under review

பம்மல் சம்பந்த முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(104 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:பம்மல் சம்பந்த முதலியார்.jpg|alt=பம்மல் சம்பந்த முதலியார்|thumb|பம்மல் சம்பந்த முதலியார்]]
[[File:பம்மல் சம்பந்த முதலியார்2.png|thumb|பம்மல் சம்பந்த முதலியார்]]
பம்மல் சம்பந்த முதலியார் (ஞானசம்பந்தம்) (பிப்ரவரி 1, 1873 - செப்டெம்பர் 24, 1964) தமிழ் நாடகங்களை உரைநடை வடிவில் எழுதிய முன்னோடி நாடக ஆசிரியர். தமிழ் நாடக உலகு குறித்த பல நூல்களை எழுதியவர். வழக்கறிஞர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர்.
பம்மல் சம்பந்த முதலியார் (பிப்ரவரி 1, 1873 - செப்டெம்பர் 24, 1964) நாடக முன்னோடிகளில் ஒருவர். வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர். சுகுணவிலாச சபை என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடகக்கலையின் மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டார். தமிழில் சொந்த நாடகங்களையும், தழுவல் நாடகங்களையும் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நாடகங்களை மொழிபெயர்த்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சம்பந்த முதலியார் சென்னையை அடுத்துள்ள பம்மலில் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாளுக்கு பிப்ரவரி 1, 1873 அன்று பிறந்தார். இவர் தந்தை வேதரங்கம் முதலியார் 1872-ஆம் ஆண்டு சிவதீட்சை பெற்றவர். அந்த காலகட்டத்தில் பிறந்ததனால் மகனுக்கு ஞானசம்பந்தம் எனப் பெயரிட்டார்.  
பம்மல் சம்பந்த முதலியார் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இணையருக்கு பிப்ரவரி 1, 1873-ல் பிறந்தார். இயற்பெயர் திருஞான சம்பந்தம். விஜயரங்க முதலியார் மதுரை திருஞான சம்பந்தர் மடத்து அடியவரிடம் 1872-ல் சிவதீட்சை எடுத்தவராதலால் தன் மகனுக்கு 'திருஞான சம்பந்தம்' என்று பெயர் சூட்டினார். தந்தை தமிழ் ஆசிரியராகவும், கல்வித்துறை ஆய்வாளராகவும் இருந்தவர். தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதனால் பம்மல் சம்பந்தனாருக்கு சிறுவயது முதலே புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தது.
 
[[File:பம்மல் சம்மந்த முதலியார்1.png|thumb|311x311px|பம்மல் சம்மந்த முதலியார்]]
வேதரங்கம் முதலியார் தமிழ் ஆசிரியராகவும், கல்வித்துறை ஆய்வாளராகவும் இருந்தவர். தமிழ் நூல்களை வெளியிட்டும் வந்தார். அவர்களது வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. எனவே சம்பந்தர் இளமை முதலே வாசிப்பின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்.  
அக்கால வழக்கப்படி முதலில் திண்ணைப் பள்ளி்க்கூடத்திலும் பிறகு பிராட்வேயிலிருந்து 'ஹிந்து புரொபரைடர் என்ற பள்ளிக்கூடத்திலும் பிறகு செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கூடத்திலும் பள்ளிக்கல்வி பயின்றார். 1885-ல் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார். 1886-ல் பச்சையப்பன் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டபடிப்பு முதல் வகுப்பில் தேறினார். 1896-ல் சட்டக் கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
 
==தனிவாழ்க்கை==
திண்ணைப் பள்ளியில் கல்வியைத் துவங்கிய சம்பந்தம், சென்னை பிராட்வேயில் இருந்த இந்து புரொபரைடரி பள்ளியிலும், பின்னர் கீழ்பாக்கத்தில் இருந்த கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். 1885-ல் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார்.  
1890-ல் திருமணம் நடந்தது. 1898-ல் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். சுந்தரம் சாஸ்திரியார் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியில் சேர்ந்தார். சர்.சி.பி. ராமசாமி ஐயரின் வேண்டுகோளின்படி 1924-ம் ஆண்டு சிறு வழக்கு நீதிமன்றத்தின் நீதிபதியானார். 1924 முதல் 1928 வரை நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் மனைவி காலமானார்.
 
==சமயப் பணிகள்==
மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டபடிப்பு முதல் வகுப்பில் தேறினார். பின்னர் சட்டக்கல்லூரியில் பயின்று 1896-ஆம் ஆண்டு சட்டத் தேர்வில் தேறி சுந்தரம் சாஸ்த்ரியார் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியில் சேர்ந்தார்.  
[[File:பம்மல் சம்பந்த முதலியார்3.png|thumb|பம்மல் சம்பந்த முதலியார்|235x235px]]
 
சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது. கோயில் திருக்குளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.
== தனிவாழ்க்கை ==
==சமூகப் பணிகள்==
[[File:Pammal Sambandha Mudaliar.jpg|alt=பம்மல் சம்பந்த முதலியார்|thumb|பம்மல் சம்பந்த முதலியார்]]
சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் செனட் அங்கத்தினராக இருந்தார். இந்து தர்ம சமாஜத்தில் உறுப்பினராக இருந்தார். விளையாட்டுத்துறை தொடர்பான குழுக்களில் அங்கத்தினராக இருந்து பணியாற்றினார்.
சம்பந்த முதலியாருக்கு 1890-ல் திருமணம் நடந்தது.
==இலக்கிய வாழ்க்கை==
 
[[File:ஹாஸ்ய வியாசங்கள்.jpg|thumb|ஹாஸ்ய வியாசங்கள்]]
1898 முதல் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1924 முதல் 1928 வரை நீதிபதியாகவும் வேலை பார்த்தார்.
நாடகங்களை உரை நடை வடிவில் எழுதினார். ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்தார். வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு சகுந்தலை நாடகத்தை மானியர் வில்லியம்ஸ் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அந்நாடகத்தைத் தமிழில் சம்பந்தர் மொழிபெயர்த்தார். சிவாலயங்கள் பற்றி நான்கு பாகங்கள் கொண்ட நூல் எழுதினார். 1946-ல் அந்நூல் அச்சேற திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் பொருளுதவி செய்தார். 'காலக் குறிப்புகள்', 'சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்', 'நாடகத் தமிழ்' போன்ற நூல்களை எழுதினார். பம்மல் சம்பந்தரின் நூல்களுக்குப் பரிதிமாற் கலைஞர், டாக்டர் [[உ.வே.சாமிநாதையர்|உ.வே.சா]], [[பூவை. கலியாண சுந்தர முதலியார்]] போன்றோர் சாற்றுக் கவிகள் எழுதினர்.
 
வழக்கறிஞர் ஆவதற்கு முன்னரே சம்பந்த முதலியாருக்கு நாடகத்துறை மீது ஆர்வம் இருந்தது. “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்றழைக்கப்பட்ட பல்லாரி வி. கிருஷ்ணமாச்சாரியலு என்ற வழக்கறிஞர் சம்பந்தனாரின் நெருங்கிய நண்பர். அவர் தனது அனுபவத்தின் அடிப்படையில் வழக்கறிஞராக வெற்றி பெற வேண்டுமானால் நாடகத்தை ஒதுக்கி விடுமாறு அறிவுரை கூறினார். சம்பந்தனார் வழக்கறிஞராக இருந்து கொண்டே நாடகத்திலும் ஈடுபட விரும்பினார். எனவே நேரத்தை அதற்கேற்ப வகுத்துக் கொண்டு பகற்பொழுதை வழக்கறிஞர் பணிகளுக்கும் மாலை நேரத்தை முழுமையாக நாடகத்துக்குமென ஒதுக்கிக்கொண்டார்.
 
வழக்கறிஞர் துறையிலும் தேர்ந்தவர் எனப் பெயர் பெற்றார். சர்.சி.பி. ராமசாமி ஐயரின் வேண்டுகோளின் படி 1924-ஆம் ஆண்டு சிறு வழக்கு நீதிமன்றத்தின் நீதிபதியானார்.
 
