under review

பாலகுமாரன்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(68 intermediate revisions by 10 users not shown)
Line 1: Line 1:
எழுத்தாளர் பாலகுமாரன், இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். புகழ்பெற்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனம், கதைகள் எழுதியுள்ளார்.  
[[File:பாலகுமாரன்.jpg|thumb|பாலகுமாரன்]]
பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூகநாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மீகவாதி. இந்து ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் பக்திநூல்களையும் புராண மறுஆக்கக் கதைகளையும் எழுதியவர். தன் காலகட்டத்தின் பொதுவான உளநெருக்கடிகளையும் பாலியல் சிக்கல்களையும் ஆன்மிகத்தேடல்களையும் புனைவுகளாக்கியவர் என்பதனால் பெரும் வாசக எண்ணிக்கை கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தார்.
== பிறப்பு, கல்வி ==
[[File:Bala2.jpg|thumb|பாலகுமாரன்]]
பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் ஜூலை 5, 1946-ல் வைத்தியநாதனுக்கும் சுலோச்சனாவுக்கும் பிறந்தார். சுலோச்சனா ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். பாலகுமாரன் பதினொராம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றார். பாலகுமாரனின் வாழ்க்கையில் ஆசிரியையாக பணிபுரிந்த அவர் அன்னை மிகுந்த தாக்கத்தை உருவாக்கியவர். அவர் எழுதக் காரணமாக அமைந்தவர். அவர் தந்தை வைத்தியநாதன் பற்றி பாலகுமாரன் மிகுந்த கசப்புடன் எழுதியிருக்கிறார். அவர் கோழை என்றும், மூர்க்கன் என்றும் தன் மனைவியை கொடுமை செய்தவர் என்றும் பதிவுசெய்திருக்கிறார். இளமையில் பாலகுமாரனை சிறந்த வாசகனாக ஆக்கிய அன்னை அவரை எழுத்தாளர் ஆகவும் ஊக்கம் அளித்தார்.
== தனிவாழ்க்கை ==
[[File:Pala.jpg|thumb|பாலகுமாரன் மனைவியருடன்]]
பாலகுமாரன் 1969-ம் ஆண்டு சென்னையிலுள்ள டஃபே என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் திரைத்துறையில் பணியாற்றும்பொருட்டு அந்த வேலையை விட்டுவிட்டார். திரை எழுத்தாளராகவும் முழுநேர எழுத்தாளராகவும் வாழ்ந்தார். பாலகுமாரனுக்கு இரு மனைவியர். கமலா, சாந்தா. மகன் சூர்யா, மகள் ஸ்ரீகெளரி.


பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை பெயர் வைத்தியநாதன். தாயார் சுலோசனா, ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். 1946ம் ஆண்டு பிறந்த பாலகுமாரன், பதினொராம் வகுப்பு வரை பள்ளி படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சிப்பெற்று, 1969ம் ஆண்டு சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றதொடங்கினார்.  
பாலகுமாரன் அவர் நண்பர்கள் [[மாலன்]], [[சுப்ரமணிய ராஜு]] இருவராலும் ஆழ்ந்த செல்வாக்குக்கு உட்பட்டவர். அவர்கள் ஒரு குழுவாக சிற்றிதழ்களில் இருந்து வணிக இதழ்களுக்குச் சென்றனர். பாலகுமாரன் மட்டுமே புகழ்பெற்றார். பாலகுமாரன் [[கமல்ஹாசன்]], பாலசந்தர் ஆகிய திரை ஆளுமைகளுக்கு அணுக்கமானவர்.
== இலக்கியவாழ்க்கை ==
[[File:Bala 22.jpg|thumb|பாலகுமாரன்]]
====== சிற்றிதழ்க்காலம் ======
பாலகுமாரன் சென்னையில் [[சா.கந்தசாமி]], [[ஞானக்கூத்தன்]] ஆகியோர் நடத்திவந்த [[கசடதபற (இதழ்)|கசடதபற]] சிற்றிதழ் குழுவில் இளம் வாசகராக ஈடுபட்டார். 'டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக [[கணையாழி]] இதழில் வெளியானது. கசடதபற குழுவில் ஒருவராகவும், சிற்றிதழ் சார் படைப்பாளியாகவும் அறியப்பட்டார்
====== பொதுவாசிப்பு காலகட்டம் ======
சாவி இதழை தொடங்கியபோது அதன் ஆசிரியர் சாவி இளம்தலைமுறை எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வர விரும்பினார். அன்று தி.ஜானகிராமனின் செல்வாக்குடன், ஆண்பெண் உறவு சார்ந்து, பொதுவாசிப்புக்குரிய உணர்ச்சிகரமான நேரடி நடையுடன் எழுதிக்கொண்டிருந்த இளைஞர்குழு ஒன்றை சாவி இதழுக்கு கொண்டுசென்றார். பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜு, கார்த்திகா ராஜ்குமார், தேவகோட்டை.வா.மூர்த்தி, இந்துமதி போன்றவர்கள் சாவியில் எழுதத் தொடங்கினர். பாலகுமாரன் சாவி இதழில் சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுதினார். பல்வேறு ஆளுமைகளை பேட்டிகண்டு எழுதினார். பாலகுமாரனின் சிறுகதைகள் பொதுவாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டன. நர்மதா பதிப்பக வெளியீடாக வந்த சின்னச்சின்ன வட்டங்கள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.  


’டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது.  பிறகு டஃபே டிராக்டர் நிறுவனத்தில், வேலை பார்க்கும் போது நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். நல்ல வரவேற்பை மெர்க்குரிப் பூக்கள் நாவல் பெற்றதை தொடர்ந்து, இரும்பு குதிரைகள் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார். பிறகு தொடர்ந்து பல நாவல்களை எழுதினார்.  
டஃபே டிராக்டர் நிறுவனத்தில், நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அந்த அனுபவங்களை 1980-ல் ’[[மெர்க்குரிப் பூக்கள்]]’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். 1981-ல் அது நூலாக வெளிவந்தது.மெர்க்குரிப் பூக்கள் நாவல் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து வார இதழ்களில் தொடர்கதைகளை எழுதினார். ஆனந்த விகடனில் வெளியான [[கரையோர முதலைகள்]], கல்கியில் வெளியான [[இரும்புக்குதிரைகள்]] போன்ற தொடர்கள் பெரும்புகழை அவருக்கு தேடித்தந்தன. எண்பதுகளில் இளைஞர்களின் ரசனையில் முதன்மை இடம் பிடித்த எழுத்தாளராக கருதப்பட்டார்.
====== ஆன்மிக காலகட்டம் ======
தன் பொதுவாசிப்புக்குரிய எழுத்துக்களில் ஆண்பெண் உறவுச்சிக்கல்களை முதன்மையாக எழுதிவந்த பாலகுமாரன் 1990ல் யோகி ராம் சுரத்குமார் உறவால் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ஆன்மிகஞானிகளின் வாழ்க்கையை ஒட்டிய சிறிய நாவல்களை எழுதினார். ஆன்மிக விளக்கம் அளிக்கும் கட்டுரைகளையும் எழுதினார். சோழர் வரலாற்றில் ஆர்வம் கொண்டு, தீவிரமான ஆய்வுக்குப்பின் [[உடையார்]], [[கங்கைகொண்ட சோழன்]] ஆகிய நாவல்களை எழுதினார். அவற்றிலும் அவருடைய ஆன்மிகப்பார்வை வெளிப்பட்டது.பாலகுமாரன் இறுதிக்காலத்தில் மகாபாரதம் ராமாயணம் இரண்டுக்கும் நவீன உரைநடை வடிவங்களை எழுதினார். ராமாயணம் உரைநடை வடிவை முழுமை செய்யவில்லை.
[[File:பாலகுமாரன் தாயுடன்.png|thumb|பாலகுமாரன் தாயுடன்]]
[[File:பாலகுமாரன் 3.jpg|thumb|பாலகுமாரன் ]]
== திரைப்படம் ==
பாலகுமாரன் 1987-ல் மணிரத்னத்தின் நாயகன் படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பாலசந்தர் இயக்கத்தில் பாலகுமாரன் எழுதிய சிந்து பைரவி தேசிய விருதுபெற்ற படம்.  


மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை குறிப்பிடுகிறார்.
இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்கினார். தாயுமானவன் என்னும் சின்னத்திரைத்தொடரையும் இயக்கியுள்ளார். பாலகுமாரன் மொத்தம் 27 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
[[File:பாலகுமாரன் குடும்பம்.png|thumb|பாலகுமாரன் குடும்பம்]]
== ஆன்மிகம் ==
பாலகுமாரன் திருவண்ணாமலை [[யோகி ராம்சுரத்குமார்]] அவர்களை தன் ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டார். பக்தியும் வேதாந்தமும் கலந்த ஒரு வழிபாட்டுமுறையை தனக்காக உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஆன்மிக மாணவர்களும் இருந்தனர்.
== மறைவு ==
மே 14, 2018 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று காலமானார்.
[[File:பாலகுமாரன் யோகி ராம் சுரத் குமாருடன்.png|thumb|பாலகுமாரன் யோகி ராம் சுரத் குமாருடன்]]
== இலக்கிய இடம் ==
பாலகுமாரன் இரண்டு புனைவுமரபுகளின் இணைப்பு. பாலகுமாரன் தனக்கு எழுத்தின் நுணுக்கங்களை சொல்லித்தந்ததாக எழுத்தாளர் [[சுஜாதா]]வைக் குறிப்பிடுகிறார். பாலகுமாரனின் படைப்புகளில் [[தி.ஜானகிராமன்]] எழுத்துக்களின் செல்வாக்கு உண்டு. அதேபோல வணிகக்கேளிக்கை எழுத்து மரபில் வந்த ஆர்வி, பிவிஆர் போன்றவர்களின் எழுத்துமுறையின் நீட்சி அவர். கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துமுறையால் தூண்டுதல்கொண்ட இளைஞர்களில் ஒருவராக அவர் எழுத ஆரம்பித்தார். ஆண்பெண் உறவின் நுட்பமான உளவியல் நாடகங்களை, புரிதல்களை எழுதுவது இந்த மரபு. பாலகுமாரன் இவ்விரு மரபுகளையும் இணைத்தவர். பாலகுமாரனின் நடை பேச்சுமொழிக்கு மிக அண்மையானது. ஆசிரியர் வாசகர்களிடம் நேரடியாக கதையைச் சொல்வதுபோன்ற பாவனை கொண்டது.  


திரைத்துறையில் ஆர்வம் கொண்டு இயக்குனர் பாலசந்தருடன் புன்னகை மன்னன், சிந்து பைரவி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். பிறகு இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
தனக்கு முன்பிருந்த வணிகக்கேளிக்கை எழுத்தில் இருந்த சலிப்பூட்டும் இரு கூறுகளை பாலகுமாரன் களைந்தார். ஒன்று, சுழன்று சுழன்றுசெல்லும் கதைப்போக்கு. இரண்டு, செயற்கையான நாடகத்தருணங்கள். பதிலுக்கு நவீனத்துவ இலக்கிய எழுத்துமுறையில் இருந்து பெற்றுக்கொண்ட கச்சிதமான சுருக்கமான கதைசொல்லும் முறையை வணிகக்கேளிக்கை எழுத்துக்கு அறிமுகம் செய்தார். செயற்கையான நாடகத்தருணங்களை உருவாக்காமல் அன்றாடத் தருணங்களில் உள்ள உளவியல் ஆழத்தை சுட்டிக்காட்டி அழுத்தமான உணர்ச்சிகளை வாசகர்களிடம் உருவாக்கினார். ஆகவே அவருடைய எழுத்துக்கள் முற்றிலும் புதிய அனுபவமாக வாசகர்களுக்கு இருந்தன.


=== பிறப்பு, இளமை ===
நவீனத் தமிழிலக்கியத்தில் உருவாகி வலுப்பெற்றிருந்த புதுக்கவிதையின் அழகியலையும் பாலகுமாரன் நாவல்களுக்குள் கொண்டுவந்தார். கரையோரமுதலைகள் போன்ற நாவல்களில் உருவகத்தன்மை கொண்ட கவிதை நேரடியாகவே இணைக்கப்பட்டிருந்தது. அவை பொதுவாசகர்களுக்கு புதியவை. கசடதபற இலக்கியக்குழுவில் இருந்து பெற்றுக்கொண்ட நவீனக் கவித்துவம் தொடக்ககால பாலகுமாரன் கதைகளின் தனித்தன்மையாக இருந்தது.பாலகுமாரன் பி.வி.ஆர் போல வெவ்வேறு வாழ்க்கைக் களங்களை ஆராய்ச்சி செய்து அவற்றில் தன் நாவல்களை அமைத்தார். அவையும் அவருடைய நாவல்களுக்கு புதுமையை அளித்தன. இரும்புக்குதிரைகள் லாரி ஓட்டுநர்களின் உலகைச் சார்ந்த நாவல்


* பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் பழமார்நேரி
பின்னாளில் பாலகுமாரன் ஆன்மிக உள்ளடக்கம் கொண்ட நாவல்களையும் புராண மறு ஆக்கங்களையும் எழுதினார். பிற்காலத்தைய படைப்புகளில் [[உடையார்]], [[கங்கைகொண்ட சோழன்]] ஆகிய இரு நாவல்களும் அளவில் மிகப்பெரியவை. இவற்றில் [[உடையார்]] பாலகுமாரனின் முக்கியமான இலக்கியப் பங்களிப்பு. ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தின் விரிவான சித்தரிப்பை, தஞ்சைப் பெரியகோயில் அமைத்தல் என்னும் பண்பாட்டு பெருநிகழ்வின் காட்சியை அளித்தமையால் அந்நாவல் இலக்கிய முக்கியத்துவம் உடையது. பாலகுமாரனின் சிறந்த நாவல்கள் மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், இரும்புக்குதிரைகள் ஆகியவை கருதப்படுகின்றன. சமகாலப்பிரச்சினைகளைப் பேசும் தன்மையைக் கடந்து நிற்கும் அவருடைய முதன்மைப் படைப்பு [[அப்பம் வடை தயிர் சாதம்]] தஞ்சையில் இருந்து சென்னை வரை சென்ற நூற்றாண்டில் பிராமணர்களின் வாழ்க்கையின் நகர்வை குடும்பப்பின்னணியில் எழுதிய குறிப்பிடத்தக்க ஆக்கம் அது.
* பிறந்த தேதி : 07-05-1946
== விருதுகள் ==
* பெற்றோர் பெயர் : வைத்தியநாதன், சுலோசனா
* இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), 1981
* கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள்.
* மனைவி பெயர்: கமலா, சாந்தா
* .குழந்தைகள் பெயர் : ஸ்ரீகெளரி, சூர்யா
 
=== படைப்புகள் ===
 
** நாவல்கள்
** சிறுகதைகள்
** சிறார் நூல்கள்
** மொழிபெயர்ப்புகள்
** மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
 
=== நாவல்கள் ===
{| class="wikitable"
|+
!நாவல்
!வெளிவந்த ஆண்டு
!வெளிவந்த இதழ்
!பதிப்பகம்
!குறிப்புகள்
!
|-
|மெர்க்குரி பூக்கள்
|
|சாவி
|
|
|
|-
|இரும்புக் குதிரைகள்
|1984
|கல்கி
|
|
|
|-
|தாயுமானவன்
|
|
|
|
|
|-
|கரையோர முதலைகள்
|
|
|
|
|
|-
|மெளனமே காதலாக
|
|
|
|
|
|-
|கை வீசம்மா கை வீசு
|
|
|
|
|
|-
|கொம்புத் தேன்
|
|
|
|
|
|-
|கனவுகள் விற்பவன்
|
|
|
|
|
|-
|உள்ளம் கவர் கள்வன்
|
|
|
|
|
|-
|ஆனந்த வயல்
|
|
|
|
|
|-
|அகல்யா
|
|
|
|
|
|-
|அடுக்கு மல்லி
|
|
|
|
|
|-
|அப்பம் வடை தயிர்சாதம்
|
|
|
|
|
|-
|அத்திப்பூ
|
|
|
|
|
|-
|அப்பா!
|
|
|
|
|
|-
|அமிர்த யோகம்
|
|
|
|
|
|-
|அன்பரசு
|
|
|
|
|
|-
|அகல் விளக்கு
|
|
|
|
|
|-
|அமிர்த யோகம்
|
|
|
|
|
|-
|அமுதை பொழியும் நிலவே
|
|
|
|
|
|-
|அருகம் புல்
|
|
|
|
|
|-
|அன்புள்ள மான்விழியே
|
|
|
|
|
|-
|அன்புக்கு பஞ்சமில்லை
|
|
|
|
|
|-
|ஆசைக்கடல்
|
|
|
|
|
|-
|ஆயிரம் கன்னி
|
|
|
|
|
|-
|ஆருயிரே மன்னவரே
|
|
|
|
|
|-
|இரண்டாவது சூரியன்
|
|
|
|
|
|-
|இனிது இனிது காதல் இனிது
|
|
|
|
|
|-
|இனியெல்லாம் சுகமே
|
|
|
|
|
|-
|இனி இரவு எழுந்திரு
|
|
|
|
|
|-
|ஈரக் காற்று
|
|
|
|
|
|-
|என் கண்மணித் தாமரை
|
|
|
|
|
|-
|என்னுயிரும் நீயல்லவோ
|
|
|
|
|
|-
|என்னுயிர் தோழி
|
|
|
|
|
|-
|என் கண்மணி
|
|
|
|
|
|-
|கங்கை கொண்ட சோழன்
|
|
|
|
|
|-
|கடலோர குருவிகள்
|
|
|
|
|
|-
|கல்யாண முருங்கை
|
|
|
|
|
|-
|பனி விழும் மலர்வனம்
|
|
|
|
|
|-
|திருப்பூந்துருத்தி
|
|
|
|
|
|-
|நிலாக்கால மேகம்
|
|
|
|
|
|-
|பந்தயப் புறா
|
|
|
|
|
|-
|பயணிகள் கவனிக்கவும்
|
|
|
|
|
|-
|மாலை நேரத்து மயக்கம்
|
|
|
|
|
|-
|சுக ஜீவனம்
|
|
|
|
|
|-
|சின்ன சின்ன வட்டங்கள்
|
|
|
|
|
|-
|சிநேகமுள்ள சிங்கம்
|
|
|
|
|
|-
|பந்தயப் புறா
|
|
|
|
|
|-
|ஆசை எனும் வேதம்
|
|
|
|
|
|-
|பச்சை வயல் மனது
|
|
|
|
|
|-
|தலையணைப் பூக்கள்
|
|
|
|
|
|-
|உடையார்
|
|
|
|
|
|-
|யாக சாலை
|
|
|
|
|
|-
|தோழன்
|
|
|
|
|
|-
|என்றென்றும் அன்புடன்
|
|
|
|
|
|-
|ஆலமரம்
|
|
|
|
|
|-
|இனிய யட்சனி
|
|
|
|
|
|-
|விசிறி சாமியார்
|
|
|
|
|
|-
|காலடித் தாமரை
|
|
|
|
|
|-
|அவனி
|
|
|
|
|
|-
|ஆருயிரே மன்னவரே
|
|
|
|
|
|-
|தங்கக்கை
|
|
|
|
|
|-
|கடலோரக் குருவிகள்
|
|
|
|
|
|-
|காதல் சிறகு
|
|
|
|
|
|-
|காதற் பெருமான்
|
|
|
|
|
|-
|காசும் பிறப்பும்
|
|
|
|
|
|-
|சிம்மாசனம்
|
|
|
|
|
|-
|குன்றிமணி
|
|
|
|
|
|-
|பெண்ணாசை
|
|
|
|
|
|-
|கருணை மழை
|
|
|
|
|
|-
|குருவழி
|
|
|
|
|
|-
|குரு
|
|
|
|
|
|-
|ஸ்ரீகிருஷ்ணாவதாரம்
|
|
|
|
|
|-
|ஆனந்த யோகம்
|
|
|
|
|
|-
|கண்ணே வண்ணப் பசுங்கிளியே
|
|
|
|
|
|-
|விட்டில் பூச்சிகள்
|
|
|
|
|
|-
|வெள்ளைத் துறைமுகம்
|
|
|
|
|
|-
|கபீர்தாசர்
|
|
|
|
|
|-
|கூரைப்பூசணி
|
|
|
|
|
|-
|333 அம்மையப்பன் தெரு
|
|
|
|
|
|}
 
