under review

ரமணி சந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
m (Reverted edits by Tambot1 (talk) to last revision by Logamadevi)
Tags: Rollback Reverted
(Reviewed by Je)
Tag: Manual revert
Line 130: Line 130:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{first review completed}}
<references />{{finalised}}

Revision as of 01:18, 2 May 2022

ரமணி சந்திரன்

ரமணி சந்திரன் (ஜூலை 10, 1938) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். பெண்களின் வாழ்க்கையைப் பேசுபொருளாகக் கொண்ட இக்கதைகள் பெண்களை வாசகிகளாக எதிர்நோக்கி எழுதப்படுபவை. தமிழில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.

ரமணி சந்திரன் குழந்தையுடன்

பிறப்பு, கல்வி

ரமணி சந்திரன் தாயுடன்

ரமணி சந்திரன் ஜூலை 10, 1938- ல் திருச்செந்தூரில் தினத்தந்தி உரிமையாளர்களான ஆதித்தன் குடும்பத்தில் கணேசன்-கமல சுந்தர தேவி இணையருக்குப் பிறந்தார். கமலசுந்தர தேவி தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் கடைசித் தங்கை. பெரிய கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தார். சரவண ஐயர் திண்ணைப் பள்ளியிலும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியிலும் பயின்றார். திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு உயர்நிலைப் பள்ளி இருபாலரும் படிக்கும் இடமென்பதனால் ஆரம்பப்பள்ளிக்குப்பின் 1951-ல் படிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் அம்மாவுக்கு உடல்நலச் சிக்கல் ஏற்பட்டு திருநெல்வேலியில் குடியேறியபோது சாரா டக்கர் பெண்கள் பள்ளியில் சேர்ந்து பயின்றார். புகுமுக வகுப்பை முடித்து சாரா டக்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். திருமணமானதனால் படிப்பை முடிக்கவில்லை

ரமணி சந்திரன் பாலசந்திரனுடன்

தனிவாழ்க்கை

1958-ல் கல்லூரி படிப்பின்போதே ரமணி தினத்தந்தி திருச்சி பதிப்பில் பணியாற்றியவரும், திருச்செந்தூரைச் சேர்ந்தவருமான பாலசந்திரனை மணந்துகொண்டார் . திருமணத்துக்கு பிறகு பாலசந்திரன் தஞ்சாவூருக்கு மாற்றலானபோது அங்கே மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். இவருக்கு அரவிந்த் என ஒரு மகன். தொழிலதிபராக இருக்கிறார். இவர் மகள் அகிலா கிரிராஜ் கதைகள் எழுதி வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

ரமணி சந்திரன்

ரமணி சந்திரனின் சகோதரியின் கணவர் ராணி வாராந்தரி இதழின் ஆசிரியர் அ.மா.சாமி ரமணி சந்திரன் ராணி இதழில் ஒரு போட்டிக்கு கதை எழுதி பரிசு பெற்றார். அதன்பின் ராணி இதழில் தொடர்ச்சியாக கதைகளும் தொடர்கதைகளும் எழுதினார். ராணி இதழ் உருவாக்கியிருந்த எளிமையான சொற்றொடர்களும், குறைவான சொற்களும் கொண்ட நடையை தானும் பயின்றார். அந்த நடை கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, குறைவாக வாசிக்கும் பெண்களுக்கு எளிதாக வாசிக்கும்படி அமைக்கப்பட்டது. ஆகவே அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனார்.

இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’ 1970-ல் வெளிவந்தது. ரமணி சந்திரன் இருநூறு நாவல்கள் எழுதியிருக்கலாம் என்று சி.சரவணக்கார்த்திகேயன் சொல்கிறார்[1]. காமன்ஃபோக்ஸ் பதிப்பகப் பக்கம் 183- நாவல்களை பட்டியலிடுகிறது[2]. பெண்களின் வாழ்க்கைச்சிக்கல்களையே ரமணி சந்திரன் எழுதினார். பெரும்பாலும் சிறுநகர்களைச் சேர்ந்த உயர்நடுத்தர, உயர்வர்க்க குடும்பச்சூழலை கொண்ட கதைகள் அவை

விருதுகள்

  • தமிழ்நாடு அரசு விருது (வைரமலர்)
  • அனந்தாச்சியார் அறக்கட்டளை விருது (நாள் நல்ல நாள்)
  • தினத்தந்தி விருது (வண்ணவிழி பார்வையிலே)

இலக்கிய இடம்

ரமணி சந்திரனின் நாவல்கள் பொதுவாசிப்புக்குரியவை, பெண்களை இலக்காக்கியவை. ஆகவே உயர்நடுத்தர வாழ்க்கைச் சூழலில், குடும்பச்சிக்கல்களையும் உறவுச்சிக்கல்களையும் பேசுபவை. மில்ஸ் ஆண்ட் பூன் வகை கதைகளின் தாக்கம் உண்டு. தமிழகத்தின் பார்பரா கார்ட்லண்ட் என விமர்சகர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பாலியலை நேரடியாக எழுதுவதில்லை என்றாலும் எல்லா கதைகளும் பாலுறவு சார்ந்த உறவுச்சிக்கல்கள் மற்றும் உளநெருக்கடிகள் சார்ந்தவையே. தமிழில் லக்ஷ்மி உருவாக்கிய குடும்ப மெல்லுணர்வுக் கதைகளின் அடுத்த கட்ட எழுத்தாளர் ரமணி சந்திரன். அவரை தொடர்ந்து முத்துலட்சுமி ராகவன் போன்றவர்கள் எழுதவந்தனர்.