== சமயப் பணிகள் ==
பம்மல் சம்பந்த முதலியாரின் குடும்பம் சைவ சமயப் பிண்ணனி கொண்டது. இவரது தந்தை சென்னை ஏகாம்பரேஸ்வர கோவிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோவிலுக்கும் அறங்காவலராக இருந்தார். சிறுவயது முதலே சமயம் சார்ந்த பணிகளில் ஈடுபாடும் பக்தி உணர்வும் நிரம்பியிருந்த சம்பந்தம், 1900-ஆம் ஆண்டு மயிலை கபாலீஸ்வரர் ஆலய அறங்காவலராகப் பணியேற்றார். 24 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். ஆலய நிர்வாகத்தில் கோவில் வரவு செலவுகளை அறங்காவலர் நேரடியாக செய்யாது வங்கிக் கணக்குகள் மூலமாகவே செய்ய வேண்டும் என்பது முதலிய பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார், ஊழல் குறைய வழிவகுத்தார்.  
 
== சமூகப் பணிகள் ==
1898 முதல் சென்னை மதுவிலக்கு சங்கத்தில் சேர்ந்து மதுப்பழக்கத்தை எதிர்த்து மக்களிடம் பேசி வந்தார். 64 ஆண்டுகள் இதன் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
 
தென்னிந்திய விளையாட்டுக் கழகத்தில் உறுப்பினராகவும் பின்னர் துணைத்தலைவராகவும் செயலாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் ஆட்சிக் குழுவிலும் இருந்திருக்கிறார். பள்ளிப்பாட நூல் இலக்கியக் கழகத்தில் உறுப்பினராக இருந்து கல்வித்திட்ட மேம்பாட்டுக்கும் பணிபுரிந்திருக்கிறார்.  
 
== நாடகத்துறைப் பணி ==
[[File:SV Saba.jpg|alt=சுகுண விலாச சபை நாடகக்குழுவினர்|thumb|சுகுண விலாச சபை நாடகக்குழுவினர்]]
[[File:பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்1.jpg|alt=பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்|thumb|பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்]]
[[File:பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்2.jpg|alt=பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்|thumb|பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்]]
[[File:பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்3.jpg|alt=பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்|thumb|பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்]]
தமிழில் நவீன வடிவில் நாடகங்களை எழுத வேண்டுமென பம்மல் சம்பந்த முதலியார் எண்ணினார். மேலைநாட்டு நாடகங்களையும் வடமொழி நாடகங்களையும் நன்கு கற்றார்.  
 
1891-ல் சென்னையில் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். முதன்முதலில் 1883-ல் புஷ்பவல்லி என்ற நாடகத்தை உரைநடை வடிவில் எழுதி சென்னை விக்டோரியா ஹாலில் அரங்கேற்றினார். புராண இதிகாச வடிவ நாடகங்களே புகழ் பெற்றிருந்த அக்காலகட்டத்தில் கர்ணன், சிறுத்தொண்டர் போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து உலக நடப்புக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து முயன்று பார்த்தார். அது மக்களிடம் வரவேற்பு பெற்ற பிறகு சமூகக் கதைகளை நாடக வடிவில் எழுதினார்.
 
பாடல்கள் நிறைந்த நாடக மேடைகளில் பாடல் இல்லாமல் உரைநடையாகவே நாடகங்களை இயற்றியிருக்கிறார். இசை நாடகத்துக்கு இடையே பாடலாக இல்லாமல் பின்னணிக்கு உதவும் வகையில் இடம்பெறச் செய்தார். வசனங்களில் அடுக்குமொழிகளை விடுத்து நேரிடையான எளிய வாக்கியங்களை அமைத்தார்.<ref>[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ1l0py தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்]</ref>
 
பம்மல் சம்பந்த முதலியார் பலவகையான நாடகங்களை எழுதி அரங்கேற்றியிருக்கிறார்.<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006368_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf பம்மல் சம்பந்த முதலியார் – இந்திய இலக்கியச் சிற்பிகள் – சாகித்திய அக்காதெமி]</ref>
 
====== பேருணர்வு இன்பியல்(Serious comedy) ======
இவ்வகை நாடகங்கள் இன்பமான முடிவு கொண்டிருந்தாலும் நாடகத் தலைவனும் தலைவியும் பலவகையான துன்பங்களுக்கு உள்ளாகி அலைக்கழிக்கப் படுவார்கள். புஷ்பவல்லி, மெய்க்காதல், இரு சகோதரிகள், போன்ற நாடகங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
 
====== மென்மை இன்பியல் (Light Comedy) ======
இன்பியல் கூறாகிய நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டிருக்கும் வடிவம். சதிசக்தி, வைகுண்ட வைத்தியர், சங்கீதப் பைத்தியம், சோம்பேறி சகுனம் பார்த்தல் போன்ற நாடகங்கள் இவ்வகையிலானவை. நகைச்சுவையிலேயே அங்கதச் சுவை(sattire) மிகுந்த நாடகங்கள் மற்றொரு வகையாகும். சம்பந்த முதலியார் எழுதிய சபாபதி வரிசை நாடகங்கள் அனைத்தும் அங்கத நாடகங்கள்.
 
====== நாடக நையாண்டி (Burlesque) ======
மேடையில் ஏற்கனவே புகழ் பெற்றிருக்கும் நாடகங்களை நேர்மாறாக மாற்றி நடிப்பது நாடக நையாண்டி வகை. அரிச்சந்திரன் என்னும் புகழ்பெற்ற நாடகத்தை சந்திரகரி என்ற பெயரில் மாற்றி பொய்யன்றி ஏதும் பேசாத கதை நாயகனை வைத்து எழுதியது இவ்வகைக்கு ஒரு உதாரணம்.
 
====== துன்பியல் (Tragedy) ======
இந்திய நாட்டு மரபில் முழுவதும் துன்பியல் சுவையில் நாடகங்கள் இயற்றும் வழக்கம் இல்லாதிருந்தது. மேலை நாட்டு நாடகங்களைப் பார்த்து சிலர் துன்பியல் நாடகங்கள் எழுதத் தொடங்கினர். சம்பந்தனார் முதலில் கள்வர் தலைவன் என்ற நாடகத்தை துன்பியல் நாடகமாக எழுதினார். அதன் பிறகு இரு நண்பர்கள், உண்மையான சகோதரன் ஆகியவையும் இந்த வகைமையில் எழுதப்பட்டன.
 
====== புராண இதிகாச நாடகங்கள் ======
தன் நாடக வாழ்வின் முற்பகுதியில் யயாதி, கர்ணன், காலவ ரிஷி போன்ற பல புராண நாடகங்களை எழுதியுள்ளார். கூடுமானவரை நம்பமுடியாதவற்றை நீக்கி எழுதியது அன்று ஒரு புதுமையாகும்.
 
====== பெருவழக்கு கதை நாடகங்கள் ======
சம்பந்தனார் அரிச்சந்திரன், சாரங்கதரன், நல்லதங்காள் போன்ற பெருவழக்கு நாடகங்களை இயற்றினார்.
 
====== வரலாற்று நாடகம் ======
உண்மையாக நடைபெற்ற நிகழ்வுகளை கால உணர்வுடன் நிகழ்த்துவது வரலாற்று நாடகங்கள். புத்த அவதாரம் என்ற ஒரு வரலாற்று நாடகத்தை பம்மல் சம்பந்தம் எழுதினார்.
 