=== விருதுகள் ===
 
* இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
* ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
* ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
* தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
* தமிழ்நாடு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
*தமிழ்நாடு மாநில விருது (கடற்பாலம் - சிறுகதை தொகுப்பு)
*தமிழ்நாடு மாநில விருது (கடற்பாலம் - சிறுகதை தொகுப்பு)
* கலைமாமணி
* கலைமாமணி
*கவிஞர் வாலி விருது
*கோவை புத்தகக் கண்காட்சியில் கொடிசியா-பப்பாசி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது - 2016
*கவிஞர் வாலி விருது, 2017
*மா.போ.சி விருது
*மா.போ.சி விருது
*
== திரையுலக விருதுகள் ==
* தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்), 1994
== படைப்புகள் ==
====== நாவல்கள் ======
பாலகுமாரன் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றின் நூல்பட்டியல் இணைப்பு<ref>[http://writerbalakumaran.com/booklist/ எழுத்துச்சித்தர் பாலகுமாரன் புத்தகப்பட்டியல்]</ref>
 
இவற்றில் முக்கியமானவை சில
*[[மெர்க்குரிப் பூக்கள்]]
*[[கரையோர முதலைகள்]]
*[[இரும்புக்குதிரைகள்]]
*333 அம்மையப்பர் தெரு
*அகல்யா
*அடுக்கு மல்லி
*அத்திப்பூ
*அப்பா
*அமிர்த யோகம்
*அரசமரம்
*அருகம்புல்
*அவரும் அவளும்
*அவனி
*அன்புக்கு பஞ்சமில்லை
*அன்புள்ள மான்விழியே
*ஆசைக்கடல்
* ஆசை என்னும் வேதம்
*ஆயிரம்கண்ணி
*ஆருயிரே மன்னவரே
*ஆனந்தவயல்
*இது போதும்
*இதுதான் காதல் என்பதா?
*இரண்டாவது கல்யாணம்
*இரண்டாவது சூரியன்
*இரும்புக்குதிரைகள்
*இனி எல்லாம் சுகமே
*இனி என் முறை
*இனிய இரவு எழுந்திரு
*இனிய யட்சிணி
*ஈரக்காற்று
*உச்சி திலகம்
*உச்சிதனை முகர்ந்தால்
*உத்தமன்
*உள்ளம் கவர் கள்வன்
*உயிர்ச்சுருள்
*உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
*எங்கள் காதல் ஒரு தினுசு
*என் அன்பு மந்திரம்
*என் அன்புக்காதலா
*என் கண்மணித்தாமரை
*என் கல்யாண வைபோகமே
*என் காதல் கண்மணி
*என் மனது தாமரைப்பூ
*என்றும் மாறா வெண்மை
*என்றென்றும் அன்புடன்
*என்னருகே நீ இருந்தால்
*என்னவளே அடி என்னவளே
*என்னுயிரும் நீயல்லவோ
*என்னுயிர் தோழி
*என்னைச்சுற்றி சில நடனங்கள்
*ஏதோ ஒரு நதியில்
*ஏழாவது காதல்
*ஏனோ தெரியவில்லை
*ஒரு காதல் நிவந்தம்
*ஒரு சொல்
*ஒரு பொல்லாப்புமில்லை
*ஒருவழிப்பாதை
*ஒன்றானவன்
*கடலோரக் குருவிகள்
*கடல்நீலம்
*கடவுள் வீடு
*கடற்பாலம்
*கடிகை
*கண்ணாடிக் கோபுரங்கள்
*கண்ணே கலைமானே
*கண்ணே வண்ண பசுங்கிளியே
*கதைகதையாம் காரணமாம்
*கருணைமழை
*கர்ணனின் கதை
*கல்யாண மாலை
*கல்யாணத்தேர்
*கல்யாணமுருங்கை
*கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
*கல்லூரிப்பூக்கள்
*கவிழ்த்த காணிக்கை
*கள்ளி
*கற்புவெறி
*கற்றுக்கொண்டால் குற்றமில்லை
*கனவுகண்டேன் தோழி
*கனவுகள் விற்பவன்
*காசுமாலை
*காசும் பிறப்பும்
*காதல் அரங்கம்
*காதற் கிளிகள்
*காதல் சொல்ல வந்தேன்
*காதல் ரேகை
*காதல் வரி
*காதல் வெண்ணிலா
*காதற்பெருமான்
*காமதேனு
*காலடித்தாமரை
*காற்றுக்கென்ன வேலி
*கானல்தாகம்
*கிருஷ்ண மந்திரம்
*குங்குமத்தேர்
*குசேலர்
*குரு
*குருவழி
*குன்றிமணி
*கூடு
*கூரைப்பூசணி
*கைவீசம்மா கைவீசு
*கொஞ்சும் புறாவே
*கொம்புத்தேன்
*சக்கரவாஹம்
*சக்தி
*சரவிளக்கு
*சரிகை வேட்டி
*சிம்மாசனம்
*சினேகமுள்ள சிங்கம்
*சினேகிதன்
*சுகஜீவனம்
*சுந்தர காண்டம்
*சுந்தரி கண்ணால் ஒரு செய்தி
*சுழல் காற்று
*செண்பகத்தோட்டம்
*செந்தூரச்சொந்தம்
*செப்புப்பட்டயம்
*செவ்வரளி
*சொர்க்கம் நடுவிலே
*ஞாபகச்சிமிழ்
*தங்கக்கை
*தங்கச்சுருள்
*தண்ணீர்த்துறை
*தலையணைப்பூக்கள்
*தனரேகை
*தனிமைத்தவம்
*தாசி
*தாயுமானவன்
*தாலிபூஜை
*தாழம்பூ
*திருஞானசம்பந்தர்
*திருப்பூந்துருத்தி
*திருமணத்தீவு
*திருவடி
*துணை
*துளசி
*தெம்மாங்கு
*தேடிக்கண்டுகொண்டேன்
*தொட்டால்பூ மலரும்
*தொப்புள்கொடி தோழன்
*நந்தாவிளக்கு
*நல்ல முன்பனிக்காலம்
*நானே எனக்கொரு போதிமரம்
*நான்காம் பிறை
*நிகும்பலை
*நிலாக்கால மேகம்
*நிலாவே வா
*நிழல்யுத்தம்
*நீ பௌர்ணமி
*நீ வருவாய் என
*நெருப்புக்கோழி
*நெல்லுக்கிறைத்த நீர்
*நெல்லுச்சோறு
*நெளிமோதிரம்
* நேசமில்லாதவர்கள்
*நேற்றுவரை ஏமாற்றினாள்
*பகல் விளக்கு
*பச்சைவயல் மனது
*பட்டாபிஷேகம்
*பணம் காய்ச்சி மரம்
*பந்தயப்புறா
*பயணிகள் கவனிக்கவும்
*பனிவிழும் மலர்வனம்
*பாகசாலை
*பிரம்புக்கூடை
*பிருந்தாவனம்
*புருஷவிரதம்
*புஷ்பக விமானம்
*பூந்தோட்டம்
*பெரிய புராண கதைகள்
*பேய்க்கரும்பு
*பொன்வட்டில்
*பொன்னார்மேனியனே
*போகன்வில்லா
*மஞ்சக்காணி
*மஞ்சள்வானம்
*மணல்நதி
*மண்ணில் தெரியுது வானம்
*மதுமிதா
*மரக்கால்
*மனக்கோயில்
*மனம் உருகுதே
*மனையாள் சுகம்
*மாக்கோலம்
*மாலைநேரத்து மயக்கம்
*மாவிலைத்தோரணம்
*மானஸதேவி
*மீட்டாத வீணை
*முதல்யுத்தம்
*முதிர்கன்னி
*முத்துக்களோ பெண்கள்
*முந்தானை ஆயுதம்
*முள்முடிச்சு
*மேய்ச்சல் மைதானம்
*யானைவேட்டை
*ராஜகோபுரம்
*ராஜ்யம்
*வர்ணவியாபாரம்
* வன்னிமரத்தாலி
*வாலிபவேடம்
*வாழையடி வாழை
*விழித்துணை
*வெள்ளைத்தாமரை
*வெள்ளைத்துறைமுகம்
*வெற்றிலைக்கொடி
*வேட்டை
*ஜீவநதி
*[[அப்பம் வடை தயிர் சாதம்]]
*[[உடையார்]] (6 பகுதிகள்)
*[[கங்கைகொண்ட சோழன்]] (4 பகுதிகள்)
======கட்டுரைகள்======
*காதலாகிக் கனிந்து
*ஞாபகச் சிமிழ்
*சூரியனோடு சில நாட்கள்
*அந்த ஏழு நாட்கள்
======சிறுகதைத் தொகுப்புகள்======
*இனிது இனிது காதல் இனிது
*சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
*சுகஜீவனம்
*கடற்பாலம்
====== கவிதைத் தொகுப்புகள்======
*விட்டில்பூச்சிகள்
======ஆன்மிகம்======
*விசிறி சாமியார் (1991 திசம்பர்)
*பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
*குரு
*மகாபாரதம்
*ராமாயணம்
*ஸ்ரீ ரமண மகரிஷி (2012, விகடன் பிரசுரம்)
======தன்வரலாறு======
*முன்கதைச் சுருக்கம்
*இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
*ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்
*காதலாகிக் கனிந்து


