under review

அயல் சினிமா (இதழ்)

From Tamil Wiki
Ayal Cinema March 2019 - Cover
அயல் சினிமா (மார்ச் 2019) - முகப்பு

அயல் சினிமா (ஆகஸ்ட் 2017- ஜூலை 2019) தமிழில் உலகத் திரைப்படங்களுக்காக வெளிவந்த முதல் மாத இதழ்.

வெளியீடு

அயல் சினிமா இதழ் மு. வேடியப்பனை ஆசிரியராகக் கொண்டு ஆகஸ்ட் 2017 முதல் வெளிவரத் தொடங்கியது. ஜா. தீபா இதழ் தொடங்கியதிலிருந்து 2019 வரை பொறுப்பாசிரியராக இருந்தார். அஜயன் பாலா அடுத்த இரண்டு இதழ்களுக்கு பொறுப்பாசிரியராக இருந்தார். ஜூலை 2019-ல் அயல் சினிமா இதழ் நிறுத்தப்பட்டது.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் பி. கண்ணன், பவா செல்லத்துரை, என். ஆர். பழனிக்குமார் ஆகியோர் அயல் சினிமா இதழின் ஆலோசனைக் குழுவிலும், பாஸ்கர் சக்தி, சி.ஜே. ராஜ்குமார், ஓவியர் ஜீவா ஆகியோர் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தனர்.

உள்ளடக்கம்

அயல் சினிமா இதழ் திரைப்படங்கள், திரை இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மற்றும் மொழிபெயர்ப்பு நேர்காணல்களை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.

பங்களிப்பாளர்கள்

கட்டுரைகள், நேர்காணல்கள் என வெவ்வேறு வடிவங்களில் அயல் சினிமா இதழில் பங்களித்தவர்கள்

  • ஜா. தீபா
  • அஜயன் பாலா
  • ஜெயமோகன்
  • பாஸ்கர் சக்தி
  • சீனு ராமசாமி
  • இயக்குநர் என். லிங்குசாமி
  • லெட்சுமி நாராயணன்
  • ஆர். ஆர். சீனிவாசன்
  • கருந்தேள் ராஜேஷ்
  • ராம் முரளி
  • உமா ஷக்தி
  • சுகா
  • சி.ஜே. ராஜ்குமார்
  • இயக்குநர் கே. பாக்யராஜ்
  • பிருந்தா சாரதி
  • ஓவியர் ஜீவா
  • வா. மணிகண்டன்
  • மதியழகன் சுப்பையா
  • மதி மீனாட்சி
  • ஜி.ஏ. கௌதம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jul-2024, 05:30:59 IST