under review

பொதுக்கயத்துக் கீரந்தை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(12 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
பொதுக்கயத்துக் கீரந்தை, [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்க காலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான [[குறுந்தொகை|குறுந்தொகையில்]] இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
பொதுக்கயத்துக் கீரந்தை, [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்க காலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான [[குறுந்தொகை|குறுந்தொகையில்]] இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பொதுக்கயத்துக் கீரந்தை என்பதில் கீரந்தை என்பது இவரது இயற்பெயர் ஆகும். கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர். இன்றும் பெரிய குளம், தாமரைக் குளம் என்று ஊர்களின் பெயர் வழங்குதலை ஒப்பிட்டு நோக்கலாம்.
பொதுக்கயத்துக் கீரந்தை என்பதில் கீரந்தை என்பது இவரது இயற்பெயர். கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பொதுக்கயத்துக் கீரந்தை இயற்றிய பாடலாக சங்கத் தொகை நூலான குறுந்தொகையின் 337 - வது பாடல் இடம் பெற்றுள்ளது.
பொதுக்கயத்துக் கீரந்தை இயற்றிய பாடலாக சங்கத் தொகை நூலான [[குறுந்தொகை]]யின் 337 - வது பாடல் இடம் பெற்றுள்ளது.
 
== பாடலால் அறியவரும் செய்திகள் ==
== பாடலால் அறியவரும் செய்திகள் ==
 
தலைவியைக் கண்டு தலைவன் காதலுற்றான். அவளை மீண்டும் சந்தித்து அவளோடு பழக விரும்புகிறான். தலைவியைச் சந்திப்பதற்குத் தோழியின் உதவியை நாடிவந்து, அவளைப் பலமுறை பணிவோடு வேண்டுகிறான்.  ”அவள் மிகவும் இளையவள். நீ அவளைக் காதலிப்பது முறையன்று.” என்று கூறித் தோழி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவன், “ நீ கூறுவதுபோல், அவள் மிகவும் இளையவளாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழகால் என்னை வருத்துகிறாள்.” என்று கூறுகிறான்.
===== குறுந்தொகை 337 =====
 
* குறிஞ்சித்திணை, தலைவன் கூற்று
* தோழியை இரந்து பின் நின்ற தலைவன் தனது குறை அறியக் கூறியது
* தலைவிக்கு முலைகள் அரும்பின, தலையில் கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன, செறிந்த வரிசையாகிய வெண்பல்லும் முதன்முறை விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின, தேமலும் சில வெளிப்பட்டன. அவளின் அழகை அவள் அறியவில்லை. ஆனால் அவ்வழகு என்னை வருத்தியது எனத் தலைவன் கூறுகிறான்
 
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
===== குறுந்தொகை 337 =====
===== குறுந்தொகை 337 =====
 
[[குறிஞ்சித் திணை|குறிஞ்சித்திணை]], தலைவன் கூற்று                தோழியை இரந்து பின் நின்ற தலைவன் தனது குறை அறியக் கூறியது<poem>
<poem>
 
முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.
பெருமுது செல்வ ரொருமட மகளே.
</poem>
</poem>
 
(தலைவியின் முலைகள் அரும்புகளைப் போல் அரும்பின; தலையில் நிறைந்துள்ள  மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன; நெருக்கமாகவும் வரிசையாகவும் உள்ள வெண்மையான பற்கள், முறையாக விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில தோன்றின.  அவள் என்னை வருத்தும் அழகுடைய பருவத்தினள் என்பதை நான் அறிவேன்; அவள் அதனை அறியாள்.  பெரிய பழமையான செல்வந்தருடைய ஒப்பற்ற இளமை பொருந்திய  தலைவியாகிய ஒரே மகள்,  எத்தன்மையை உடையவள் ஆவாளோ? (எப்படிப்பட்டவளோ?))
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
* [https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்]  
* [https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்]  
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/index.html எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/index.html எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 08:19, 23 September 2023

பொதுக்கயத்துக் கீரந்தை, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொதுக்கயத்துக் கீரந்தை என்பதில் கீரந்தை என்பது இவரது இயற்பெயர். கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

பொதுக்கயத்துக் கீரந்தை இயற்றிய பாடலாக சங்கத் தொகை நூலான குறுந்தொகையின் 337 - வது பாடல் இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

தலைவியைக் கண்டு தலைவன் காதலுற்றான். அவளை மீண்டும் சந்தித்து அவளோடு பழக விரும்புகிறான். தலைவியைச் சந்திப்பதற்குத் தோழியின் உதவியை நாடிவந்து, அவளைப் பலமுறை பணிவோடு வேண்டுகிறான். ”அவள் மிகவும் இளையவள். நீ அவளைக் காதலிப்பது முறையன்று.” என்று கூறித் தோழி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவன், “ நீ கூறுவதுபோல், அவள் மிகவும் இளையவளாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழகால் என்னை வருத்துகிறாள்.” என்று கூறுகிறான்.

பாடல் நடை

குறுந்தொகை 337

குறிஞ்சித்திணை, தலைவன் கூற்று தோழியை இரந்து பின் நின்ற தலைவன் தனது குறை அறியக் கூறியது

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.

(தலைவியின் முலைகள் அரும்புகளைப் போல் அரும்பின; தலையில் நிறைந்துள்ள மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன; நெருக்கமாகவும் வரிசையாகவும் உள்ள வெண்மையான பற்கள், முறையாக விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில தோன்றின. அவள் என்னை வருத்தும் அழகுடைய பருவத்தினள் என்பதை நான் அறிவேன்; அவள் அதனை அறியாள். பெரிய பழமையான செல்வந்தருடைய ஒப்பற்ற இளமை பொருந்திய தலைவியாகிய ஒரே மகள், எத்தன்மையை உடையவள் ஆவாளோ? (எப்படிப்பட்டவளோ?))

உசாத்துணை

✅Finalised Page