ஹெப்சிபா ஜேசுதாசன்: Difference between revisions

From Tamil Wiki
(First draft)
 
mNo edit summary
Line 1: Line 1:
ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பெப்ரவரி 9, 2012) புத்தம்வீடு என்ற முக்கியமான தமிழ் நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் ஜேசுதாசனின் மனைவி.
[[File:Hepsibhah jesudasan.jpg|thumb|ஹெப்சிபா ஜேசுதாசன்]]
ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பெப்ரவரி 9, 2012) புத்தம்வீடு என்ற முக்கியமான தமிழ் நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் [[ஜேசுதாசன்|ஜேசுதாசனின்]] மனைவி.

==வாழ்க்கைக்குறிப்பு==
==வாழ்க்கைக்குறிப்பு==

===பிறப்பு, இளமை===
===பிறப்பு, இளமை===
ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-இல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் பிறகு
ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-இல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
===தனி வாழ்க்கை===
===தனி வாழ்க்கை===
திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார்.

===குடும்பம்===
===குடும்பம்===
உடன் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர். இருவருக்கும் நடுவே ஆழ்ந்த பந்தம் இருந்தது. ஹெப்சிபா ஜேசுதாசன்-ஜேசுதாசன் இருவரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்று சுந்தர ராமசாமி கூறுகிறார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார்.
உடன் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர். இருவருக்கும் நடுவே ஆழ்ந்த பந்தம் இருந்தது. ஹெப்சிபா ஜேசுதாசன்-ஜேசுதாசன் இருவரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்று [[சுந்தர ராமசாமி]] கூறுகிறார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார்.

ஹெப்சிபா ஜேசுதாசனின் மகன் தம்பி தங்ககுமாரும் கல்லூரிப் பேராசிரியர். இவரைத் தவிரவும் ஒரு நம்பி என்று ஒரு மகனும் பூவி என்று ஒரு மகளும் உண்டு.

Line 58: Line 57:
ஹெப்சிபா ஜேசுதாசன் புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது.

விமர்சகர் ஜெயமோகன் வார்த்தைகளில்:
விமர்சகர் [[ஜெயமோகன்]] வார்த்தைகளில்:
  எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது.

ஜெயமோகன் [https://www.jeyamohan.in/84/ பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் எஸ். ராமகிருஷ்ணன் [https://www.sramakrishnan.com/நூறு-சிறந்த-நாவல்கள் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார்.
ஜெயமோகன் [https://www.jeyamohan.in/84/ பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] [https://www.sramakrishnan.com/நூறு-சிறந்த-நாவல்கள் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில்] இதைச் சேர்த்திருக்கிறார்.

==உசாத்துணை==
==உசாத்துணை==
* [https://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_05.html ஹெப்சிபா ஜேசுதாசன் பேட்டி]

* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4511&id1=84&issue=20180201 வேதசகாயகுமார் நினைவு கூர்கிறார்]

Revision as of 13:39, 24 January 2022

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பெப்ரவரி 9, 2012) புத்தம்வீடு என்ற முக்கியமான தமிழ் நாவலை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். ஆங்கிலப் பேராசிரியர். பேராசிரியர் ஜேசுதாசனின் மனைவி.

வாழ்க்கைக்குறிப்பு

பிறப்பு, இளமை

ஹெப்சிபா ஜேசுதாசன் 1925-இல் பர்மாவில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள புலிப்புனம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவருடைய குடும்பம் பர்மாவை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் குடியேறியது. நாகர்கோயில் டதி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார்.

குடும்பம்

உடன் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். ஜேசுதாசன் ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர். இருவருக்கும் நடுவே ஆழ்ந்த பந்தம் இருந்தது. ஹெப்சிபா ஜேசுதாசன்-ஜேசுதாசன் இருவரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்று சுந்தர ராமசாமி கூறுகிறார். ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக்கொணர்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால்தான் ஹெப்சிபா நாவல் எழுதத் தொடங்கினார்.

