் பெற்றார். முதுகலை தமிழ், முதுகலை வரலாறு கற்றார். ஆசிரியர் பயிற்சி (Teacher Training Course) பட்டம் பெற்றார். ஓவியப் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கணவர் என். சௌந்தரராஜன், ஆசிரியர். ஒரே மகள்: சௌந்தர்யா, பல் மருத்துவர்.

இலக்கிய வாழ்க்கை

ஆர். சுமதி இளம் வயது முதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். தந்தை கவிஞர். அவரது கவிதைகளை வாசித்து தானும் சில கவிதைகளை எழுதினார். முதல் படைப்பு ‘கண்ணன் பாட்டு’ என்ற கவிதை, ‘கோகுலம்’ இதழில் வெளியானது. தொடர்ந்து கோகுலம் இதழில் பல படைப்புகள் வெளியாகின.

லக்ஷ்மி, சிவசங்கரி ஆகியோரின் எழுத்துக்களை வாசித்து தனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். முதல் நாவல், ‘என்னருகியில் நீயிருந்தால்’, 1994-ல், ‘கண்மணி’ இதழில் வெளியானது. தொடர்ந்து ராணி முத்து, குடும்ப நாவல், கண்மணி போன்ற இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார். குமுதம் போன்ற இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். இவரது நாவல்களை மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து ‘ஆய்வியல் நிறைஞர்’ பட்டம் பெற்றனர்.

ஊடகம்

ஆர்.சுமதியின் ‘கெட்டி மேளம்’ என்ற நாவல், சென்னைத் தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பானது.

விருதுகள்

கண்மணி நடத்திய புதினப் போட்டியில் இரண்டாம் பரிசு

இலக்கிய இடம்

ஆர். சுமதியின் படைப்புகள் பொது வாசிப்புக்குரியவை. எதிர்மறைச் சித்திரிப்புகளின்றி, யதார்த்தத்தை, பெண்களின் வாழ்க்கையைப் பேசுவதாக இவரது படைப்புகள் உள்ளன. குடும்ப உறவுகள், பூசல்கள், பணி செய்யும் மகளிர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்கள், அகப்போராட்டங்கள் ஆகியவற்றைத் தனது புதினங்களில் விரிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

தமிழில் பெண்களை மையமாக வைத்து, அவர்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் எழுத்தாளர்களான ரமணி சந்திரன், ஜெய்சக்தி, முத்துலட்சுமி ராகவன் வரிசையில் ஆர். சுமதியும் இடம் பெறுகிறார்.