====== சமூக நாடகங்கள் ======
வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நாடகமாக அமைப்பது. பொன் விலங்குகள் என்ற சமூக நாடகத்தை 1910-ஆம் ஆண்டு சம்பந்தனார் எழுதினார். அதன் வெற்றிக்குப் பிறகு விஜயரங்கம், உத்தம் பத்தினி, தாசிப் பெண் போன்ற பல சமூக நாடகங்களை எழுதினார்.
[[File:Pammal Sambanda Mudaliar’s acceptance of royalty.jpg|alt=பம்மல் சம்பந்த முதலியார் ராயல்டி பெற்றுக் கொண்ட ரசீது|thumb|பம்மல் சம்பந்த முதலியார் ராயல்டி பெற்றுக் கொண்ட ரசீது]]
 
====== பிறமொழி நாடகங்கள் ======
வடமொழி, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு சில நாடகங்களை சம்பந்த முதலியார் கொண்டுவந்தார். அமலாதித்தன் (Hamlet), விரும்பிய விதமே (As you like it), வாணீபுரத்து வணிகன் (Merchant of Venice), மகபதி (Macbeth) இவர் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை. இவை வெறும் மொழிபெயர்ப்பாக அல்லாமல், மென் தழுவல் என்னும் முறையில் மூல நூலின் அமைப்பு முறைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு ஆங்கிலப் பெயர்களை தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டின் வழக்கங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து இயற்றியிருக்கிறார்.
 
நாடக ஆசிரியராக ஆற்றிய பணிகளைத் தவிர நடிகராகவும் இயக்குனராகவும் பல நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். பாத்திரப் பண்பு, நாடக அமைப்பு, நடிக்க வேண்டிய முறை ஆகியவை குறித்த அறிதல் இருந்தமையால் சம்பந்தனார் பல்வேறு நேர்நிலை, எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். நாடகம் நூல் வடிவில் சிறப்பாக அமைய நாடக ஆசிரியர் காரணமாவது போல மேடையேறும் போது இயக்குனரின் பங்கு முக்கியமானது. கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது, நடிகர்களை நுட்பமாகத் தூண்டி தேவையான நடிப்பை பெறுவது, தந்திரக் காட்சிகளை மேடையில் அரங்கேற்றுவது, காட்சிகளுக்கு பொருத்தமான ஒவியங்களைத் பிண்ணனித் திரையில் இடம்பெறச் செய்வது போன்ற பல கூறுகளை கையாண்டு பெயர் பெற்றிருக்கிறார்.
 
மேல்நாட்டு முறையைப் பின்பற்றி, ’பயிற்றுமுறை நாடகக் குழு’ ஒன்றை ஏற்படுத்தி, ஒத்திகை முதலிய வழக்கங்களை சீர்படுத்தி அதன் வழியாக பலரை பயிற்றுவித்தார்.
 
== விருதுகள் ==
 
* பத்மபூஷண் - 1959
* சங்கீத நாடக அகாதமி விருது - 1959
* நாடகப் பேராசிரியர் விருது - 1916
 
== நாடக்ககலை மதிப்பீடு ==
பம்மல் சம்பந்த முதலியார் காலத்தில் பல விதமான மாற்றங்கள் நாடக மேடையில் வந்தன. புதுமையான காட்சி அமைப்புகளை பலவிதமான உத்திகள் மூலம் அமைத்தனர். மரபை வளர்க்கும் எண்ணம் கொண்டவராக இருந்தாலும் கலையில் பலவிதமான புதுமைகளை செய்து பார்த்தவராக சம்பந்த முதலியார் முன்னோடியாக அறியப்படுகிறார்.
 
== மறைவு ==
1950 முதல் உலகியல் பொறுப்புகள் அனைத்தையும் மகன் வரதராஜனிடம் ஒப்படைத்துவிட்டு தனிமை வாழ்வு மேற்கொண்டார். முதுமையால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. அந்நிலையிலும் பல நூல்களை பிறரது உதவியுடன் எழுதினார்.
 
செப்டம்பெர் 24, 1964 அன்று மரணமடைந்தார்.  
 
== வாழ்க்கைப் பதிவுகள் ==
 
* ”என் சுயசரிதை” என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.
* சாகித்திய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் “பம்மல் சம்பந்த முதலியார்” என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் ஏ.என். பெருமாள் எழுதி வெளியானது.
 
== படைப்புகள் ==
[[File:Vedhalaulagam.jpg|alt=வேதாள உலகம்|thumb|வேதாள உலகம்]]
 
====== நாடகங்கள் ======
தமிழ் நாடகத் தந்தை என்றழைக்கப்பட்ட சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமான சில<ref>[https://koottanchoru.wordpress.com/2009/05/08/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ பம்மல் சம்பந்த முதலியார் (1873 – 1967) – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 18 | கூட்டாஞ்சோறு (koottanchoru.wordpress.com)]</ref>:
 
* மனோஹரா (1895 - சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
* லீலாவதி சுலோசனா - (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
* புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
* சுந்தரி - (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
* சாரங்கதரா (198 முறை)
* கள்வர் தலைவன்
* காலவ ரிஷி (1899 - 307 முறை மேடையேறியது)
* காதலர் கண்கள் (1902 - 190 முறை மேடையேற்றம்)
 
====== மொழியாக்க நாடகங்கள் ======
 
* விரும்பிய விதமே (As You Like It தமிழாக்கம்)
* வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
* அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
* மகபதி (Macbeth தமிழாக்கம்)
* சிம்ஹலநாதன் (Cymbalene தமிழ்வடிவம்)
* பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ்வடிவம்)
 
====== பிற நாடகங்கள் ======
 
* காளப்பன் கள்ளத்தனம்
 
* சாகுந்தலம்
* மாளவிகாக்கினிமித்திரம்
* விக்ரமோர்வசீயம்
* ரத்னாவளி
* ம்ருச்சகடிகம்
* யயாதி
 
* இரு நண்பர்கள்
* சபாபதி
* விஜயரங்கம்
* சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
* சதி சுலோசனா
* சுல்தான் பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
* நல்ல தங்காள்
* ஸ்த்ரீ சாஹசம்
* விருப்பும் வெறுப்பும்
 
வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:

* காலவ ரிஷி (1932)
"என் சுயசரிதை" என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலை பம்மல் சம்பந்த முதலியார் எழுதினார். நாடக மேடை நினைவுகள் ஆறு பாகங்களை 1891 தொடங்கி (1932, 1933, 1935, 1936, 1936, 1938) அவருடைய நாடக மேடை அனுபவங்களின் தொகுப்பாக எழுதினார். 1936-ல் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி என்ற நூலை நடிக்க வருபவர்களுக்கான நூலாக எழுதினார். 1964-ல் நான் கண்ட நாடகக் கலைஞர்கள் என்ற நூலை நாடக உலகின் முன்னோடிகள் பலரைக் குறித்த முக்கிய நினைவுப் பதிவுகளாக எழுதினார். மராட்டிய நாடகக் கலைஞர்களான சுப்பாராவ், குப்பண்ணாராவ், பஞ்சநாதராவ் போன்றவர்கள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழில் கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், டி.கே.சி சகோதரர்கள், சங்கர்தாஸ் சுவாமிகள், எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்ற பலர் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1938-ல் பேசும்பட அனுபவங்கள் என்ற நூலை சம்பந்த முதலியாரின் திரைப்படத் துறை அனுபவங்களாக எழுதினார். 1937-ல் "தமிழ்ப் பேசும்படக் காட்சி" என்ற நூலை திரைப்படம் தொடர்பான பல தகவல்கள், ஸ்டுடியோ, காமிரா, பலவிதமான ஷாட்கள், குளோஸ் அப் போன்ற பல திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப தகவல்களை அறிமுகம் செய்யும் நூலாக எழுதினார். சம்பந்த முதலியார், நாடகங்களையும், பிற நூல்களையும் பென்சிலால் மட்டுமே எழுதினார். சாகித்திய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் "பம்மல் சம்பந்த முதலியார்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் ஏ.என். பெருமாள் எழுதி வெளியானது.
* ரத்னாவளி (1935)
==நாடக வாழ்க்கை==
* மனோஹரா (1936, 1954)
[[File:சுகுணவிலாச சபை 1895.png|thumb|சுகுணவிலாச சபை 1895]]
* லீலாவதி சுலோசனா (1936)
சிறுவயது முதலே சம்பந்த முதலியார் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 1883-ல் பள்ளி விழாவில் அலெக்சாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில நாடகத்தில் கள்வனாக நடித்தார். தொடர்ந்து பிற நாடகக்குழுக்களின் நாடகங்கள், ஆங்கில நாடகங்களை கவனித்து வந்தார். மேனாட்டு நாடக முறையை அறிமுகப்படுத்த எண்ணி பயின்முறை (Amateur) நாடக முறையில் நாடகம் படைக்க முடிவு செய்தார். பயின்முறை நாடக முறை என்பது நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல், கற்றவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் நாடகப் படைப்பு முறை. தமது சுகுணவிலாச சபையின் நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சியும், பிற தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்தார்.
* சபாபதி (1941)
* வேதாள உலகம்<ref>[https://archive.org/details/VethalaUlagamPammalSambandhaMudaliar1950/mode/2up?view=theater வேதாள உலகம் மின்னூல்]</ref> (1948)

==== பிற நூல்கள் ====
சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாக அமைந்தது.