=== திரையுலக விருதுகள் ===
== உசாத்துணை ==
*[http://writerbalakumaran.com/ எழுத்துச்சித்தர் பாலகுமாரன்]
*[http://writerbalakumaran.com/ எழுத்துச்சித்தர் பாலகுமாரன்]
*[https://www.hindutamil.in/news/blogs/562783-writer-balakumaran-birthday.html பார்வையை மாற்றிய பாலகுமாரன் | writer balakumaran birthday - hindutamil.in]
*[https://www.hindutamil.in/news/blogs/554579-writer-balakumaran.html ’நண்பன், சகோதரன், நல்லாசிரியன்... பாலகுமாரன்!’ - எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள் | writer balakumaran - hindutamil.in]
*[https://www.jeyamohan.in/30864/ பாலகுமாரனின் உடையார் பற்றி | எழுத்தாளர் ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/7822/ பாலகுமாரனும் வணிக இலக்கியமும் | எழுத்தாளர் ஜெயமோகன்]
* [https://dhinasari.com/literature/7527-interview-with-writer-balakumaran-2.html அமரர் எழுத்தாளர் பாலகுமாரன்..! எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்! - Dhinasari Tamil]
*[https://siliconshelf.wordpress.com/category/balakumaran/ Balakumaran – சிலிகான் ஷெல்ஃப்]
*[https://balakumaranpesukirar.blogspot.com/ பாலகுமாரன் பேசுகிறார்]
*[https://writerbala.blogspot.com/2009/10/4_10.html எழுத்து சித்தர் பாலகுமாரன்: பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 4]
*[https://balakumaran-writer.blogspot.com/ http://balakumaran-writer.blogspot.com/]
*[https://www.panippookkal.com/ithazh/archives/15681 எழுத்தாளர் பாலகுமாரன்  : பனிப்பூக்கள்]
*[https://www.aanthaireporter.com/writerbalakumaran-died/ இரும்புக் குதிரைகள் படைத்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web]
*[https://yarl.com/forum3/topic/120112-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/ பாலகுமாரன் பேட்டி/]
*[https://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_9.html பாலகுமாரன் எழுதிய வாழ்க்கை வரலாறுகள்]
*[http://charuonline.com/blog/?p=6813 சாரு நிவேதிதா- பாலகுமாரன் அஞ்சலி]
*[https://aekaanthan.wordpress.com/2018/05/21/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ அனேகாந்தன் - பாலகுமாரன் பற்றி]
*[https://valamonline.in/2018/07/blog-post_89.html பாலகுமாரன்: ஒரு பெருந்துவக்கத்தின் மறைவு | அனீஷ் கிருஷ்ணன் நாயர்]
*அ[https://dhinasari.com/literature/7527-interview-with-writer-balakumaran-2.html மரர் எழுத்தாளர் பாலகுமாரன்..! எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்!]
== அடிக்குறிப்புகள் ==
<references />


* தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:Spc]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 10:12, 24 February 2024

பாலகுமாரன்

பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூகநாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மீகவாதி. இந்து ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் பக்திநூல்களையும் புராண மறுஆக்கக் கதைகளையும் எழுதியவர். தன் காலகட்டத்தின் பொதுவான உளநெருக்கடிகளையும் பாலியல் சிக்கல்களையும் ஆன்மிகத்தேடல்களையும் புனைவுகளாக்கியவர் என்பதனால் பெரும் வாசக எண்ணிக்கை கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தார்.

பிறப்பு, கல்வி

பாலகுமாரன்

பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் ஜூலை 5, 1946-ல் வைத்தியநாதனுக்கும் சுலோச்சனாவுக்கும் பிறந்தார். சுலோச்சனா ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். பாலகுமாரன் பதினொராம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றார். பாலகுமாரனின் வாழ்க்கையில் ஆசிரியையாக பணிபுரிந்த அவர் அன்னை மிகுந்த தாக்கத்தை உருவாக்கியவர். அவர் எழுதக் காரணமாக அமைந்தவர். அவர் தந்தை வைத்தியநாதன் பற்றி பாலகுமாரன் மிகுந்த கசப்புடன் எழுதியிருக்கிறார். அவர் கோழை என்றும், மூர்க்கன் என்றும் தன் மனைவியை கொடுமை செய்தவர் என்றும் பதிவுசெய்திருக்கிறார். இளமையில் பாலகுமாரனை சிறந்த வாசகனாக ஆக்கிய அன்னை அவரை எழுத்தாளர் ஆகவும் ஊக்கம் அளித்தார்.

