under review

பி.ஆர். ராஜம் ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: ==அடிக்குறிப்புகள்== <references />)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 15: Line 15:
இறுதிக்காலத்தில் பொருளியல் சிக்கல் காரணமாக ராஜம் ஐயர் 'பிரபோதசந்திரிகை' என்னும் பல்சுவை இதழைத் தொடங்க முற்பட்டு நிதியுதவிக்கான முன்வரைவையும் எழுதினார். ஆனால் அம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இறுதிக்காலத்தில் பொருளியல் சிக்கல் காரணமாக ராஜம் ஐயர் 'பிரபோதசந்திரிகை' என்னும் பல்சுவை இதழைத் தொடங்க முற்பட்டு நிதியுதவிக்கான முன்வரைவையும் எழுதினார். ஆனால் அம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தமிழ் இலக்கியத்தில் புலமை கொண்டிருந்த ராஜம் ஐயர், கிறிஸ்தவக் கல்லூரி பத்திரிகையில் தன்னுடைய 17-ஆம் வயதில் அன்று பிரபலமான [[பூண்டி அரங்கநாத முதலியார்|பூண்டி அரங்கநாத முதலியா]]ரால் இயற்றப்பட்ட கச்சிக் கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பு. அக்கட்டுரை மூலம் ராஜம் ஐயரின் தமிழ்த்திறனும், புலமையும் தெரியவந்தன.
தமிழ் இலக்கியத்தில் புலமை கொண்டிருந்த ராஜம் ஐயர், கிறிஸ்தவக் கல்லூரி பத்திரிகையில் தன்னுடைய 17-ம் வயதில் அன்று பிரபலமான [[பூண்டி அரங்கநாத முதலியார்|பூண்டி அரங்கநாத முதலியா]]ரால் இயற்றப்பட்ட கச்சிக் கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பு. அக்கட்டுரை மூலம் ராஜம் ஐயரின் தமிழ்த்திறனும், புலமையும் தெரியவந்தன.

இந்த காலகட்டத்தில் ராஜம் ஐயரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. கல்லூரி நூலகத்தில் இவர் படித்திருந்த ஷெல்லி, வேர்ட்ஸ்வெர்த், டென்னிசன் போன்றோரின் படைப்புகள் இவருக்கு கவிதை மேல் ஆர்வத்தை ஏற்படுத்தின. கம்பன் பாடல்கள் இவரை மிகவும் கவர்ந்தன.

[[கமலாம்பாள் சரித்திரம்]] என்ற நாவலை 1893-ஆம் ஆண்டு [[விவேக சிந்தாமணி]] என்ற மாத இதழில் தொடராக எழுத வாய்ப்பு வந்தது. தமிழின் இரண்டாம் நாவலாகிய இப்படைப்பை எழுதும்போது அவருக்கு வயது 21. "இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஓர் அமைதியற்ற ஆன்மா, பல கஷ்டங்களை அனுபவித்து, இறுதியில் நிர்மலமான ஓர் இன்ப நிலையை அடைந்ததை விவரிப்பதே இந்த கிரந்தத்தின் முக்கிய நோக்கம்" என்று கொண்டு அந்த நாவலை எழுதுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  
[[கமலாம்பாள் சரித்திரம்]] என்ற நாவலை 1893-ம் ஆண்டு [[விவேக சிந்தாமணி]] என்ற மாத இதழில் தொடராக எழுத வாய்ப்பு வந்தது. தமிழின் இரண்டாம் நாவலாகிய இப்படைப்பை எழுதும்போது அவருக்கு வயது 21. "இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஓர் அமைதியற்ற ஆன்மா, பல கஷ்டங்களை அனுபவித்து, இறுதியில் நிர்மலமான ஓர் இன்ப நிலையை அடைந்ததை விவரிப்பதே இந்த கிரந்தத்தின் முக்கிய நோக்கம்" என்று கொண்டு அந்த நாவலை எழுதுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

பல்வேறு பழமொழிகளை, குட்டிக் கதைகளை, வேத, வேதாந்தக் கருத்துக்களை மிக எளிய நடையில் மனதில் பதியும்படி அந்த நாவலில் அவர் சொல்லியிருக்கிறார். மேலும் இந்நாவலில் [[கம்பராமாயணம்]], [[திருக்குறள்]], [[நளவெண்பா]], தாயுமானவர் பாடல், [[அரிச்சந்திர புராணம்]], பட்டினத்தார் பாடல், [[நீதிநெறி விளக்கம்]] போன்ற பல நூல்களிலுள்ள பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பதோடு, ஷேக்ஸ்பியரின் நடுவேனிற்கனவு (A Midsummer Night's Dream) நாடகத்தில் வரும் 'பக்’ என்னும் குட்டிப்பேய் பற்றியும் குறிப்பிட்டிருப்பது அவரது இலக்கிய ஆர்வத்தின் சான்று.

