under review

ஹெப்சிபா ஜேசுதாசன்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
mNo edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Hephzibah Jesudasan|Title of target article=Hephzibah Jesudasan}}

[[File:Hepsibhah jesudasan.jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]

ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பிப்ரவரி 9, 2012) தமிழ் யதார்த்தவாத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் [[புத்தம்வீடு]] என்ற நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் [[ஜேசுதாசன்|ஜேசுதாசனின்]] மனைவி.
ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பிப்ரவரி 9, 2012) தமிழ் யதார்த்தவாத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் [[புத்தம்வீடு]] என்ற நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் எழுதியவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் [[ஜேசுதாசன்|ஜேசுதாசனின்]] மனைவி.
 
==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
[[File:Hepshi-Bai Jesudasan-Su-Ra(4).jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]

ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-ல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம். அவருடைய குடும்பமே கல்விப் பின்புலம் கொண்டது. அவருடைய தாத்தா இளங்கலை (B.A.) பட்டம் பெற்று மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தவர். பிறகு வேலையை விட்டுவிட்டு மத போதகராக ஆனார். அவருடைய அம்மாவின் பாட்டி எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தவர். அவரும் மதபோதகர். அவருடைய அப்பா வட பர்மாவில ஓர் அரசு பள்ளிக்கூடத்துல ஆசிரியராக வேலை பார்த்தார். ஹெப்சிபாவிற்கு ஒரு தங்கை உண்டு.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அப்போது டதி அம்மையாரின் பிரியத்திற்குரிய மாணவியாக இருந்தார். ஹெப்ஸிபா ஆங்கிலத்தில் பெரிய படைப்பாளியாக வரவேண்டும் என டதி அம்மையார் விரும்பியிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  

==தனி வாழ்க்கை==
==தனி வாழ்க்கை==
ஹெப்ஸிபா தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார். ஜேசுதாசன் தம்பதியினருக்கு நம்பி, தம்பி தங்கக்குமார் என்று இரண்டு மகன்களும் புவி என்று ஒரு மகளும் உண்டு. தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர்.

ஹெப்சிபா திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். திருவனந்தபுரம் மன்னர் குடும்பத்திற்கு ஆங்கிலம் கற்பித்தார். தீவிரமான மதப்பற்று கொண்ட ஹெப்சிபா தன் இறுதிக் காலத்தை மதச் சேவையில் கழித்தார்.

==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
[[File:Nay969.jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன் நூல்]]

Line 18: Line 16:

தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்று எழுதி இருக்கிறார். இது அவரது கணவர் ஜேசுதாசனின் துணையோடு எழுதப்பட்டது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது. நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.  

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது. விமர்சகர் சுந்தர ராமசாமி தமிழில் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களிலொன்றாக புத்தம்வீட்டை குறிப்பிட்டிருக்கிறார்.

Line 25: Line 22:

ஹெப்ஸிபா தன் கணவர் ஜேசுதாசனின் உதவியுடன் எழுதிய தமிழ்லக்கிய வரலாறு தமிழிலக்கியத்தைப் பற்றிய விமர்சன ரீதியான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைக்கிறது.  

== விருதுகள் ==
== விருதுகள் ==
* விளக்கு விருது (2002)
* விளக்கு விருது (2002)
==படைப்புகள்==
==படைப்புகள்==
======நாவல்கள்======
======நாவல்கள்======
Line 35: Line 30:
* அனாதை (1978)
* அனாதை (1978)
* மாநீ (1982)
* மாநீ (1982)
======ஆங்கில நூல்கள்======
======ஆங்கில நூல்கள்======
* Countdown from Solomon: The Tamils down the ages through their literature

Line 45: Line 39:
* Sky Lights (கவிதைகள்)
* Sky Lights (கவிதைகள்)
* en-Exercises (கட்டுரைகள்)
* en-Exercises (கட்டுரைகள்)
======சிறுவர் நூல்கள்======
======சிறுவர் நூல்கள்======
* Titbits for Tiny Tots
* Titbits for Tiny Tots
* Story Time Darlings
* Story Time Darlings
======மொழிபெயர்ப்புகள்======
======மொழிபெயர்ப்புகள்======
* Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)

======மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்======

* புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு
* புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு
* புத்தம்வீடு ஆங்கில மொழிபெயர்ப்பு - "Lissy’s Legacy"  

==உசாத்துணை==
==உசாத்துணை==
* [https://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html ஹெப்சிபா ஜேசுதாசன் பேட்டி]

Line 63: Line 53:
*[https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=632:2012-02-11-05-21-39&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19 அ.ராமசாமி ஹெப்ஸிபா ஜேசுதாசன் நாவல்கள் பற்றி]

*[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/152211-16-4.html ஹெப்ஸிபா நாவல்கள் இந்து]

== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
<references />
<references />
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]