* தமிழ் நாடக வரலாறு
கீதமஞ்சரி, நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள் (ஆறுபாகங்கள்), நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி, தமிழ் பேசும் படம், பேசும்பட அனுபவங்கள் போன்ற நூல்களை எழுதினார்.
* நாடக மேடை நினைவுகள் (ஆறு பாகங்கள்) (1932, 1933, 1935, 1936, 1936, 1938) - 1891 தொடங்கி அவருடைய நாடக மேடை அனுபவங்களின் தொகுப்பு
=====சுகுண விலாச சபா=====
* நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி (1936) - நடிக்க வருபவர்களுக்கான நூல்
[[File:சுகுணவிலாச சபை - பம்மல் சம்பந்தனாரின் திருவுருவச் சிலை.png|thumb|சுகுணவிலாச சபை - பம்மல் சம்பந்தனாரின் திருவுருவச் சிலை|201x201px]]
* நான் கண்ட நாடகக் கலைஞர்கள் (1964) - நாடக உலகின் முன்னோடிகள் பலரைக் குறித்த முக்கிய நினைவுப் பதிவுகள். மராட்டிய நாடகக் கலைஞர்களான சுப்பாராவ், குப்பண்ணாராவ், பஞ்சநாதராவ் போன்றவர்கள் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழில் கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், டி.கே.சி சகோதரர்கள், சங்கர்தாஸ் சுவாமிகள், எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்ற பலர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
[[File:என் சுயசரிதை.jpg|thumb|என் சுயசரிதை]]
* பேசும்பட அனுபவங்கள் (1938) - சம்பந்த முதலியாரின் திரைப்படத் துறை அனுபவங்கள்
ஜூலை 1, 1891-ல் நண்பர்களுடன் சேர்ந்து 'சுகுண விலாச சபா' என்ற நாடக சபையை நிறுவினார். நாடக அரங்காற்றுகை செய்து, நடித்தார். டாக்டர்கள், வக்கீல்கள் போன்றோர் சுகுண விலாச சபா நாடகங்களில் நடிக்க ஊக்குவித்தார். முதன்முதலில் 1893-ல் கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' நாடகத்தைத் தழுவி 'புஷ்பவல்லி’ என்ற நாடகத்தை உரைநடை வடிவில் எழுதி சென்னை விக்டோரியா ஹாலில் அரங்கேற்றி நடித்தார். 22-ஆவது வயதில் 'லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட்(Hamlet), ஆஸ் யு லைக் இட்(As you like it) மெக்பெத்(Macbeth) உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார். ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார்.இன்பியலும், அங்க அசைவு மிக்க நகைச்சுவைகளுமே மிகுந்திருந்தன. சம்பந்த முதலியார். இன்பியலில் சமூக உணர்வுகளை உட்புகுத்தி நாடகமாக்கினார். மனோகரன், இருசகோதரிகள், தாசிப்பெண், புஷ்பவல்லி, உத்தமபத்தினி போன்ற நாடகங்கள் இவ்வகை நாடகங்களாகும்.புராண இதிகாச வடிவ நாடகங்களே புகழ் பெற்றிருந்த அக்காலகட்டத்தில் கர்ணன், சிறுத்தொண்டர் போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து சில மாற்றங்களை செய்து. அது மக்களிடம் வரவேற்பு பெற்ற பிறகு சமூகக் கதைகளை நாடக வடிவில் எழுதினார். நாட்டுப்புறக் கதைப் பாடல்களையும் நாடகமாக்கினார். நல்லதங்காள், சாரங்கதாரன் போன்றன இவற்றுள் அடங்கும். தொன்ம (புராண)க் கதைகளையும் சம்பந்த முதலியார் மக்களுக்கான நாடகமாக்கினார். யயாதி, காலவரிஷி, சிறுத்தொண்டன், மார்க்கண்டேயன் போன்றவை குறிப்பிடத்தக்கன. சமுதாயச் சீர்கேடுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல அங்கத நாடகங்களை (Satirical Plays) எழுதியுள்ளார். சபாபதி நாடகம் (ஆறு பாகங்கள்) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். அரிச்சந்திரன் நாடகக் கதையைப் பெயர் மாற்றி சந்திரகரி என்ற பெயரில் நையாண்டி செய்தார். பொய்யை மட்டுமே பேசுபவனாகச் சந்திரகரி படைக்கப்பட்டான். சம்பந்த முதலியார் எழுதிய இரண்டு நண்பர்கள், இரத்தினாவளி, காலவ ரிஷி, வேதாள உலகம், லீலாவதி சுலோசனா, சபாபதி, கள்வர் தலைவன் ஆகிய நாடகங்கள் தொழில் முறையில் நடிக்கப் பெற்ற வெற்றிகரமான நாடகங்கள். புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதாரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பி்ற்பகல் விளையும், ரத்னாவளி, காலவரிஷி, மார்க்கண்டேயர், அமலாதித்தியன், வாணீபுர வணிகன், சபாபதி, வேதாள உலகம், பொன் விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், வள்ளி மணம், கொடையாளி கர்ணன், சகுந்தைலை, காளப்பன் கள்ளத்தனம், நல்லதங்காள், ஏமாந்த இரண்டு திருடர்கள், ஸ்திரி ராஜ்யம், இந்தியனும் ஹிட்லரும், கலையோ காதலோ போன்றன சம்பந்த முதலியாரின் குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகள். இவரது குழுவில் ஆண்களே பெண் வேடமிட்டனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இலங்கையிலும் சம்பந்த முதலியார் நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார்.
* தமிழ்ப் பேசும்படக் காட்சி (1937) - திரைப்படம் தொடர்பான பல தகவல்களை - ஸ்டுடியோ, காமிரா, பலவிதமான ஷாட்கள், குளோஸ் அப் போல பல திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப தகவல்களை அறிமுகம் செய்யும் நூல்
[[File:மனோகரா1.jpg|thumb|241x241px|மனோகரா]]
* கதம்பம் (1938) - பதினொரு கதைகளின் தொகுப்பு
=====மனோகரா=====
* பல்வகைப் பூங்கொத்து (1958) - ஏழு கதைகளின் தொகுப்பு
துருவன் கதையின் தாக்கத்தால் 'மனோகரா' என்ற புகழ்பெற்ற கதையை எழுதி அதை நாடகமாக்கினார். சம்பந்த முதலியாரின் [[மனோகரா]] நாடகம் தமிழ் நாடக மேடையில் குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெற்றது. தமது படைப்புகளில் மனோகரா நாடகம் முதன்மையானது எனச் சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார். மனோகரா நாடகம் 70 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது. தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் இந்த நாடகத்தை நடத்தினர். அனுமதி பெற்றே 859 முறை இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் மனோகரா நாடகம் திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றியை ஏற்படுத்தியது.
* ஹாஸ்யக் கதைகள் (1936) - ஆறு தலைப்புக்களில் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு
=====சீர்திருத்தங்கள்=====
* தீட்சிதர் கதைகள் (1936)
[[File:அரிச்சந்திர நாடகம்.png|thumb|301x301px|அரிச்சந்திர நாடகம்]]
* ஹாஸ்ய வியாசங்கள் (1937) - நகைச்சுவைக் கட்டுரைகள்
*கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்தார்.
* சிவாலயங்கள் - இந்தியாவிலும் அப்பாலும் - ஐந்து பாகங்கள் (1945, 1946, 1948, 1948, 1948)
*கதை, நடிப்பு, இயக்கம், நவீன கருத்துகள்கொண்ட வசன உச்சரிப்பு, சீர்த்திருத்தமான காட்சியமைப்பு, நடிப்பு ஆகியவற்றில் மாற்றம் கொணர்ந்தார்.
* சுப்பிரமணிய ஆலயங்கள் (1947)
*நாடக மேடை, நடிக்கும் முறை, நடிகர்கள் தேர்வு முறை போன்றவற்றில் சீர்திருத்தம் செய்தார்.
* சிவாலய சிற்பங்கள் (1946)
*அக்காலத்தைய கலை மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப செயல்படும் பாங்கான நாடகங்களை எழுதினார்.
* சிவாலய உற்சவங்கள் (1949)
*மேல்நாட்டு அமைப்பு முறையிலான நாடகமாக்கம் செய்தார்.
* என் சுயசரிதை (1963) - தன் வரலாற்று நூல்
*தமிழ் நாடகத்தில் தலைப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரையிலான அனைத்துத் துறையிலும் புதுமையைப் புகுத்தினார்.
*காலக் குறிப்புகள்<ref>[https://archive.org/download/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl6kuYy.TVA_BOK_0003628/TVA_BOK_0003628_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_text.pdf காலக் குறிப்புகள் மின்னூல்]</ref>
*நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார்.
==உசாத்துணை, குறிப்புகள்==
*சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார்.
<references />
*நடிப்பவர்களை 'கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் 'கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.
*திட்டமிடப்பெற்ற நாடக ஒத்திகை மேற்கொள்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடித்தார்.
*நாடக உரையாடல்களை உள்ளபடியே பேசி நடிக்க வேண்டுமென்பதில் கண்டிப்புக் காட்டினார்.
*நாடகங்களின் இயல்புத் தன்மைக்கு முக்கியத்துவம் தந்தார்.
*படித்தவர்களை நடிக்க வைத்து நல்ல பார்வையாளர்களை உருவாக்கினார்.
*வேற்றுமொழி நாடகங்கள், மேனாட்டு நாடகங்கள் என புதிய நாடகங்களை அறிமுகப்படுத்தினார்.
*நாடகங்களில் முக்கியப் பாத்திரம் வசனம் பேச மற்றவர்கள் ஒரு சங்கடமான முகபாவத்துடன் இருப்பதை பம்மல் சம்பந்தம் முதலியார் "அவல் மென்று கொண்டிருப்பது" என்று பெயரிட்டு, அவர்களை ஏதேனும் இயல்பான செய்கைகள் (by-play) புரிய வேண்டும் என்றார்.
*பாடல்கள் நிறைந்த நாடக மேடைகளில் பாடல் -ல்லாமல் உரைநடையாகவே நாடகங்களை இயற்றினார்.
*இசையை நாடகத்துக்கு இடையே பாடலாக -ல்லாமல் பின்னணிக்கு உதவும் வகையில் இடம்பெறச் செய்தார்.
*வசனங்களில் அடுக்குமொழிகளை விடுத்து நேரிடையான எளிய வாக்கியங்களை அமைத்தார்.