தனிவாழ்க்கை

பாலகுமாரன் மனைவியருடன்

பாலகுமாரன் 1969-ம் ஆண்டு சென்னையிலுள்ள டஃபே என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் திரைத்துறையில் பணியாற்றும்பொருட்டு அந்த வேலையை விட்டுவிட்டார். திரை எழுத்தாளராகவும் முழுநேர எழுத்தாளராகவும் வாழ்ந்தார். பாலகுமாரனுக்கு இரு மனைவியர். கமலா, சாந்தா. மகன் சூர்யா, மகள் ஸ்ரீகெளரி.

பாலகுமாரன் அவர் நண்பர்கள் மாலன், சுப்ரமணிய ராஜு இருவராலும் ஆழ்ந்த செல்வாக்குக்கு உட்பட்டவர். அவர்கள் ஒரு குழுவாக சிற்றிதழ்களில் இருந்து வணிக இதழ்களுக்குச் சென்றனர். பாலகுமாரன் மட்டுமே புகழ்பெற்றார். பாலகுமாரன் கமல்ஹாசன், பாலசந்தர் ஆகிய திரை ஆளுமைகளுக்கு அணுக்கமானவர்.

இலக்கியவாழ்க்கை

பாலகுமாரன்
சிற்றிதழ்க்காலம்

பாலகுமாரன் சென்னையில் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் நடத்திவந்த கசடதபற சிற்றிதழ் குழுவில் இளம் வாசகராக ஈடுபட்டார். 'டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது. கசடதபற குழுவில் ஒருவராகவும், சிற்றிதழ் சார் படைப்பாளியாகவும் அறியப்பட்டார்

பொதுவாசிப்பு காலகட்டம்

சாவி இதழை தொடங்கியபோது அதன் ஆசிரியர் சாவி இளம்தலைமுறை எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வர விரும்பினார். அன்று தி.ஜானகிராமனின் செல்வாக்குடன், ஆண்பெண் உறவு சார்ந்து, பொதுவாசிப்புக்குரிய உணர்ச்சிகரமான நேரடி நடையுடன் எழுதிக்கொண்டிருந்த இளைஞர்குழு ஒன்றை சாவி இதழுக்கு கொண்டுசென்றார். பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜு, கார்த்திகா ராஜ்குமார், தேவகோட்டை.வா.மூர்த்தி, இந்துமதி போன்றவர்கள் சாவியில் எழுதத் தொடங்கினர். பாலகுமாரன் சாவி இதழில் சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுதினார். பல்வேறு ஆளுமைகளை பேட்டிகண்டு எழுதினார். பாலகுமாரனின் சிறுகதைகள் பொதுவாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டன. நர்மதா பதிப்பக வெளியீடாக வந்த சின்னச்சின்ன வட்டங்கள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

டஃபே டிராக்டர் நிறுவனத்தில், நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அந்த அனுபவங்களை 1980-ல் ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். 1981-ல் அது நூலாக வெளிவந்தது.மெர்க்குரிப் பூக்கள் நாவல் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து வார இதழ்களில் தொடர்கதைகளை எழுதினார். ஆனந்த விகடனில் வெளியான கரையோர முதலைகள், கல்கியில் வெளியான இரும்புக்குதிரைகள் போன்ற தொடர்கள் பெரும்புகழை அவருக்கு தேடித்தந்தன. எண்பதுகளில் இளைஞர்களின் ரசனையில் முதன்மை இடம் பிடித்த எழுத்தாளராக கருதப்பட்டார்.

ஆன்மிக காலகட்டம்

தன் பொதுவாசிப்புக்குரிய எழுத்துக்களில் ஆண்பெண் உறவுச்சிக்கல்களை முதன்மையாக எழுதிவந்த பாலகுமாரன் 1990ல் யோகி ராம் சுரத்குமார் உறவால் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ஆன்மிகஞானிகளின் வாழ்க்கையை ஒட்டிய சிறிய நாவல்களை எழுதினார். ஆன்மிக விளக்கம் அளிக்கும் கட்டுரைகளையும் எழுதினார். சோழர் வரலாற்றில் ஆர்வம் கொண்டு, தீவிரமான ஆய்வுக்குப்பின் உடையார், கங்கைகொண்ட சோழன் ஆகிய நாவல்களை எழுதினார். அவற்றிலும் அவருடைய ஆன்மிகப்பார்வை வெளிப்பட்டது.பாலகுமாரன் இறுதிக்காலத்தில் மகாபாரதம் ராமாயணம் இரண்டுக்கும் நவீன உரைநடை வடிவங்களை எழுதினார். ராமாயணம் உரைநடை வடிவை முழுமை செய்யவில்லை.

பாலகுமாரன் தாயுடன்
பாலகுமாரன்

திரைப்படம்

பாலகுமாரன் 1987-ல் மணிரத்னத்தின் நாயகன் படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பாலசந்தர் இயக்கத்தில் பாலகுமாரன் எழுதிய சிந்து பைரவி தேசிய விருதுபெற்ற படம்.

இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்கினார். தாயுமானவன் என்னும் சின்னத்திரைத்தொடரையும் இயக்கியுள்ளார். பாலகுமாரன் மொத்தம் 27 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

பாலகுமாரன் குடும்பம்

ஆன்மிகம்

பாலகுமாரன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களை தன் ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டார். பக்தியும் வேதாந்தமும் கலந்த ஒரு வழிபாட்டுமுறையை தனக்காக உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஆன்மிக மாணவர்களும் இருந்தனர்.

மறைவு

மே 14, 2018 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று காலமானார்.

பாலகுமாரன் யோகி ராம் சுரத் குமாருடன்

இலக்கிய இடம்

பாலகுமாரன் இரண்டு புனைவுமரபுகளின் இணைப்பு. பாலகுமாரன் தனக்கு எழுத்தின் நுணுக்கங்களை சொல்லித்தந்ததாக எழுத்தாளர் சுஜாதாவைக் குறிப்பிடுகிறார். பாலகுமாரனின் படைப்புகளில் தி.ஜானகிராமன் எழுத்துக்களின் செல்வாக்கு உண்டு. அதேபோல வணிகக்கேளிக்கை எழுத்து மரபில் வந்த ஆர்வி, பிவிஆர் போன்றவர்களின் எழுத்துமுறையின் நீட்சி அவர். கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துமுறையால் தூண்டுதல்கொண்ட இளைஞர்களில் ஒருவராக அவர் எழுத ஆரம்பித்தார். ஆண்பெண் உறவின் நுட்பமான உளவியல் நாடகங்களை, புரிதல்களை எழுதுவது இந்த மரபு. பாலகுமாரன் இவ்விரு மரபுகளையும் இணைத்தவர். பாலகுமாரனின் நடை பேச்சுமொழிக்கு மிக அண்மையானது. ஆசிரியர் வாசகர்களிடம் நேரடியாக கதையைச் சொல்வதுபோன்ற பாவனை கொண்டது.