ஹெப்சிபா ஜேசுதாசனின் மகன் தம்பி தங்ககுமாரும் கல்லூரிப் பேராசிரியர். இவரைத் தவிரவும் ஒரு நம்பி என்று ஒரு மகனும் பூவி என்று ஒரு மகளும் உண்டு.

தீவிரமான மதப்பற்று கொண்ட ஹெப்சிபா தன் இறுதிக் காலத்தை மதச் சேவையில் கழித்தார்.

பங்களிப்பு

ஹெப்சிபா ஜேசுதாசனின் முதல் நாவல் புத்தம்வீடு (1964) இதை அவர் தன் கணவர் ஜேசுதாசன் அளித்த ஊக்கத்தினால் எழுதினார். இது நாடார்/சாணார் ஜாதியைச் சேர்ந்த லிஸி என்ற எளிய இளம்பெண்ணின் காதல் கதை. கண. முத்தையா நடத்திய தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிடப்பட்டது.

தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கம்பன், கம்பனுக்குப் பின்)ஆங்கிலத்தில் Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்று எழுதி இருக்கிறார். இது அவரது கணவர் ஜேசுதாசனின் துணையோடு எழுதப்பட்டது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட வரலாறு இது.

நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

படைப்புகள்

புதினங்கள்

  • புத்தம் வீடு (1964)
  • டாக்டர் செல்லப்பா (1967)
  • அனாதை (1978)
  • மானி (1982)

ஆங்கில நூல்கள்

  • Countdown from Solomon: The Tamils down the ages through their literature
    • Vol. 1 Caṅkam and the aftermath, 1999
    • Vol. 2 Bhakti, ethics and epics, 1999
    • Vol. 3 Kampan, 2001
    • Vol. 4 13th - 20th century A.D.
  • An early Sheaf (கவிதைகள்)
  • Sky Lights (கவிதைகள்)
  • en-Exercises (கட்டுரைகள்)

சிறுவர் நூல்கள்

  • Titbits for Tinytots
  • Story Time Darlings

மொழிபெயர்ப்புகள்

  • Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

  • புத்தம்வீடு மலையாள மொழிபெயர்ப்பு
  • புத்தம்வீடு ஆங்கில மொழிபெயர்ப்பு - "Lissy’s Legacy"

விருதுகள்

  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்வ அளித்த விளக்கு விருது (2002)

இலக்கிய முக்கியத்துவம்

ஹெப்சிபா ஜேசுதாசன் புத்தம்வீடு நாவல் தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று. நாடார் ஜாதியில் பிறந்த லிஸி பல எதிர்ப்புகளை மீறி தன் காதலில் வெல்லும் நேரடியான கதை. கதையின் எளிமையும் நம்பகத்தன்மையும் இந்த நாவலை உயர்த்துகிறது. பிராமண ஜாதிப் பின்புலத்தில் படைப்புகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிராமத்து பனையேறும் நாடார் ஜாதி வாழ்க்கையில் பொதுக்கல்வி, நவீனமயமாக்கல் ஏற்படுத்தும் மாறுபாடுகளை அந்த நாவல் துல்லியமாக சித்தரித்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட புனைவுகள் நிராகரிக்கப்பட்ட காலத்தில் புத்தம்வீடு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்தது. உண்மையான வாழ்வை முன்வைத்தது.

விமர்சகர் ஜெயமோகன் வார்த்தைகளில்:

எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல் கதை ஒன்றை கூறிய இந்நாவல், தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பாற்பட்டு நின்று தன்னைத் தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலை நாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை’ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது.

ஜெயமோகன் பொ.யு. 2000-த்துக்கு முற்பட்ட சிறந்த தமிழ் நாவல்களில் பட்டியலில் இதைச் சேர்த்திருக்கிறார். விமர்சகர் எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் இதைச் சேர்த்திருக்கிறார்.

உசாத்துணை