{{Standardised}}
=====புகழ்பற்ற நடிகர்கள்=====
*சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர்
*எஸ்.சத்தியமூர்த்தி
*எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை)
*ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்
*வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார்
*வி.சி.கோபாலரத்தினம்
[[File:சபாபதி.jpg|thumb|250x250px|சபாபதி]]

==திரைப்படம்==
சம்பந்த முதலியார் பேசும் படங்கள் வந்த காலத்தில் அதிலும் பணியாற்றினார். 1931 முதல் திரைப்படத் துறையில் பணியாற்றினார். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் வந்தன. 1936-ல் மனோகரா திரைப்படத்தில் புருஷோத்தமனாக நடித்தார். காலவரிஷி, ரத்னாவளி, லீலாவதி, சுலோசனா, சந்திரஹரி, சபாபதி, பொங்கல் பண்டிகை, இராமலிங்க சுவாமிகள் போன்ற நாடகங்களும் திரைப்படமாயின.
==விருதுகள்==
*பம்மல் சம்பந்த முதலியாருக்கு இராவ்பகதூர் பட்டம் 1916-ல் வழங்கப்பட்டது.
*1916-ல் நாடகப் பேராசிரியர் விருது பெற்றார்.
*பத்மபூஷண் விருது 1959-ல் வழங்கப்பட்டது.
*1959-ல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.
====== நாட்டுடைமை ======
சம்பந்த முதலியாரின் நூல்கள் 2009-ல் தமிழக அரசால் [[நூல்கள் நாட்டுடைமை|நாட்டுடைமை]] ஆக்கப்பட்டன.
==மறைவு==
[[File:பம்மல் சம்பந்த முதலியாரின் கையெழுத்து.png|thumb|பம்மல் சம்பந்த முதலியாரின் கையெழுத்து]]
1950 முதல் உலகியல் பொறுப்புகள் அனைத்தையும் மகன் வரதராஜனிடம் ஒப்படைத்தார். முதுமையால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. பிறரது உதவியுடன் நூல்களை எழுதினார். செப்டம்பெர் 24, 1964-ல் காலமானார்.
==திரைப்படங்களாக்கப்பட்ட நாடகங்கள்==
*காலவா ரிஷி (1932)
*சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
* மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
*ரத்னாவளி (1935)
*யயாதி (1938)
*ராமலிங்க சுவாமிகள் (1939)
*சந்திரஹரி (1941)
*ஊர்வசி சாகசம் (1940)
*தாசிப் பெண் (1943)
*சபாபதி (1941)
*வேதாள உலகம் (1948)
==நூல்கள் பட்டியல்==
*காலக் குறிப்புகள்
*சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்
*நாடகத் தமிழ்
*தமிழ் நாடக வரலாறு
*நாடக மேடை நினைவுகள் (ஆறு பாகங்கள்)
*நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி (1936)
*நான் கண்ட நாடகக் கலைஞர்கள் (1964)
*பேசும்பட அனுபவங்கள் (1938)
*தமிழ்ப் பேசும்படக் காட்சி (1937)
*கதம்பம் (1938)
*பல்வகைப் பூங்கொத்து (1958)
*ஹாஸ்யக் கதைகள் (1936)
*தீட்சிதர் கதைகள் (1936)
*ஹாஸ்ய வியாசங்கள் (1937)
*சிவாலயங்கள் (1945, 1946, 1948, 1948, 1948)
*சுப்பிரமணிய ஆலயங்கள் (1947)
*சிவாலய சிற்பங்கள் (1946)
*சிவாலய உற்சவங்கள் (1949)
*என் சுயசரிதை (1963)
*காலக் குறிப்புகள்
=====பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய நூல்கள்=====
*என் சுயசரிதை (தன்வாழ்க்கை வரலாறு)
*பம்மல் சம்பந்த முதலியார் (ஏ.என். பெருமாள்)
===== மொழிபெயர்ப்புகள்=====
*அமலாதித்யன் (Hamlet)
*நீ விரும்பியபடியே (As You like it)
*மகபதி (Macbeth)
*சிம்மளநாதன் (Cymbeline)
*வணிபுர வானிகன் (Merchant of Venice)
==நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்==
=====தமிழ்=====
*இந்தியனும்-ஹிட்லரும்
*-ல்லறமும் துறவறமும்
*என் சுயசரிதை
*என் தந்தை தாயர்
*ஒன்பது குட்டி நாடகங்கள்
*ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
* கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
*கள்வர் தலைவன்
*காதலர் கண்கள்
*காலக் குறிப்புகள்
*குறமகள், வைகுண்ட முதலியார் (இரு நாடகங்கள், 1934)
*சபாபதி
*சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
*நான் குற்றவாளி
*சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
*தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
*தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
*தீபாவளி வரிசை
*தீயின் சிறு திவலை
*நாடகத் தமிழ்
*நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
*நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
*பலவகை பூங்கொத்து
*மனை ஆட்சி
*மனோகரா
*மூன்று நகைச்சுவை நாடகங்கள்
*யயாதி
*வாணீபுர வணிகன்
*விடுதிப் புஷ்பங்கள்
=====ஆங்கிலம்=====
*Amaladitya
*As you like it
*an Adaptation of Shakespear's as We Sow-so We Reap
*Blessed in a Wife
*Brahmin Versus Non-brahmin
* Bricks Between and at Any Cost
*Chandrahari
*Dikshithar Stories
*Harischandra
*Humorous Essays
*Lord Buddha
*Mixture
*Over Forty Years Before the Footlights-1
*Over Forty Years Before the Footlights-2
* Sahadeva's Stratagem
*Sarangadara
*Sati Sakti a Farce in Tamil,sati Sulochana
* Siruthondar
*Siva Shrines in India & Beyond Part - Ii
*Siva Shrines in India & Beyond Part - Iii
*Siva Shrines in India & Beyond Part Iv,siva Shrines in India & Beyond Part-v
*Siva Temple Architecture Etc,
* Subramanya Shrines in Tamil
* The Fair Ghost
*The Good Fairy
*The Good Sister
*The Gypsy Girl and Vaikunta Vaithiyar
*The Idle Wife
*The Knavery of Kalappa
*The Surgeon General's Prescription and Vichu's Wife
*The Wedding of Valli
== உசாத்துணை ==
*[https://www.tamilvu.org/courses/diploma/a061/a0614/html/a06144l2.htm பம்மல் சம்பந்த முதலியார்:  தமிழ் இணைய கல்விக் கழகம்]
*[https://cinema.vikatan.com/literature/137856-story-about-pammal-sambandha-mudaliar-on-his-death-anniversary பம்மல் சம்பந்த முதலியார்: சினிமா விகடன்]
*[https://m.dinamalar.com/weeklydetail.php?id=28113 பம்மல் சம்பந்த முதலியார்:  தினமலர்]
*[https://www.hindutamil.in/news/blogs/30962-10-2.html பம்மல் சம்பந்த முதலியார்: ஹிந்துதமிழ்]
*[https://agamudayarvaralaru2017.blogspot.com/2018/02/blog-post.html தமிழ் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்:  அகமுடையார் வரலாறு மீட்புக் குழு]
*[https://vimarisanam.com/2020/11/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/ பம்மல் சம்பந்த முதலியார்: ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தமிழில்-விமரிசனம்]
==வெளி இணைப்புகள்==
*[https://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-22-235677 பம்மல் சம்பந்த முதலியாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1luhy#book1/11 மனோகரா: பம்மல் சம்பந்த முதலியார்]
*[https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0425.pdf பம்மல் சம்பந்த முதலியார்: சபாபதி நாடகம்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2lJpy&tag=%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/ பம்மல் சம்பந்த முதலியாரின் உரைநடை நூல்கள்: தொகுதி-1]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2lJly&tag=%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/ பம்மல் சம்பந்த முதலியாரின் உரைநடை நூல்கள் : தொகுதி-2]
*[https://www.youtube.com/watch?v=y_LRJpK9zOg&ab_channel=GGnanasambandan பம்மல் சம்பந்த முதலியார்: ஞானசம்பந்தம்: Youtube]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நீதிபதிகள்]]
[[Category:நாடகாசிரியர்கள்]]