ஆர். சுமதி புத்தகங்கள்
ஆர். சுமதி புத்தகங்கள்

நூல்கள்

நாவல்கள்
  • அச்சம் விடு பச்சைக் கிளியே
  • அங்கே சென்று அன்பைச் சொல்லு
  • அவள் வருவாளா
  • அவளுக்கு யார் வேண்டும்?
  • அள்ளி வச்ச மல்லிகையே
  • அன்பிற்கு தலைவணங்கு
  • அன்பிற்கு பஞ்சமில்லை
  • அன்பு மலர்கள்
  • அன்பில் வந்த காவியம்
  • அன்பே ஆருயிரே
  • அன்பே வா
  • அற்புத ஆனி முத்தே
  • ஆராதனா
  • இடம் மாறும் இதயங்கள்
  • இதயம் உனது காணிக்கை
  • இது தாய் மடியே
  • இனிமை நினைவுகள் தொடரட்டுமே!
  • இணையான இளமானே
  • உயிரோவியம் உனக்காகத்தான்
  • உறவில்லை பிரிவில்லை
  • உறவு சொல்லி விளையாடு
  • உனக்காக காத்திருப்பேன்
  • உனக்காகவே வாழ்கிறேன்
  • உனக்கே உயிரானேன்
  • உன்தோள் சேர ஆசைதான்
  • உன்னிடம் மயங்குகிறேன்
  • ஊஞ்சலாடும் நெஞ்சம்
  • எங்கே அந்த பெண்நிலா?
  • எங்கெங்கும் உன் வண்ணம்
  • எப்படி செல்வேனடி?
  • எல்லைக் கோடுகள்
  • என் இனிய இளமானே
  • என் உயிரே நீ எங்கே?
  • என் உயிரே ரஞ்சிதா
  • என் நினைவு நீ தானே
  • என் மழையே என் மயிலிறகே
  • என்னருகில் நீயிருந்தால்
  • என்ன விலை அழகே
  • என்னுயிர் காதலியே
  • என்னென்னவோ என் நெஞ்சினிலே
  • என்னைக் கொஞ்சும் சாரல்
  • எனை ஆளும் எஜமானே
  • எண்ணம் போலக் கண்ணன் வந்தான்
  • ஏனழுதாய் என்னுயிரே!
  • ஒன்று சேர்ந்த உள்ளம் மாறுமா?
  • ஒருத்தி மட்டும் கரையினிலே
  • ஒருவானம் இருநிலவு
  • ஒருவிலை ஒருகொலை
  • ஓரிடம் நீ தருவாய்
  • கடிதங்கள் ஜாக்கிரதை
  • கண்ணாளனே
  • கண்ணோரம் மின்சாரம்
  • கண்வரைந்த ஓவியமே
  • கற்பூர ஜோதி
  • கனவிலே வந்து நில்லடி
  • கனவுகளின் சுயம்வரம்
  • கனவுத் தேவதை
  • கரையோர கொலைகள்
  • காதல் கோலம்
  • காதல் சிறகுகள்
  • காதல் சுவடுகள்
  • காதல் துரத்தல்
  • காதல் தொழுகை
  • காதல் மின்னல்
  • காதல் ராஜ்யம்
  • காதல் வரம்தா!
  • காதல் ராஜ்ஜியம் உனது
  • காதலாய் வந்து போகிறாய்
  • காத்திருப்பேன் கண்ணா
  • காவலை மீறிய காற்று
  • கானலைத் தேடும் காவிரி
  • கேட்கும் வரம் கிடைக்கும் வரை...
  • கூடுமறந்த குயில்கள்
  • கைவீசும் தென்றல்
  • சிந்தனையே என் சித்தமே
  • சில ஞாபகம் தாலாட்டும்
  • சின்னக்கிளி
  • சினேகிதனே
  • சொல்லில் வருவது பாதி
  • தவமின்றிக் கிடைத்த வரமே
  • தவிக்குது தயங்குது இருமனது
  • தாய்ப்பறவை
  • திரும்பி வா தென்றலே
  • தீபம் எரிகின்றது
  • தீயை தீண்டிய தென்றல்
  • தூரத்து ரோஜா
  • தெய்வம் தந்த பூவே
  • தெருவில் விழுந்த மாலைகள்
  • தென் பொதிகை சந்தனமே
  • தேடினேன் வந்தது
  • தொடரும் கனவுகள் தொடரட்டும்
  • நந்தா என் நிலா
  • நான் பேச நினைப்பதெல்லாம்...
  • நிலவுக்குக் களங்கமில்லை
  • நிறம் மாறும் பூக்கள்
  • நிறம் மாறும் நிமிடங்கள்
  • நீங்காத எண்ணம் ஒன்று
  • நீயிருந்த மனசு
  • நீயின்றி நானில்லை
  • நீ யென்பது நானல்லவோ
  • நெஞ்சுக்கு நீ அழகு
  • நெஞ்சுக்குள் நீ தான்
  • பாசமலர்கள்
  • பார்த்தால் காதல் வரும்
  • பார்வை ஒன்றே போதுமே
  • பார்வைகள் புதிதா?
  • புதிராக ஒரு பூ
  • புனித மலர்
  • பூ மகள் ஊர்வலம்
  • பேசும் உள்ளம் பேசாத கண்கள்
  • பேசும் பொற் சித்திரமே
  • பொன்னாடை
  • போய்வா நதியலையே...
  • மங்கல இசை
  • மலரே மயங்காதே!
  • மறவாதே மனமே
  • மலருக்குத் தென்றல் பகையானால்
  • மனசுக்குள் வரலாமா?
  • மனோரதம்
  • மழை தருமோ என் மேகம்
  • மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
  • முல்லைப்பூ பல்லக்கு
  • யாரோடு யாரோ
  • ரதி உனக்கொரு சதி
  • வசந்த முல்லை
  • வசந்தத்தைத் தேடும் வானம்பாடி
  • வண்ணக்கிளி செய்த மாயம்
  • வளை ஓசை
  • வாசமில்லா மலரிது
  • வாழ்ந்தால் உந்தன் மடியில்
  • வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே!
  • வானம் உனக்கு பூமி உனக்கு
  • விழியிலே மலர்ந்தது
  • வேரினை வெறுக்கும் விழுதுகள்
  • வேதமடி நீ எனக்கு
  • ஜீவஜோதி
சிறுகதைத் தொகுப்புகள்
  • சில்லுனு ஒரு காதல்
  • ஆர். சுமதி சிறுகதைத் தொகுப்பு - பாகம் - 1

உசாத்துணை


✅Finalised Page