Revision as of 09:06, 13 June 2022

To read the article in English: Hephzibah Jesudasan. ‎

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பிப்ரவரி 9, 2012) தமிழ் யதார்த்தவாத இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் புத்தம்வீடு என்ற நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் எழுதியவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் ஜேசுதாசனின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-ல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம். அவருடைய குடும்பமே கல்விப் பின்புலம் கொண்டது. அவருடைய தாத்தா இளங்கலை (B.A.) பட்டம் பெற்று மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தவர். பிறகு வேலையை விட்டுவிட்டு மத போதகராக ஆனார். அவருடைய அம்மாவின் பாட்டி எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தவர். அவரும் மதபோதகர். அவருடைய அப்பா வட பர்மாவில ஓர் அரசு பள்ளிக்கூடத்துல ஆசிரியராக வேலை பார்த்தார். ஹெப்சிபாவிற்கு ஒரு தங்கை உண்டு.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அப்போது டதி அம்மையாரின் பிரியத்திற்குரிய மாணவியாக இருந்தார். ஹெப்ஸிபா ஆங்கிலத்தில் பெரிய படைப்பாளியாக வரவேண்டும் என டதி அம்மையார் விரும்பியிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஹெப்ஸிபா தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார். ஜேசுதாசன் தம்பதியினருக்கு நம்பி, தம்பி தங்கக்குமார் என்று இரண்டு மகன்களும் புவி என்று ஒரு மகளும் உண்டு. தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர்.

ஹெப்சிபா திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். திருவனந்தபுரம் மன்னர் குடும்பத்திற்கு ஆங்கிலம் கற்பித்தார். தீவிரமான மதப்பற்று கொண்ட ஹெப்சிபா தன் இறுதிக் காலத்தை மதச் சேவையில் கழித்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஹெப்சிபா ஜேசுதாசன் நூல்

ஹெப்சிபா ஜேசுதாசனின் முதல் நாவல் புத்தம்வீடு (1964) இதை அவர் தன் கணவர் ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால் எழுதினார். இது நாடார் ஜாதியைச் சேர்ந்த லிஸி என்ற எளிய இளம்பெண்ணின் காதல் கதை. கண. முத்தையா நடத்திய தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிடப்பட்டது. அதன்பின் மாநீ, அனாதை, டாக்டர் செல்லப்பா ஆகிய நாவல்களை எழுதினார். ஆங்கிலத்தில் Grandma's Note book என்ற பேரில் ஆன்மிகக்குறிப்புகளை எழுதினார். மாநீ அவருடைய இளமைக்கால பர்மிய வாழ்க்கையைப் பற்றிய நாவல்.

தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்) ஆங்கிலத்தில் Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்று எழுதி இருக்கிறார். இது அவரது கணவர் ஜேசுதாசனின் துணையோடு எழுதப்பட்டது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது. நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இலக்கிய இடம்

ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது. விமர்சகர் சுந்தர ராமசாமி தமிழில் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களிலொன்றாக புத்தம்வீட்டை குறிப்பிட்டிருக்கிறார்.

விமர்சகர் ஜெயமோகன் வார்த்தைகளில்: ’எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது’.என்கிறார் ஜெயமோகன் பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில்[1] இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில்[2] இதைச் சேர்த்திருக்கிறார். ஹெப்ஸிபா ஜேசுதாசனின் டாக்டர் செல்லப்பா இயல்பான வாழ்க்கைச்சூழலில் ஓர் படித்த இளைஞனின் வாழ்க்கையை முன்வைப்பதன் வழியாக இருத்தலியல் வினாக்களை எழுப்பிய நாவல். தமிழின் முதல் இருத்தலியல் நாவல் என்று கருதப்படுகிறது

ஹெப்ஸிபா தன் கணவர் ஜேசுதாசனின் உதவியுடன் எழுதிய தமிழ்லக்கிய வரலாறு தமிழிலக்கியத்தைப் பற்றிய விமர்சன ரீதியான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைக்கிறது.

விருதுகள்

  • விளக்கு விருது (2002)

படைப்புகள்

நாவல்கள்
ஆங்கில நூல்கள்
  • Countdown from Solomon: The Tamils down the ages through their literature
    • Vol. 1 Caṅkam and the aftermath (1999)
    • Vol. 2 Bhakti, ethics and epics (1999)
    • Vol. 3 Kampan, 2001
    • Vol. 4 13th - 20th century A.D.
  • An early Sheaf (கவிதைகள்)
  • Sky Lights (கவிதைகள்)
  • en-Exercises (கட்டுரைகள்)
சிறுவர் நூல்கள்
  • Titbits for Tiny Tots
  • Story Time Darlings
மொழிபெயர்ப்புகள்
  • Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு
  • புத்தம்வீடு ஆங்கில மொழிபெயர்ப்பு - "Lissy’s Legacy"

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page