தனக்கு முன்பிருந்த வணிகக்கேளிக்கை எழுத்தில் இருந்த சலிப்பூட்டும் இரு கூறுகளை பாலகுமாரன் களைந்தார். ஒன்று, சுழன்று சுழன்றுசெல்லும் கதைப்போக்கு. இரண்டு, செயற்கையான நாடகத்தருணங்கள். பதிலுக்கு நவீனத்துவ இலக்கிய எழுத்துமுறையில் இருந்து பெற்றுக்கொண்ட கச்சிதமான சுருக்கமான கதைசொல்லும் முறையை வணிகக்கேளிக்கை எழுத்துக்கு அறிமுகம் செய்தார். செயற்கையான நாடகத்தருணங்களை உருவாக்காமல் அன்றாடத் தருணங்களில் உள்ள உளவியல் ஆழத்தை சுட்டிக்காட்டி அழுத்தமான உணர்ச்சிகளை வாசகர்களிடம் உருவாக்கினார். ஆகவே அவருடைய எழுத்துக்கள் முற்றிலும் புதிய அனுபவமாக வாசகர்களுக்கு இருந்தன.

நவீனத் தமிழிலக்கியத்தில் உருவாகி வலுப்பெற்றிருந்த புதுக்கவிதையின் அழகியலையும் பாலகுமாரன் நாவல்களுக்குள் கொண்டுவந்தார். கரையோரமுதலைகள் போன்ற நாவல்களில் உருவகத்தன்மை கொண்ட கவிதை நேரடியாகவே இணைக்கப்பட்டிருந்தது. அவை பொதுவாசகர்களுக்கு புதியவை. கசடதபற இலக்கியக்குழுவில் இருந்து பெற்றுக்கொண்ட நவீனக் கவித்துவம் தொடக்ககால பாலகுமாரன் கதைகளின் தனித்தன்மையாக இருந்தது.பாலகுமாரன் பி.வி.ஆர் போல வெவ்வேறு வாழ்க்கைக் களங்களை ஆராய்ச்சி செய்து அவற்றில் தன் நாவல்களை அமைத்தார். அவையும் அவருடைய நாவல்களுக்கு புதுமையை அளித்தன. இரும்புக்குதிரைகள் லாரி ஓட்டுநர்களின் உலகைச் சார்ந்த நாவல்

பின்னாளில் பாலகுமாரன் ஆன்மிக உள்ளடக்கம் கொண்ட நாவல்களையும் புராண மறு ஆக்கங்களையும் எழுதினார். பிற்காலத்தைய படைப்புகளில் உடையார், கங்கைகொண்ட சோழன் ஆகிய இரு நாவல்களும் அளவில் மிகப்பெரியவை. இவற்றில் உடையார் பாலகுமாரனின் முக்கியமான இலக்கியப் பங்களிப்பு. ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தின் விரிவான சித்தரிப்பை, தஞ்சைப் பெரியகோயில் அமைத்தல் என்னும் பண்பாட்டு பெருநிகழ்வின் காட்சியை அளித்தமையால் அந்நாவல் இலக்கிய முக்கியத்துவம் உடையது. பாலகுமாரனின் சிறந்த நாவல்கள் மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், இரும்புக்குதிரைகள் ஆகியவை கருதப்படுகின்றன. சமகாலப்பிரச்சினைகளைப் பேசும் தன்மையைக் கடந்து நிற்கும் அவருடைய முதன்மைப் படைப்பு அப்பம் வடை தயிர் சாதம் தஞ்சையில் இருந்து சென்னை வரை சென்ற நூற்றாண்டில் பிராமணர்களின் வாழ்க்கையின் நகர்வை குடும்பப்பின்னணியில் எழுதிய குறிப்பிடத்தக்க ஆக்கம் அது.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), 1981
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • தமிழ்நாடு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
  • தமிழ்நாடு மாநில விருது (கடற்பாலம் - சிறுகதை தொகுப்பு)
  • கலைமாமணி
  • கோவை புத்தகக் கண்காட்சியில் கொடிசியா-பப்பாசி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது - 2016
  • கவிஞர் வாலி விருது, 2017
  • மா.போ.சி விருது

திரையுலக விருதுகள்

  • தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்), 1994

படைப்புகள்

நாவல்கள்

பாலகுமாரன் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றின் நூல்பட்டியல் இணைப்பு[1]

