under review

பொன்னி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 6: Line 6:
பொன்னி' இதழ் புதுக்கோட்டையிலிருந்து 1947-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெளிவரத் தொடங்கியது. ஆசிரியர் [[முருகு சுப்ரமணியன்]]. பதிப்பாளர் அரு.பெரியண்ணன். முருகு சுப்ரமணியன் புதுக்கோட்டையை அடுத்த கோனாப்பட்டு என்னும் ஊரைச்சேர்ந்தவர். [[அரு.பெரியண்ணன்]] ஆத்தங்குடி என்னும் ஊரைச்சேர்ந்தவர். இருவரும் உறவினர்கள். பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் இந்த இதழை தொடங்கினர்.

’பாரதிதாசன் கவிதைகளையும் அவர் இலக்கியச் சிறப்பையும் தமிழுலகத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்ப முதலே பாவேந்தரின் கவிதையை ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டு வந்தோம்’ என்று அவ்விதழின் ஆசிரியர்களில் ஒருவரான முருகு சுப்பிரமணியன் பொன்னி இதழில் வெளிவந்த கவிதைகளை 1979ல் பாரதிதாசன் பரம்பரை என்ற பெயரில் தொகுத்தபோது எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுகிறார். நாரா. நாச்சியப்பன், மு. அண்ணாமலை ஆகிய இருவரு முருகு சுப்ரமணியனுக்கு உதவினர்.  
’பாரதிதாசன் கவிதைகளையும் அவர் இலக்கியச் சிறப்பையும் தமிழுலகத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்ப முதலே பாவேந்தரின் கவிதையை ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டு வந்தோம்’ என்று அவ்விதழின் ஆசிரியர்களில் ஒருவரான முருகு சுப்பிரமணியன் பொன்னி இதழில் வெளிவந்த கவிதைகளை 1979-ல் பாரதிதாசன் பரம்பரை என்ற பெயரில் தொகுத்தபோது எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுகிறார். நாரா. நாச்சியப்பன், மு. அண்ணாமலை ஆகிய இருவரு முருகு சுப்ரமணியனுக்கு உதவினர்.  
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
பொன்னி இதழின்ன் முதல் இரண்டு ஆண்டுகளில் இதழ்தோறும் பாரதிதாசன் படைத்த புதிய பாடல் ஒன்று தொடர்ந்து இடம் பெற்று வந்தது.
பொன்னி இதழின்ன் முதல் இரண்டு ஆண்டுகளில் இதழ்தோறும் பாரதிதாசன் படைத்த புதிய பாடல் ஒன்று தொடர்ந்து இடம் பெற்று வந்தது.
Line 14: Line 14:
பொன்னி நிறுவனத்தில் இருந்து ‘முத்து' என்ற சிறுவர் இதழை நாரா.நாச்சியப்பன் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். அதில் பாரதிச்தாசன் திருக்குறள் கருத்துக்களை இதழுக்கொரு குறள் என்ற முறையில் சினிமாக் காட்சி போல நாடகமாக எழுதினார். 'திருக்குறள் சினிமா என்ற தலைப்பில் மூன்று இதழ் களில் தொடர்ந்து எழுதினார். பிறகு முத்து வெளிவருவது நின்றுவிட்டது

== முடிவு ==
== முடிவு ==
பொன்னி இதழ் இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருந்துவெளிவந்தது. மொத்தம் ஏழு ஆண்டுகளே இதழ் நடந்தது என முருகு சுப்ரமணியம் சொல்கிறார். 1953 ல் முருகு சுப்ரமணியம் மலேசியாவுக்கு இதழாளராக பணியாற்றும் பொருட்டு பயணமானார். 1954 வரை அரு.பெரியண்ணன் இதழை நடத்தினார். 1954ல் இதழ் நின்றது.
பொன்னி இதழ் இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருந்துவெளிவந்தது. மொத்தம் ஏழு ஆண்டுகளே இதழ் நடந்தது என மருகு சுப்ரமணியம் சொல்கிறார். 1953-ல் முருகு சுப்ரமணியம் மலேசியாவுக்கு இதழாளராக பணியாற்றும் பொருட்டு பயணமானார். 1954 வரை அரு.பெரியண்ணன் இதழை நடத்தினார். 1954-ல் இதழ் நின்றது.
[[File:பொன்னி 4.jpg|thumb|பொன்னி ]]
[[File:பொன்னி 4.jpg|thumb|பொன்னி ]]
[[File:பொன்னி 6.jpg|thumb|பொன்னி ]]
[[File:பொன்னி 6.jpg|thumb|பொன்னி ]]
Line 78: Line 78:
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.pdf/1 நாரா நாச்சியப்பன். தேடிவந்த குயில், இணையநூலகம்]