Line 39: Line 39:
சுவாமி விவேகானந்தரின் மாணவராக பி.ஆர்.ராஜம் ஐயர் செயல்பட்டார்.  விவேகானந்தர் 1893-ல் சென்னையில் இருந்து அமெரிக்காவின் சிகாகோவுக்குக் கிளம்பிச் சென்றார். அதன் பின் 1897-ல் தான் திரும்பி வந்தார். 1897-ல் விவேகானந்தர் சென்னை வந்தபோது ராஜம் ஐயர் உடல்நலமில்லாமலிருந்தார். 1893-ல் ராஜம் ஐயர் விவேகானந்தரைச் சந்தித்ததாக ஏ.எஸ்.கஸ்தூரிரங்கய்யர் குறிப்பிடுகிறார். ஆனால் விவேகானந்தரை ராஜம் ஐயர் சந்தித்தமைக்கு வேறு உறுதியான சான்றுகள் இல்லை.  

==மறைவு==
==மறைவு==
மே 13, 1898-ல் தன்னுடைய 26-ஆம் வயதில் பிரைட் நோய் எனப்படும் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக காலமானார்.  முதலில் குடல்நோயாக உருவாகியது. அக்காலத்தில் இதற்கு முறையான மருத்துவம் செய்யப்படவில்லை. அவர் மறைவுக்கு சற்றுமுன் எடுக்கப்பட்ட சோதனையில் சிறுநீரில் அல்புமின் வெளிப்படுவதாக இருந்தமை இந்நோய் அவருக்கிருந்தமைக்குச் சான்ழறாகக் கருதப்படுகிறது.  
மே 13, 1898-ல் தன்னுடைய 26-ம் வயதில் பிரைட் நோய் எனப்படும் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக காலமானார்.  முதலில் குடல்நோயாக உருவாகியது. அக்காலத்தில் இதற்கு முறையான மருத்துவம் செய்யப்படவில்லை. அவர் மறைவுக்கு சற்றுமுன் எடுக்கப்பட்ட சோதனையில் சிறுநீரில் அல்புமின் வெளிப்படுவதாக இருந்தமை இந்நோய் அவருக்கிருந்தமைக்குச் சான்ழறாகக் கருதப்படுகிறது.  

பிரபுத்த பாரதாவின் ஜூன்  1898  இதழில் ராஜம் ஐயரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. . [[File:RajamAiyerSarithai.jpg|alt=ராஜம் அய்யர் சரிதை நூல்|thumb|ராஜம் அய்யர் சரிதை நூல்]]

==வாழ்க்கை வரலாறு==
==வாழ்க்கை வரலாறு==
’ராஜம் அய்யர் சரிதை’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 1909-ஆம் ஆண்டு ஏ.எஸ். கஸ்தூரிரங்கய்யர்  பி.ஏ.எல்.டி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. இது [[விவேகபோதினி]] என்னும் இதழில் முதல் தொகுதி ஆறாம் கழித்து இது எழுதப்பட்டு பின்னர் நூலாகியது.
’ராஜம் அய்யர் சரிதை’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 1909-ம் ஆண்டு ஏ.எஸ். கஸ்தூரிரங்கய்யர்  பி.ஏ.எல்.டி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. இது [[விவேகபோதினி]] என்னும் இதழில் முதல் தொகுதி ஆறாம் கழித்து இது எழுதப்பட்டு பின்னர் நூலாகியது.
==விவாதங்கள்==
==விவாதங்கள்==
ஏப்ரல் 1898  இதழில் அவர் எழுதி வெளியிட்ட 'வேதாந்தமும் சக்கரவர்த்தி பெருமானும்' என்ற கட்டுரையில் 'வேதாந்தம் சக்கரவர்த்தி பெருமானது அரசாட்சியை எப்பொழுதும் கவிழ்க்கவே பார்க்கிறது. அது இருக்கிற வரையில் என்றைக்காவது அவருக்கு அபாயம் வருவது திண்ணம்’ என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். அது ராஜநிந்தனையாக இருப்பதாக எண்ணி ஆங்கிலேய அரசு விசாரணைக்காக போலீஸ்காரர்களை அனுப்பியது. ராஜம் ஐயர் இறந்த இரண்டொரு நாளில் அவர்கள் விசாரணைக்கு வந்து அவர் காலமான செய்தியை அறிந்து கொண்டார்கள்.