Latest revision as of 09:18, 24 February 2024

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார் (பிப்ரவரி 1, 1873 - செப்டெம்பர் 24, 1964) நாடக முன்னோடிகளில் ஒருவர். வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர். சுகுணவிலாச சபை என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடகக்கலையின் மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டார். தமிழில் சொந்த நாடகங்களையும், தழுவல் நாடகங்களையும் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நாடகங்களை மொழிபெயர்த்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பிறப்பு, கல்வி

பம்மல் சம்பந்த முதலியார் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இணையருக்கு பிப்ரவரி 1, 1873-ல் பிறந்தார். இயற்பெயர் திருஞான சம்பந்தம். விஜயரங்க முதலியார் மதுரை திருஞான சம்பந்தர் மடத்து அடியவரிடம் 1872-ல் சிவதீட்சை எடுத்தவராதலால் தன் மகனுக்கு 'திருஞான சம்பந்தம்' என்று பெயர் சூட்டினார். தந்தை தமிழ் ஆசிரியராகவும், கல்வித்துறை ஆய்வாளராகவும் இருந்தவர். தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதனால் பம்மல் சம்பந்தனாருக்கு சிறுவயது முதலே புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தது.

பம்மல் சம்மந்த முதலியார்

அக்கால வழக்கப்படி முதலில் திண்ணைப் பள்ளி்க்கூடத்திலும் பிறகு பிராட்வேயிலிருந்து 'ஹிந்து புரொபரைடர் என்ற பள்ளிக்கூடத்திலும் பிறகு செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கூடத்திலும் பள்ளிக்கல்வி பயின்றார். 1885-ல் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார். 1886-ல் பச்சையப்பன் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டபடிப்பு முதல் வகுப்பில் தேறினார். 1896-ல் சட்டக் கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

1890-ல் திருமணம் நடந்தது. 1898-ல் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். சுந்தரம் சாஸ்திரியார் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியில் சேர்ந்தார். சர்.சி.பி. ராமசாமி ஐயரின் வேண்டுகோளின்படி 1924-ம் ஆண்டு சிறு வழக்கு நீதிமன்றத்தின் நீதிபதியானார். 1924 முதல் 1928 வரை நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் மனைவி காலமானார்.

சமயப் பணிகள்

பம்மல் சம்பந்த முதலியார்

சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது. கோயில் திருக்குளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.

சமூகப் பணிகள்

சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் செனட் அங்கத்தினராக இருந்தார். இந்து தர்ம சமாஜத்தில் உறுப்பினராக இருந்தார். விளையாட்டுத்துறை தொடர்பான குழுக்களில் அங்கத்தினராக இருந்து பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஹாஸ்ய வியாசங்கள்

நாடகங்களை உரை நடை வடிவில் எழுதினார். ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்தார். வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு சகுந்தலை நாடகத்தை மானியர் வில்லியம்ஸ் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அந்நாடகத்தைத் தமிழில் சம்பந்தர் மொழிபெயர்த்தார். சிவாலயங்கள் பற்றி நான்கு பாகங்கள் கொண்ட நூல் எழுதினார். 1946-ல் அந்நூல் அச்சேற திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் பொருளுதவி செய்தார். 'காலக் குறிப்புகள்', 'சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்', 'நாடகத் தமிழ்' போன்ற நூல்களை எழுதினார். பம்மல் சம்பந்தரின் நூல்களுக்குப் பரிதிமாற் கலைஞர், டாக்டர் உ.வே.சா, பூவை. கலியாண சுந்தர முதலியார் போன்றோர் சாற்றுக் கவிகள் எழுதினர்.