இவற்றில் முக்கியமானவை சில

  • மெர்க்குரிப் பூக்கள்
  • கரையோர முதலைகள்
  • இரும்புக்குதிரைகள்
  • 333 அம்மையப்பர் தெரு
  • அகல்யா
  • அடுக்கு மல்லி
  • அத்திப்பூ
  • அப்பா
  • அமிர்த யோகம்
  • அரசமரம்
  • அருகம்புல்
  • அவரும் அவளும்
  • அவனி
  • அன்புக்கு பஞ்சமில்லை
  • அன்புள்ள மான்விழியே
  • ஆசைக்கடல்
  • ஆசை என்னும் வேதம்
  • ஆயிரம்கண்ணி
  • ஆருயிரே மன்னவரே
  • ஆனந்தவயல்
  • இது போதும்
  • இதுதான் காதல் என்பதா?
  • இரண்டாவது கல்யாணம்
  • இரண்டாவது சூரியன்
  • இரும்புக்குதிரைகள்
  • இனி எல்லாம் சுகமே
  • இனி என் முறை
  • இனிய இரவு எழுந்திரு
  • இனிய யட்சிணி
  • ஈரக்காற்று
  • உச்சி திலகம்
  • உச்சிதனை முகர்ந்தால்
  • உத்தமன்
  • உள்ளம் கவர் கள்வன்
  • உயிர்ச்சுருள்
  • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
  • எங்கள் காதல் ஒரு தினுசு
  • என் அன்பு மந்திரம்
  • என் அன்புக்காதலா
  • என் கண்மணித்தாமரை
  • என் கல்யாண வைபோகமே
  • என் காதல் கண்மணி
  • என் மனது தாமரைப்பூ
  • என்றும் மாறா வெண்மை
  • என்றென்றும் அன்புடன்
  • என்னருகே நீ இருந்தால்
  • என்னவளே அடி என்னவளே
  • என்னுயிரும் நீயல்லவோ
  • என்னுயிர் தோழி
  • என்னைச்சுற்றி சில நடனங்கள்
  • ஏதோ ஒரு நதியில்
  • ஏழாவது காதல்
  • ஏனோ தெரியவில்லை
  • ஒரு காதல் நிவந்தம்
  • ஒரு சொல்
  • ஒரு பொல்லாப்புமில்லை
  • ஒருவழிப்பாதை
  • ஒன்றானவன்
  • கடலோரக் குருவிகள்
  • கடல்நீலம்
  • கடவுள் வீடு
  • கடற்பாலம்
  • கடிகை
  • கண்ணாடிக் கோபுரங்கள்
  • கண்ணே கலைமானே
  • கண்ணே வண்ண பசுங்கிளியே
  • கதைகதையாம் காரணமாம்
  • கருணைமழை
  • கர்ணனின் கதை
  • கல்யாண மாலை
  • கல்யாணத்தேர்
  • கல்யாணமுருங்கை
  • கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
  • கல்லூரிப்பூக்கள்
  • கவிழ்த்த காணிக்கை
  • கள்ளி
  • கற்புவெறி
  • கற்றுக்கொண்டால் குற்றமில்லை
  • கனவுகண்டேன் தோழி
  • கனவுகள் விற்பவன்
  • காசுமாலை
  • காசும் பிறப்பும்
  • காதல் அரங்கம்
  • காதற் கிளிகள்
  • காதல் சொல்ல வந்தேன்
  • காதல் ரேகை
  • காதல் வரி
  • காதல் வெண்ணிலா
  • காதற்பெருமான்
  • காமதேனு
  • காலடித்தாமரை
  • காற்றுக்கென்ன வேலி
  • கானல்தாகம்
  • கிருஷ்ண மந்திரம்
  • குங்குமத்தேர்
  • குசேலர்
  • குரு
  • குருவழி
  • குன்றிமணி
  • கூடு
  • கூரைப்பூசணி
  • கைவீசம்மா கைவீசு
  • கொஞ்சும் புறாவே
  • கொம்புத்தேன்
  • சக்கரவாஹம்
  • சக்தி
  • சரவிளக்கு
  • சரிகை வேட்டி
  • சிம்மாசனம்
  • சினேகமுள்ள சிங்கம்
  • சினேகிதன்
  • சுகஜீவனம்
  • சுந்தர காண்டம்
  • சுந்தரி கண்ணால் ஒரு செய்தி
  • சுழல் காற்று
  • செண்பகத்தோட்டம்
  • செந்தூரச்சொந்தம்
  • செப்புப்பட்டயம்
  • செவ்வரளி
  • சொர்க்கம் நடுவிலே
  • ஞாபகச்சிமிழ்
  • தங்கக்கை
  • தங்கச்சுருள்
  • தண்ணீர்த்துறை
  • தலையணைப்பூக்கள்
  • தனரேகை
  • தனிமைத்தவம்
  • தாசி
  • தாயுமானவன்
  • தாலிபூஜை
  • தாழம்பூ
  • திருஞானசம்பந்தர்
  • திருப்பூந்துருத்தி
  • திருமணத்தீவு
  • திருவடி
  • துணை
  • துளசி
  • தெம்மாங்கு
  • தேடிக்கண்டுகொண்டேன்
  • தொட்டால்பூ மலரும்
  • தொப்புள்கொடி தோழன்
  • நந்தாவிளக்கு
  • நல்ல முன்பனிக்காலம்
  • நானே எனக்கொரு போதிமரம்
  • நான்காம் பிறை
  • நிகும்பலை
  • நிலாக்கால மேகம்
  • நிலாவே வா
  • நிழல்யுத்தம்
  • நீ பௌர்ணமி
  • நீ வருவாய் என
  • நெருப்புக்கோழி
  • நெல்லுக்கிறைத்த நீர்
  • நெல்லுச்சோறு
  • நெளிமோதிரம்
  • நேசமில்லாதவர்கள்
  • நேற்றுவரை ஏமாற்றினாள்
  • பகல் விளக்கு
  • பச்சைவயல் மனது
  • பட்டாபிஷேகம்
  • பணம் காய்ச்சி மரம்
  • பந்தயப்புறா
  • பயணிகள் கவனிக்கவும்
  • பனிவிழும் மலர்வனம்
  • பாகசாலை
  • பிரம்புக்கூடை
  • பிருந்தாவனம்
  • புருஷவிரதம்
  • புஷ்பக விமானம்
  • பூந்தோட்டம்
  • பெரிய புராண கதைகள்
  • பேய்க்கரும்பு
  • பொன்வட்டில்
  • பொன்னார்மேனியனே
  • போகன்வில்லா
  • மஞ்சக்காணி
  • மஞ்சள்வானம்
  • மணல்நதி
  • மண்ணில் தெரியுது வானம்
  • மதுமிதா
  • மரக்கால்
  • மனக்கோயில்
  • மனம் உருகுதே
  • மனையாள் சுகம்
  • மாக்கோலம்
  • மாலைநேரத்து மயக்கம்
  • மாவிலைத்தோரணம்
  • மானஸதேவி
  • மீட்டாத வீணை
  • முதல்யுத்தம்
  • முதிர்கன்னி
  • முத்துக்களோ பெண்கள்
  • முந்தானை ஆயுதம்
  • முள்முடிச்சு
  • மேய்ச்சல் மைதானம்
  • யானைவேட்டை
  • ராஜகோபுரம்
  • ராஜ்யம்
  • வர்ணவியாபாரம்
  • வன்னிமரத்தாலி
  • வாலிபவேடம்
  • வாழையடி வாழை
  • விழித்துணை
  • வெள்ளைத்தாமரை
  • வெள்ளைத்துறைமுகம்
  • வெற்றிலைக்கொடி
  • வேட்டை
  • ஜீவநதி
  • அப்பம் வடை தயிர் சாதம்
  • உடையார் (6 பகுதிகள்)
  • கங்கைகொண்ட சோழன் (4 பகுதிகள்)
கட்டுரைகள்
  • காதலாகிக் கனிந்து
  • ஞாபகச் சிமிழ்
  • சூரியனோடு சில நாட்கள்
  • அந்த ஏழு நாட்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • இனிது இனிது காதல் இனிது
  • சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
  • சுகஜீவனம்
  • கடற்பாலம்
கவிதைத் தொகுப்புகள்
  • விட்டில்பூச்சிகள்
ஆன்மிகம்
  • விசிறி சாமியார் (1991 திசம்பர்)
  • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
  • குரு
  • மகாபாரதம்
  • ராமாயணம்
  • ஸ்ரீ ரமண மகரிஷி (2012, விகடன் பிரசுரம்)
தன்வரலாறு
  • முன்கதைச் சுருக்கம்
  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
  • ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்
  • காதலாகிக் கனிந்து

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page