*[https://koottanchoru.wordpress.com/tag/murugu-subramanyam/ பொன்னி இதழும் கவிஞர்களும் கூட்டாஞ்சோறு இணையப்பக்கம்]
*[https://koottanchoru.wordpress.com/tag/murugu-subramanyam/ பொன்னி இதழும் கவிஞர்களும் கூட்டாஞ்சோறு இணையப்பக்கம்]
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:35, 19 June 2022

பொன்னி
பொன்னி இதழ்
பாரதிதாசன் பரம்பரை, பொன்னி

பொன்னி (1947-1954 ) புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த கவிதைக்கான இதழ். பாரதிதாசனின் கவிதைகளை முதன்மையாக வெளியிட்டது. பாரதிதாசனின் புகழ்பரப்புவதை இலக்காகக் கொண்டிருந்தது. பாரதிதாசன் பரம்பரை என கவிஞர்களின் பட்டியலை வெளியிட்டு கவிதைகளை பிரசுரித்து வந்தது.

இதழ் வரலாறு

பொன்னி' இதழ் புதுக்கோட்டையிலிருந்து 1947-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெளிவரத் தொடங்கியது. ஆசிரியர் முருகு சுப்ரமணியன். பதிப்பாளர் அரு.பெரியண்ணன். முருகு சுப்ரமணியன் புதுக்கோட்டையை அடுத்த கோனாப்பட்டு என்னும் ஊரைச்சேர்ந்தவர். அரு.பெரியண்ணன் ஆத்தங்குடி என்னும் ஊரைச்சேர்ந்தவர். இருவரும் உறவினர்கள். பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் இந்த இதழை தொடங்கினர்.

’பாரதிதாசன் கவிதைகளையும் அவர் இலக்கியச் சிறப்பையும் தமிழுலகத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்ப முதலே பாவேந்தரின் கவிதையை ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டு வந்தோம்’ என்று அவ்விதழின் ஆசிரியர்களில் ஒருவரான முருகு சுப்பிரமணியன் பொன்னி இதழில் வெளிவந்த கவிதைகளை 1979-ல் பாரதிதாசன் பரம்பரை என்ற பெயரில் தொகுத்தபோது எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுகிறார். நாரா. நாச்சியப்பன், மு. அண்ணாமலை ஆகிய இருவரு முருகு சுப்ரமணியனுக்கு உதவினர்.

உள்ளடக்கம்

பொன்னி இதழின்ன் முதல் இரண்டு ஆண்டுகளில் இதழ்தோறும் பாரதிதாசன் படைத்த புதிய பாடல் ஒன்று தொடர்ந்து இடம் பெற்று வந்தது.

பொன்னி இதழ் திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புக்களை முதன்மையாக வெளியிட்டது. ஈ.வே.ராமசாமிப் பெரியார், சி.என். அண்ணாத்துரை, மு.கருணாநிதி , திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், மு. வரதராசன், அகிலன், கண்ணதாசன், க.அன்பழகன், மதியழகன், சி.பி.சிற்றரசு , கா.அப்பாத்துரை, அ. சிதம்பரநாதன் , கமலா விருத்தாசலம் போன்று பலவகையான எழுத்தாளர்கள் பொன்னி இதழில் எழுதினர்.

சிறுவர் இதழ்

பொன்னி நிறுவனத்தில் இருந்து ‘முத்து' என்ற சிறுவர் இதழை நாரா.நாச்சியப்பன் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். அதில் பாரதிச்தாசன் திருக்குறள் கருத்துக்களை இதழுக்கொரு குறள் என்ற முறையில் சினிமாக் காட்சி போல நாடகமாக எழுதினார். 'திருக்குறள் சினிமா என்ற தலைப்பில் மூன்று இதழ் களில் தொடர்ந்து எழுதினார். பிறகு முத்து வெளிவருவது நின்றுவிட்டது

முடிவு

பொன்னி இதழ் இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருந்துவெளிவந்தது. மொத்தம் ஏழு ஆண்டுகளே இதழ் நடந்தது என மருகு சுப்ரமணியம் சொல்கிறார். 1953-ல் முருகு சுப்ரமணியம் மலேசியாவுக்கு இதழாளராக பணியாற்றும் பொருட்டு பயணமானார். 1954 வரை அரு.பெரியண்ணன் இதழை நடத்தினார். 1954-ல் இதழ் நின்றது.