Latest revision as of 10:12, 24 February 2024

ராஜம் ஐயர்

To read the article in English: B. R. Rajam Iyer. ‎

ராஜம் அய்யர்
ராஜம் ஐயர்

பி. ஆர். ராஜம் ஐயர் (பி. ஆர். ராஜம் அய்யர்/ பி.ஆர். ராஜமய்யர்) (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மீகம் மற்றும் தத்துவ நாட்டம் கொண்ட சிந்தனையாளர். இவரது முழுப்பெயர் பி.ஆர். சிவசுப்பிரமணிய ஐயர். தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதியவர். தமிழில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

தனிவாழ்க்கை

பி.ஆர். ராஜம் ஐயர் ஜனவரி 25, 1872-ல் தமிழ்நாட்டில் வத்தலகுண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ராமையா சாஸ்திரி. உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். தந்தைக்கு இருந்த சிறிதளவு நிலபுலன்களை வைத்து குடும்பம் நடந்தது.

இவருக்கு 13 வயதில் திருமணம் ஆனது. மனைவி 9 வயதான ராமலெட்சுமி.

மதுரை சேதுபதி உயர்நிலைபள்ளியில் பள்ளிப் படிப்பும், மதுரை பாண்டித்ய சாலையில் எஃப்.ஏ.-வும் முடித்த ராஜம் ஐயர் 1889-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரில் சரித்திரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பி.ஏ. முடித்ததும் சட்டம் பயில்வதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இறுதித்தேர்வில் வெற்றிபெற இயலவில்லை. அந்தத் தோல்வி இவரை நிலைகுலையச் செய்தது. ஏற்கெனவே உள்ளொடுங்கியவரும் தனிமை உணர்ச்சி மிக்கவருமான ராஜம் ஐயர், மேலும் தன்னுள் ஒடுங்கினார். விரக்தி மனநிலையில் இருந்த இவருக்கு தாயுமானவரின் நூல்தொகுப்பு கிடைத்தது. வேதாந்த தத்துவ சிந்தனைகளில் ஆர்வம் செலுத்தினார். கைவல்ய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள் போன்றவை இவரை ஞானமார்க்கத்தில் செலுத்தின.

இதழியல்

பி.ஆர்.ராஜம் ஐயர் விவேகானந்தரின் நவவேதாந்தம் சார்ந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது மாணவராக ஆனார். நவவேதாந்த கருத்துக்களை பரப்பும்பொருட்டு அவர் விவேகனந்தரின் மாணவர்களால் ஜூலை 1896-ல் தொடங்கப்பட்ட பிரபுத்தபாரதம் என்னும் ஆங்கில இதழை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். 1898-ல் அவர் மறைவுடன் சென்னையில் இருந்து அவ்விதழ் வெளிவருவது நின்றது. பிரபுத்த பாரதத்தின் இறுதி சென்னை இதழில் பி.ஆர்.ராஜம் ஐயரின் மறைவு அறிவிக்கப்பட்டிருந்தது. பிரபுத்தபாரதம் அதன் பின் தொடர்ந்து இமாச்சலப்பிரதேசம் அல்மோராவில் இருந்து வெளிவரத்தொடங்கியது.

இறுதிக்காலத்தில் பொருளியல் சிக்கல் காரணமாக ராஜம் ஐயர் 'பிரபோதசந்திரிகை' என்னும் பல்சுவை இதழைத் தொடங்க முற்பட்டு நிதியுதவிக்கான முன்வரைவையும் எழுதினார். ஆனால் அம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் இலக்கியத்தில் புலமை கொண்டிருந்த ராஜம் ஐயர், கிறிஸ்தவக் கல்லூரி பத்திரிகையில் தன்னுடைய 17-ம் வயதில் அன்று பிரபலமான பூண்டி அரங்கநாத முதலியாரால் இயற்றப்பட்ட கச்சிக் கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பு. அக்கட்டுரை மூலம் ராஜம் ஐயரின் தமிழ்த்திறனும், புலமையும் தெரியவந்தன.

இந்த காலகட்டத்தில் ராஜம் ஐயரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. கல்லூரி நூலகத்தில் இவர் படித்திருந்த ஷெல்லி, வேர்ட்ஸ்வெர்த், டென்னிசன் போன்றோரின் படைப்புகள் இவருக்கு கவிதை மேல் ஆர்வத்தை ஏற்படுத்தின. கம்பன் பாடல்கள் இவரை மிகவும் கவர்ந்தன.

கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893-ம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் தொடராக எழுத வாய்ப்பு வந்தது. தமிழின் இரண்டாம் நாவலாகிய இப்படைப்பை எழுதும்போது அவருக்கு வயது 21. "இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஓர் அமைதியற்ற ஆன்மா, பல கஷ்டங்களை அனுபவித்து, இறுதியில் நிர்மலமான ஓர் இன்ப நிலையை அடைந்ததை விவரிப்பதே இந்த கிரந்தத்தின் முக்கிய நோக்கம்" என்று கொண்டு அந்த நாவலை எழுதுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பல்வேறு பழமொழிகளை, குட்டிக் கதைகளை, வேத, வேதாந்தக் கருத்துக்களை மிக எளிய நடையில் மனதில் பதியும்படி அந்த நாவலில் அவர் சொல்லியிருக்கிறார். மேலும் இந்நாவலில் கம்பராமாயணம், திருக்குறள், நளவெண்பா, தாயுமானவர் பாடல், அரிச்சந்திர புராணம், பட்டினத்தார் பாடல், நீதிநெறி விளக்கம் போன்ற பல நூல்களிலுள்ள பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பதோடு, ஷேக்ஸ்பியரின் நடுவேனிற்கனவு (A Midsummer Night's Dream) நாடகத்தில் வரும் 'பக்’ என்னும் குட்டிப்பேய் பற்றியும் குறிப்பிட்டிருப்பது அவரது இலக்கிய ஆர்வத்தின் சான்று.

ராஜம் ஐயர் வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம் எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், அவருடைய வாழ்வியல் நோக்கும் கலைத்திறனும் கொண்டு எழுதப்பட்ட படைப்பாக இருந்தது. அதன் வழியாக தமிழில் புதிய இலக்கிய மரபைத் துவக்கி வைத்தார்.

கம்பராமாயணத்தை அடிப்படையாக வைத்து சீதையின் பெருமையையும், கம்பனின் கவிச்சிறப்பையும், ஜானகி-நடராஜன் என்ற இருவர் வியந்து உரையாடுவதுபோல் 'சீதை' என்ற தொடரையும் விவேக சிந்தாமணி இதழில் ராஜம் ஐயர் எழுதியிருக்கிறார். (இது நூலாக வெளிவரவில்லை).

ஆன்மீகம்

பிரபுத்த பாரதா இதழ்
பிரபுத்த பாரதா இதழ்

சென்னை திருவல்லிக்கேணியில் ராஜம் ஐயர் வசித்த வீட்டுக்கு அருகாமையில் ஒரு சன்னியாசினி அம்மாள் உபன்யாசம் செய்து வந்தார். நாள்தோறும் அங்கு சென்று உபன்யாசம் கேட்டு வந்த ராஜம் ஐயரின் மனநிலையையும் ஆன்மீக நாட்டத்தையும் அறிந்த அந்த அம்மாள் அவரது தலையைத் தொட்டு ஆசி வழங்கினார். அது அவருக்கு அரிய ஆன்மீக அனுபவத்தை அளித்தது.[1] அதனால் ஆன்மீக நாட்டம் அதிகரித்து உலகியலில் ஆர்வம் குறைந்தது.

அக்காலகட்டத்தில் சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற மகானின் அறிமுகம் கிடைத்தது. அவரையே தனது குருவாகக் கொண்டு அவரிடம் குரு உபதேசம் பெற்று, தனது ஆன்மீக, தியான, யோக மார்க்க முறைகளைப் பயின்று வந்தார்.

சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் - ராஜம் அய்யரின் குரு
சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் - ராஜம் அய்யரின் குரு

1896-ல் விவேகானந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய தத்துவம் மற்றும் வேதாந்த சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கோடு 'பிரம்மவாதின்’ என்ற ஆங்கில மாத இதழ் விவேகானந்தரின் சீடராக இருந்த எம்.சி. அளசிங்கப் பெருமாள் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்த இதழில் 'மனிதனின் சிறுமையும் பெருமையும்' (Man his littleness and greatness) என்ற தனது முதல் கட்டுரையை ராஜம் ஐயர் எழுதினார். இவருடைய உள்ளார்ந்த ஆன்மீகத் தேடல் இவரது எழுத்துக்களில் பிரதிபலித்தது.