"என் சுயசரிதை" என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலை பம்மல் சம்பந்த முதலியார் எழுதினார். நாடக மேடை நினைவுகள் ஆறு பாகங்களை 1891 தொடங்கி (1932, 1933, 1935, 1936, 1936, 1938) அவருடைய நாடக மேடை அனுபவங்களின் தொகுப்பாக எழுதினார். 1936-ல் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி என்ற நூலை நடிக்க வருபவர்களுக்கான நூலாக எழுதினார். 1964-ல் நான் கண்ட நாடகக் கலைஞர்கள் என்ற நூலை நாடக உலகின் முன்னோடிகள் பலரைக் குறித்த முக்கிய நினைவுப் பதிவுகளாக எழுதினார். மராட்டிய நாடகக் கலைஞர்களான சுப்பாராவ், குப்பண்ணாராவ், பஞ்சநாதராவ் போன்றவர்கள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழில் கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், டி.கே.சி சகோதரர்கள், சங்கர்தாஸ் சுவாமிகள், எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்ற பலர் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1938-ல் பேசும்பட அனுபவங்கள் என்ற நூலை சம்பந்த முதலியாரின் திரைப்படத் துறை அனுபவங்களாக எழுதினார். 1937-ல் "தமிழ்ப் பேசும்படக் காட்சி" என்ற நூலை திரைப்படம் தொடர்பான பல தகவல்கள், ஸ்டுடியோ, காமிரா, பலவிதமான ஷாட்கள், குளோஸ் அப் போன்ற பல திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப தகவல்களை அறிமுகம் செய்யும் நூலாக எழுதினார். சம்பந்த முதலியார், நாடகங்களையும், பிற நூல்களையும் பென்சிலால் மட்டுமே எழுதினார். சாகித்திய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் "பம்மல் சம்பந்த முதலியார்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் ஏ.என். பெருமாள் எழுதி வெளியானது.

நாடக வாழ்க்கை

சுகுணவிலாச சபை 1895

சிறுவயது முதலே சம்பந்த முதலியார் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 1883-ல் பள்ளி விழாவில் அலெக்சாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில நாடகத்தில் கள்வனாக நடித்தார். தொடர்ந்து பிற நாடகக்குழுக்களின் நாடகங்கள், ஆங்கில நாடகங்களை கவனித்து வந்தார். மேனாட்டு நாடக முறையை அறிமுகப்படுத்த எண்ணி பயின்முறை (Amateur) நாடக முறையில் நாடகம் படைக்க முடிவு செய்தார். பயின்முறை நாடக முறை என்பது நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல், கற்றவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் நாடகப் படைப்பு முறை. தமது சுகுணவிலாச சபையின் நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சியும், பிற தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்தார்.

சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாக அமைந்தது.

கீதமஞ்சரி, நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள் (ஆறுபாகங்கள்), நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி, தமிழ் பேசும் படம், பேசும்பட அனுபவங்கள் போன்ற நூல்களை எழுதினார்.

சுகுண விலாச சபா
சுகுணவிலாச சபை - பம்மல் சம்பந்தனாரின் திருவுருவச் சிலை
என் சுயசரிதை

ஜூலை 1, 1891-ல் நண்பர்களுடன் சேர்ந்து 'சுகுண விலாச சபா' என்ற நாடக சபையை நிறுவினார். நாடக அரங்காற்றுகை செய்து, நடித்தார். டாக்டர்கள், வக்கீல்கள் போன்றோர் சுகுண விலாச சபா நாடகங்களில் நடிக்க ஊக்குவித்தார். முதன்முதலில் 1893-ல் கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' நாடகத்தைத் தழுவி 'புஷ்பவல்லி’ என்ற நாடகத்தை உரைநடை வடிவில் எழுதி சென்னை விக்டோரியா ஹாலில் அரங்கேற்றி நடித்தார். 22-ஆவது வயதில் 'லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட்(Hamlet), ஆஸ் யு லைக் இட்(As you like it) மெக்பெத்(Macbeth) உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார். ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார்.இன்பியலும், அங்க அசைவு மிக்க நகைச்சுவைகளுமே மிகுந்திருந்தன. சம்பந்த முதலியார். இன்பியலில் சமூக உணர்வுகளை உட்புகுத்தி நாடகமாக்கினார். மனோகரன், இருசகோதரிகள், தாசிப்பெண், புஷ்பவல்லி, உத்தமபத்தினி போன்ற நாடகங்கள் இவ்வகை நாடகங்களாகும்.புராண இதிகாச வடிவ நாடகங்களே புகழ் பெற்றிருந்த அக்காலகட்டத்தில் கர்ணன், சிறுத்தொண்டர் போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து சில மாற்றங்களை செய்து. அது மக்களிடம் வரவேற்பு பெற்ற பிறகு சமூகக் கதைகளை நாடக வடிவில் எழுதினார். நாட்டுப்புறக் கதைப் பாடல்களையும் நாடகமாக்கினார். நல்லதங்காள், சாரங்கதாரன் போன்றன இவற்றுள் அடங்கும். தொன்ம (புராண)க் கதைகளையும் சம்பந்த முதலியார் மக்களுக்கான நாடகமாக்கினார். யயாதி, காலவரிஷி, சிறுத்தொண்டன், மார்க்கண்டேயன் போன்றவை குறிப்பிடத்தக்கன. சமுதாயச் சீர்கேடுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல அங்கத நாடகங்களை (Satirical Plays) எழுதியுள்ளார். சபாபதி நாடகம் (ஆறு பாகங்கள்) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். அரிச்சந்திரன் நாடகக் கதையைப் பெயர் மாற்றி சந்திரகரி என்ற பெயரில் நையாண்டி செய்தார். பொய்யை மட்டுமே பேசுபவனாகச் சந்திரகரி படைக்கப்பட்டான். சம்பந்த முதலியார் எழுதிய இரண்டு நண்பர்கள், இரத்தினாவளி, காலவ ரிஷி, வேதாள உலகம், லீலாவதி சுலோசனா, சபாபதி, கள்வர் தலைவன் ஆகிய நாடகங்கள் தொழில் முறையில் நடிக்கப் பெற்ற வெற்றிகரமான நாடகங்கள். புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதாரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பி்ற்பகல் விளையும், ரத்னாவளி, காலவரிஷி, மார்க்கண்டேயர், அமலாதித்தியன், வாணீபுர வணிகன், சபாபதி, வேதாள உலகம், பொன் விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், வள்ளி மணம், கொடையாளி கர்ணன், சகுந்தைலை, காளப்பன் கள்ளத்தனம், நல்லதங்காள், ஏமாந்த இரண்டு திருடர்கள், ஸ்திரி ராஜ்யம், இந்தியனும் ஹிட்லரும், கலையோ காதலோ போன்றன சம்பந்த முதலியாரின் குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகள். இவரது குழுவில் ஆண்களே பெண் வேடமிட்டனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இலங்கையிலும் சம்பந்த முதலியார் நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார்.

மனோகரா
மனோகரா

துருவன் கதையின் தாக்கத்தால் 'மனோகரா' என்ற புகழ்பெற்ற கதையை எழுதி அதை நாடகமாக்கினார். சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் தமிழ் நாடக மேடையில் குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெற்றது. தமது படைப்புகளில் மனோகரா நாடகம் முதன்மையானது எனச் சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார். மனோகரா நாடகம் 70 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது. தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் இந்த நாடகத்தை நடத்தினர். அனுமதி பெற்றே 859 முறை இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் மனோகரா நாடகம் திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றியை ஏற்படுத்தியது.