பொன்னி
பொன்னி

பாரதிதாசன் பரம்பரை

பொன்னியில் வெளிவந்த பாரதிதாசன் பரம்பரை கவிதைகளை மு. இளங்கோவன் தொகுத்துள்ளார். ’பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் பொன்னி இலக்கிய இதழ் ஒரு தொடரை 1947 பிப்ரவரி முதல்1949 அக்டோர் 25 வரை வெளியிட்டது. அந்தத் தொடரில் இடம்பெற்ற பாவலர்களை என் முனைவர் பட்ட ஆய்வில் அறிமுகம் செய்து, அவர்களின் படைப்புகளை ஆய்வுசெய்து வெளியிட்டேன்’ என்று மு.இளங்கோவன் சொல்கிறார். அவர் அளிக்கும் பட்டியல்

  • 1.அண்ணாமலை. மு 1947, பிப்ரவரி
  • 2.நாச்சியப்பன். நாரா, 1947,மார்ச்சு
  • 3.சுரதா 1947,ஏப்ரல்
  • 4.புத்தனேரி ரா.சுப்பிரமணியன் 1947, மே
  • 5.முத்தையா, இராம.நாக, 1947,சூன்
  • 6.முடியரசன் 1947, சூலை
  • 7.சேதுராமன், இராம.வே1947,ஆகத்து
  • 8.வாணிதாசன் 1947,செப்டம்பர்
  • 9.இராமசாமி, சி. 1947, அக்டோபர்
  • 10.பழனியப்பன், சாமி. 1947, நவம்பர்
  • 11.இராமநாதன், அண 1947,டிசம்பர்
  • 12.கோவை இளஞ்சேரன் 1947,சனவரி
  • 13.தமிழரசன்(மாணிக்கம்,சி) 1948, பிப்ரவரி
  • 14.தேவர் கே.டி 1948,மார்ச்சு
  • 15.நமச்சிவாயம், நா.கி 1948,மே
  • 16.குழூத்தலைவன்(இரா.கணபதி),1948, மே
  • 17.திரவியம்,கு (ரவி), 1948,சூன்
  • 18.வழித்துணைராமன்,சு. 1948, சூலை
  • 19.ரங்கதுரைவேலன், 1948,சூலை
  • 20.குலோத்துங்கன்,வா.செ. 1948,ஆகத்து,1
  • 21.கிருஷ்ணசாமி,டிகே. 1948,ஆகத்து 15
  • 22.குருசாமி,வெ 1948,செப்டம்பர் 1
  • 23.சண்முகம்.வே.1948, செப்டம்பர் 15
  • 24.நாகப்பன்,பெ. 1948, அக்டோபர்,10
  • 25.சுந்தரராசன்.தண. 1948, அக்டோபர்,30
  • 26.சிவனடியான்.பெரி 1948,நவம்பர் 10,
  • 27.சிவப்பிரகாசம்,எஸ், 1948,நவம்பர் 25
  • 28.சீனிவாசன் சி.அ. 1948,டிசம்பர் 10
  • 29.ரெங்கநாதன் மு. 1948,டிசம்பர் 25
  • 30.பொன்னையா,ஜே.எஸ். 1949, சனவரி 25
  • 31.சுந்தரம்,கதி. 1949,பிப்ரவரி10
  • 32.மணி.எம்.எஸ். 1949,பிப்ரவரி 25
  • 33.கணேசன், நா 1949,மார்ச்சு 10
  • 34.அரசமணி. தி 1949,மார்ச்சு 25
  • 35.சண்முகசுந்தரம், ப. 1949,ஏப்ரல் 10
  • 36.பரமசிவன், க. 1949,ஏப்ரல் 25
  • 37.மாவண்ணா தேவராசன் 1949,மே,10
  • 38.அண்ணாமலை, வே. 1949மே,25
  • 39.குமாரசாமி, மா 1948,சூன்10
  • 40.முத்துசாமி, ப. 1949,சூன் 25
  • 41.ஷரிப் 1949,சூலை 10
  • 42.சுப்பு ஆறுமுகம் 1949,சூலை 25
  • 43.திருநாவுக்கரசு, சி. 1949,ஆகத்து 10
  • 44.சீத்தாராமன்,ச.(சீராளன்) 1949,ஆகத்து 25
  • 45.ஜெயராமன் தெ. 1949, செப்டம்பர் 10
  • 46.மாணிக்கவாசகன், ஞா 1949,செப்டம்பர் 25
  • 47.மனோகரன், கி. 1949, அக்டோபர் 10
  • 48.இராமநாதன், எஸ்.எம். 1949,அக்டோபர் 25

இலக்கிய இடம்

பொன்னி இதழ் பாரதிதாசன் கவிதைகளுக்காகவும் அதில் வெளிவந்த பாரதிதாசன் பரம்பரையினரின் கவிதைகளுக்காகவும் அறியப்படுகிறது. கவிஞர் சுரதா பாரதிதாசன் பரம்பரை என்னும் தொகைநூலை பொன்னி இதழில் வெளியான கவிதைகளைக் கொண்டு தொகுத்துள்ளார். மு.இளங்கோவன் பொன்னி இதழ்களின் கட்டுரைகள், கவிதைகளை ஆய்வு செய்துள்ளார். பொன்னி இதழ் திராவிட இயக்கக் கருத்துக்களை முன்னிறுத்தும் இலக்கிய இதழாக விளங்கியது

உசாத்துணை

✅Finalised Page