under review

வே.நி.சூர்யா

From Tamil Wiki
Revision as of 06:56, 17 April 2024 by Jeyamohan (talk | contribs) (→‎இணைப்புகள்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வே.நி. சூர்யா

வே.நி. சூர்யா (பிறப்பு: அக்டோபர் 03, 1996) தமிழில் நவீனக் கவிதைகள் எழுதிவரும் கவிஞர். கவிதை மொழியாக்கம், கவிதை விமர்சனம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

வே.நி.சூர்யா நாகர்கோவில் அருகே பறக்கை என்னும் ஊரில் அக்டோபர் 03, 1996-ல் ஆர்.வேலாயுதம், எம்.நிர்மலா இணையருக்குப் பிறந்தார். தொடக்கப்பள்ளி பறக்கையில் பயின்றார். உயர்நிலைக்கல்வி வரை பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வி புனித யோவான் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

வே.நி.சூர்யாவின் முதல் படைப்பு 2014-ல் எழுதிய 'பயணம்' என்னும் சிறுகதை. 'பாலையின் நகர்வு’ என்ற கவிதை 2016-ல் கல்குதிரை சிற்றிதழில் வெளிவந்தது. வே.நி.சூர்யாவின் முதல் கவிதைத்தொகுப்பு 'கரப்பானியம்' 2019-ல் வெளியானது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் நகுலன் மற்றும் அபி என்று குறிப்பிடுகிறார்.

"கவிதையை விட்டால் எனது அனுபவங்களைச் சொல்லவும் எனக்கு வேறு தீர்க்கமான உபாயங்கள் இருந்ததில்லை. மேலும், மிதப்பதைவிட அமிழ்வதே எனது மனநிலையாக இருக்கிறது" என்று தன் படைப்புக்கான மனநிலையைக் குறிப்பிடுகிறார்[1].

விருதுகள்

இலக்கிய இடம்

வே.நி. சூர்யா தமிழில் அகவயமான படிமங்களுடன் இருத்தலியல் தேடல்களை எழுதும் கவிஞர். ஐரோப்பியக் கவிதைகளை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார். அக்கவிதைகளின் படிமங்களுடனான உரையாடலாக அவருடைய கவிதையின் படிமங்கள் அமைகின்றன.

"தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவரது கவிதை மொழி மிகவும் புதியது. ஐரோப்பியக் கவிதைகளில் காணப்படுவது போன்று எளிய தோற்றத்தில் அபூர்வமான கவித்துவ மொழிதலைக் கொண்டிருக்கின்றன" என்று எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்[2].

நூல் பட்டியல்

கவிதைத் தொகுதி
  • கரப்பானியம் (2019)
  • அந்தியில் திகழ்வது (2022)

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page