விவேகானந்தரது ஆசியுடன்தொடங்கப்பட்ட 'பிரபுத்த பாரதா' ஆங்கில இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதில் இயற்பெயரிலும், புனைப்பெயர்களிலும் பல்வேறு தத்துவ, வேதாந்த, சமய விசாரணைக் கட்டுரைகளை எழுதினார். அவை பின்னாளில் 'வேதாந்த ஸஞ்சாரம்' (ஆங்கிலத்தில் Rambles in Vedanta[2]) என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட நூலாக தொகுக்கப்பட்டு வெளியானது.

விவேகானந்தர் சந்திப்பு

சுவாமி விவேகானந்தரின் மாணவராக பி.ஆர்.ராஜம் ஐயர் செயல்பட்டார். விவேகானந்தர் 1893-ல் சென்னையில் இருந்து அமெரிக்காவின் சிகாகோவுக்குக் கிளம்பிச் சென்றார். அதன் பின் 1897-ல் தான் திரும்பி வந்தார். 1897-ல் விவேகானந்தர் சென்னை வந்தபோது ராஜம் ஐயர் உடல்நலமில்லாமலிருந்தார். 1893-ல் ராஜம் ஐயர் விவேகானந்தரைச் சந்தித்ததாக ஏ.எஸ்.கஸ்தூரிரங்கய்யர் குறிப்பிடுகிறார். ஆனால் விவேகானந்தரை ராஜம் ஐயர் சந்தித்தமைக்கு வேறு உறுதியான சான்றுகள் இல்லை.

மறைவு

மே 13, 1898-ல் தன்னுடைய 26-ம் வயதில் பிரைட் நோய் எனப்படும் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக காலமானார். முதலில் குடல்நோயாக உருவாகியது. அக்காலத்தில் இதற்கு முறையான மருத்துவம் செய்யப்படவில்லை. அவர் மறைவுக்கு சற்றுமுன் எடுக்கப்பட்ட சோதனையில் சிறுநீரில் அல்புமின் வெளிப்படுவதாக இருந்தமை இந்நோய் அவருக்கிருந்தமைக்குச் சான்ழறாகக் கருதப்படுகிறது.

பிரபுத்த பாரதாவின் ஜூன் 1898 இதழில் ராஜம் ஐயரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. .

ராஜம் அய்யர் சரிதை நூல்
ராஜம் அய்யர் சரிதை நூல்

வாழ்க்கை வரலாறு

’ராஜம் அய்யர் சரிதை’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 1909-ம் ஆண்டு ஏ.எஸ். கஸ்தூரிரங்கய்யர் பி.ஏ.எல்.டி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. இது விவேகபோதினி என்னும் இதழில் முதல் தொகுதி ஆறாம் கழித்து இது எழுதப்பட்டு பின்னர் நூலாகியது.

விவாதங்கள்

ஏப்ரல் 1898 இதழில் அவர் எழுதி வெளியிட்ட 'வேதாந்தமும் சக்கரவர்த்தி பெருமானும்' என்ற கட்டுரையில் 'வேதாந்தம் சக்கரவர்த்தி பெருமானது அரசாட்சியை எப்பொழுதும் கவிழ்க்கவே பார்க்கிறது. அது இருக்கிற வரையில் என்றைக்காவது அவருக்கு அபாயம் வருவது திண்ணம்’ என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். அது ராஜநிந்தனையாக இருப்பதாக எண்ணி ஆங்கிலேய அரசு விசாரணைக்காக போலீஸ்காரர்களை அனுப்பியது. ராஜம் ஐயர் இறந்த இரண்டொரு நாளில் அவர்கள் விசாரணைக்கு வந்து அவர் காலமான செய்தியை அறிந்து கொண்டார்கள்.

இலக்கிய இடம்

பி.ஆர்.ராஜம் ஐயர் தமிழ் உரைநடை இலக்கியத்தின் முன்னோடியாகவும், தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவலாசிரியர்களில் முக்கியமானவராகவும் கருதப்படுகிறார். ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரமே தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவல்களில் கலைச்சிறப்பு கொண்டது என்று க.நா.சுப்ரமணியம் மரபைச் சேர்ந்த விமர்சகர்கள் கருதுகிறார்கள். தமிழில் நவவேதாந்தக் கருத்துக்களை அறிமுகம் செய்த முன்னோடி என்னும் இடமும் ராஜம் ஐயருக்கு உண்டு.

படைப்புகள்

நாவல்கள்
  • கமலாம்பாள் சரித்திரம்
கட்டுரைகள்
  • வேதாந்த சஞ்சாரம் (Rambles in Vedanta)
  • மனிதனின் சிறுமையும் பெருமையும்
ஆங்கிலம்
  • Rambles in Vedanta

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page