being created

பேயாழ்வார்

From Tamil Wiki
Revision as of 02:06, 6 September 2022 by Tamizhkalai (talk | contribs)

பேயாழ்வார் வைணவத்தின் பன்னிருஆழ்வார்களிலும் முதலாழ்வார் மூவரிலும் மூன்றாமவர். திவ்யப் பிரபந்தத்திலுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர். முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர்.

பிறப்பு

சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மயிலாப்பூரில் (ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் அருகில்) ஓர் கிணற்றில் செவ்வல்லிமலரின் மேல் அவதரித்தார். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் பெருமாளின் வாளின் அம்சமாகக் கருதப்படுகிறார். பொ. யு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய இளமைப் பருவம் பற்றிய செய்திகள் அறியக் கிடைப்பதில்லை.

பெயர்க்காரணம்

திருமாலிடம் கொண்ட பக்தியினாலுன்மத்தம் பிடித்தவர் போல, தன்னை மறந்து கண்கள் சுழலும்படி விழுந்தும், சிரித்தும், தொழுதும், வந்ததால் பேயாழ்வார் என்று பெயர் பெற்றார்.

திருக்கோயிலூரில் சந்திப்பு, இரண்டாம் அந்தாதி இயற்றல்editedit source

(பார்க்க: முதலாழ்வார்கள்- திருக்கோயிலூரில் சந்திப்பு)

பூதத்தாழ்வார் திருக்கோயிலூருக்கு உலகளந்த பெருமாளை தரிசிக்கச் சென்று, மழைக்கு ஓர் இடைகழியில் ஒதுங்கியபோது அங்கு வந்த பூதத்தாழ்வாருடனும், பேயாழ்வாருடனும் சந்திப்பு எற்பட்டது. மூவருடன் நான்காவதாக ஒருவர் நெருக்கி நிற்பதையுணர்ந்து அவர் யார் எனப் பார்க்க வேண்டி, பொய்கையாழ்வார் 'வையம் தகழியா' எனத் தொடங்கி முதல் திருவந்தாதியைப் பாடினார். பூதத்தாழ்வார் அவரைத் தொடர்ந்து 'அன்பே தகளியா' அனத் தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் பாடினார். பேயாழ்வார் முதல் இரு ஆழ்வார்களின் பாடல்களால் தோன்றிய விளக்கின் ஒளியில் உலகளந்த பெருமாளைக் கண்டு, தான் கண்ட காட்சியைப் பின்வரும் பாடலாகப் பாடினார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும்  கண்டேன் - செருகிளரும்  

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று . என்ற பாடலில் தொடங்கி இயற்றிய 100 வெண்பாக்களைக் கொண்டது இரண்டாம் திருவந்தாதி. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். இரண்டாம் திருவந்தாதி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் 'இயற்பா' தொகுப்பில் இடம்பெறுகிறது.

இச்சந்திப்புக்குப்பின் பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் இருவருடன் பல தலங்களுக்கு யாத்திரை சென்று திருமால் புகழ் பாடினார்.












🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.