நாவல்கள்

  1. வாழ்வு என் பக்கம்
  2. ஆசை ஆசை ஆசை
  3. அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
  4. அடிவாழை
  5. அமுதம் விளையும்
  6. அன்பின் தன்மையை அறிந்த பின்னே
  7. அதற்கொரு நேரமுண்டு
  8. அவனும் அவளும்
  9. அழகு மயில் ஆடும்
  10. சந்தினி
  11. எல்லாம் உனக்காக
  12. என் உயிர் நீதானே
  13. எனது சிந்தனை மயங்குதடி
  14. என்னை யாரென்று எண்ணி எண்ணி
  15. என்னுளே நிறைந்தவளே
  16. கான மழை நீ எனக்கு
  17. இடைவெளி அதிகமில்லை
  18. இனி எல்லாம் நீ அல்லவா
  19. இறைவன் கொடுத்த வரம்
  20. இருளுக்கு பின்வரும் ஜோதி
  21. இது ஒரு உதயம்
  22. காதல் கொண்ட மனது
  23. காதல் என்னும் சோலையிலே
  24. காக்கும் இமை நான் உனக்கு
  25. கல்யாணத்தின் கதை
  26. கண்ணிலே இருப்பதென்ன
  27. கண்ணால் பார்த்த வேளை
  28. கண்ணன் மனம் என்னவோ
  29. கண்ணே கண்மனியே
  30. கண்ணின் மணி போன்றவளே
  31. கண்ணும் கண்ணும் கலந்து
  32. காத்திருக்கிறேன் ராஜகுமாரா
  33. காற்று வெளியிடை கண்ணம்மா
  34. காவியமோ ஓவியமோ
  35. கிழக்கு வெளுத்ததம்மா
  36. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
  37. லாவண்யா
  38. மானே மானே மானே
  39. மதுமதி
  40. மைவிழி மயக்கம்
  41. மாலை மயங்குகின்ற நேரம்
  42. மயங்குகிறாள் ஒரு மாது
  43. மெல்ல திறந்தது கதவு
  44. நாள் நல்ல நாள்
  45. நான் உன்னை நீங்க மாட்டேன்
  46. நான் என்பதும் நீ என்பதும்
  47. நந்தினி
  48. நாத சுர ஓசையிலே
  49. நெஞ்சே நீ வாழ்க
  50. நெஞ்சோடு நெஞ்சம்
  51. நேச நதி கரையில்
  52. நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
  53. நிலா காயும் நேரம்
  54. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
  55. நின்னையே ரதி என்று
  56. ஒன்று பட்ட உள்ளங்கள்
  57. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ
  58. ஒரு சின்ன ரகசியம்
  59. பால் நிலா
  60. பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
  61. பாலை பசுங்கிளியே
  62. பார்க்கும் விழி நான் உனக்கு
  63. பார்த்த இடத்தில் எல்லாம்
  64. பொன் மானை தேடி
  65. பொங்கட்டும் இன்ப இரவு
  66. பூங்காற்று
  67. பிரிய மனம் கூடுதில்லையே
  68. புன்னகையில் புது உலகம்
  69. சிவப்பு ரோஜா
  70. சொந்தம் என்னாளும் தொடர்கதைதான்
  71. சுகம் தரும் சொந்தங்களே
  72. தண்ணீர் தணல் போல் தெரியும்
  73. தந்துவிட்டேன் என்னை
  74. தவம் பண்ணிடவில்லையடி
  75. தென்றல்வீசி வர வேண்டும்
  76. உன் முகம் கண்டேனடி
  77. உறங்காத கண்கள்
  78. வாணியை சரண் அடைந்தேன்
  79. வாழும் முறைமையடி
  80. வாரிசு
  81. வைர மலர்
  82. வலை ஓசை
  83. வல்லமை தந்துவிடு
  84. வந்து போகும் மேகம்
  85. வீடு வந்த வெண்ணிலவு
  86. வெண்மையில் எத்தனை நிறங்கள்
  87. வெண்ணிலவு சுடுவதென்ன
  88. விடியலை தேடும் பூபாளம்
  89. யாருக்கு மாலை
  90. ஏற்றம் புரிய வந்தாய்
  91. பொன் மகள் வந்தாள்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page