சீர்திருத்தங்கள்
அரிச்சந்திர நாடகம்
  • கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்தார்.
  • கதை, நடிப்பு, இயக்கம், நவீன கருத்துகள்கொண்ட வசன உச்சரிப்பு, சீர்த்திருத்தமான காட்சியமைப்பு, நடிப்பு ஆகியவற்றில் மாற்றம் கொணர்ந்தார்.
  • நாடக மேடை, நடிக்கும் முறை, நடிகர்கள் தேர்வு முறை போன்றவற்றில் சீர்திருத்தம் செய்தார்.
  • அக்காலத்தைய கலை மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப செயல்படும் பாங்கான நாடகங்களை எழுதினார்.
  • மேல்நாட்டு அமைப்பு முறையிலான நாடகமாக்கம் செய்தார்.
  • தமிழ் நாடகத்தில் தலைப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரையிலான அனைத்துத் துறையிலும் புதுமையைப் புகுத்தினார்.
  • நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார்.
  • சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார்.
  • நடிப்பவர்களை 'கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் 'கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.
  • திட்டமிடப்பெற்ற நாடக ஒத்திகை மேற்கொள்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடித்தார்.
  • நாடக உரையாடல்களை உள்ளபடியே பேசி நடிக்க வேண்டுமென்பதில் கண்டிப்புக் காட்டினார்.
  • நாடகங்களின் இயல்புத் தன்மைக்கு முக்கியத்துவம் தந்தார்.
  • படித்தவர்களை நடிக்க வைத்து நல்ல பார்வையாளர்களை உருவாக்கினார்.
  • வேற்றுமொழி நாடகங்கள், மேனாட்டு நாடகங்கள் என புதிய நாடகங்களை அறிமுகப்படுத்தினார்.
  • நாடகங்களில் முக்கியப் பாத்திரம் வசனம் பேச மற்றவர்கள் ஒரு சங்கடமான முகபாவத்துடன் இருப்பதை பம்மல் சம்பந்தம் முதலியார் "அவல் மென்று கொண்டிருப்பது" என்று பெயரிட்டு, அவர்களை ஏதேனும் இயல்பான செய்கைகள் (by-play) புரிய வேண்டும் என்றார்.
  • பாடல்கள் நிறைந்த நாடக மேடைகளில் பாடல் -ல்லாமல் உரைநடையாகவே நாடகங்களை இயற்றினார்.
  • இசையை நாடகத்துக்கு இடையே பாடலாக -ல்லாமல் பின்னணிக்கு உதவும் வகையில் இடம்பெறச் செய்தார்.
  • வசனங்களில் அடுக்குமொழிகளை விடுத்து நேரிடையான எளிய வாக்கியங்களை அமைத்தார்.
புகழ்பற்ற நடிகர்கள்
  • சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர்
  • எஸ்.சத்தியமூர்த்தி
  • எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை)
  • ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்
  • வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார்
  • வி.சி.கோபாலரத்தினம்
சபாபதி

திரைப்படம்

சம்பந்த முதலியார் பேசும் படங்கள் வந்த காலத்தில் அதிலும் பணியாற்றினார். 1931 முதல் திரைப்படத் துறையில் பணியாற்றினார். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் வந்தன. 1936-ல் மனோகரா திரைப்படத்தில் புருஷோத்தமனாக நடித்தார். காலவரிஷி, ரத்னாவளி, லீலாவதி, சுலோசனா, சந்திரஹரி, சபாபதி, பொங்கல் பண்டிகை, இராமலிங்க சுவாமிகள் போன்ற நாடகங்களும் திரைப்படமாயின.

விருதுகள்

  • பம்மல் சம்பந்த முதலியாருக்கு இராவ்பகதூர் பட்டம் 1916-ல் வழங்கப்பட்டது.
  • 1916-ல் நாடகப் பேராசிரியர் விருது பெற்றார்.
  • பத்மபூஷண் விருது 1959-ல் வழங்கப்பட்டது.
  • 1959-ல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.
நாட்டுடைமை

சம்பந்த முதலியாரின் நூல்கள் 2009-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மறைவு

பம்மல் சம்பந்த முதலியாரின் கையெழுத்து

1950 முதல் உலகியல் பொறுப்புகள் அனைத்தையும் மகன் வரதராஜனிடம் ஒப்படைத்தார். முதுமையால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. பிறரது உதவியுடன் நூல்களை எழுதினார். செப்டம்பெர் 24, 1964-ல் காலமானார்.

திரைப்படங்களாக்கப்பட்ட நாடகங்கள்

  • காலவா ரிஷி (1932)
  • சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
  • மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
  • ரத்னாவளி (1935)
  • யயாதி (1938)
  • ராமலிங்க சுவாமிகள் (1939)
  • சந்திரஹரி (1941)
  • ஊர்வசி சாகசம் (1940)
  • தாசிப் பெண் (1943)
  • சபாபதி (1941)
  • வேதாள உலகம் (1948)

நூல்கள் பட்டியல்

  • காலக் குறிப்புகள்
  • சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்
  • நாடகத் தமிழ்
  • தமிழ் நாடக வரலாறு
  • நாடக மேடை நினைவுகள் (ஆறு பாகங்கள்)
  • நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி (1936)
  • நான் கண்ட நாடகக் கலைஞர்கள் (1964)
  • பேசும்பட அனுபவங்கள் (1938)
  • தமிழ்ப் பேசும்படக் காட்சி (1937)
  • கதம்பம் (1938)
  • பல்வகைப் பூங்கொத்து (1958)
  • ஹாஸ்யக் கதைகள் (1936)
  • தீட்சிதர் கதைகள் (1936)
  • ஹாஸ்ய வியாசங்கள் (1937)
  • சிவாலயங்கள் (1945, 1946, 1948, 1948, 1948)
  • சுப்பிரமணிய ஆலயங்கள் (1947)
  • சிவாலய சிற்பங்கள் (1946)
  • சிவாலய உற்சவங்கள் (1949)
  • என் சுயசரிதை (1963)
  • காலக் குறிப்புகள்
பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய நூல்கள்
  • என் சுயசரிதை (தன்வாழ்க்கை வரலாறு)
  • பம்மல் சம்பந்த முதலியார் (ஏ.என். பெருமாள்)
மொழிபெயர்ப்புகள்
  • அமலாதித்யன் (Hamlet)
  • நீ விரும்பியபடியே (As You like it)
  • மகபதி (Macbeth)
  • சிம்மளநாதன் (Cymbeline)
  • வணிபுர வானிகன் (Merchant of Venice)

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

தமிழ்
  • இந்தியனும்-ஹிட்லரும்
  • -ல்லறமும் துறவறமும்
  • என் சுயசரிதை
  • என் தந்தை தாயர்
  • ஒன்பது குட்டி நாடகங்கள்
  • ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
  • கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
  • கள்வர் தலைவன்
  • காதலர் கண்கள்
  • காலக் குறிப்புகள்
  • குறமகள், வைகுண்ட முதலியார் (இரு நாடகங்கள், 1934)
  • சபாபதி
  • சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
  • நான் குற்றவாளி
  • சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
  • தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
  • தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
  • தீபாவளி வரிசை
  • தீயின் சிறு திவலை
  • நாடகத் தமிழ்
  • நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
  • நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
  • பலவகை பூங்கொத்து
  • மனை ஆட்சி
  • மனோகரா
  • மூன்று நகைச்சுவை நாடகங்கள்
  • யயாதி
  • வாணீபுர வணிகன்
  • விடுதிப் புஷ்பங்கள்
ஆங்கிலம்
  • Amaladitya
  • As you like it
  • an Adaptation of Shakespear's as We Sow-so We Reap
  • Blessed in a Wife
  • Brahmin Versus Non-brahmin
  • Bricks Between and at Any Cost
  • Chandrahari
  • Dikshithar Stories
  • Harischandra
  • Humorous Essays
  • Lord Buddha
  • Mixture
  • Over Forty Years Before the Footlights-1
  • Over Forty Years Before the Footlights-2
  • Sahadeva's Stratagem
  • Sarangadara
  • Sati Sakti a Farce in Tamil,sati Sulochana
  • Siruthondar
  • Siva Shrines in India & Beyond Part - Ii
  • Siva Shrines in India & Beyond Part - Iii
  • Siva Shrines in India & Beyond Part Iv,siva Shrines in India & Beyond Part-v
  • Siva Temple Architecture Etc,
  • Subramanya Shrines in Tamil
  • The Fair Ghost
  • The Good Fairy
  • The Good Sister
  • The Gypsy Girl and Vaikunta Vaithiyar
  • The Idle Wife
  • The Knavery of Kalappa
  • The Surgeon General's Prescription and Vichu's Wife
  • The Wedding of Valli

உசாத்துணை

வெளி இணைப்புகள்

✅Finalised Page