under review

மனோகரா

From Tamil Wiki
மனோகரா நாடகம்

மனோகரா (நாடகம்) பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம். இந்நாடகம் ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் செல்வாக்கினைச் செலுத்தியது.

நூல் பற்றி

1895-ல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிப், பதிப்பித்த ஆறாவது நாடகம். 1907-ல் முதன்முதலில் அச்சிடப்பட்டது.

நாடகம்

மனோகரா 1895 முதல் இரண்டாயிரம் முறைகளுக்கும் மேல் மேடையேறிய நாடகம். ரங்கூன் போன்ற பல இடங்களிலும் அரங்கேறியது. சுகுண விலாச சபையின் தயாரிப்பில் சம்பந்த முதலியார் மனோகரனாக நடித்தார். 1936-ல் அரங்கேற்றப்பட்டபோது சம்பந்த முதலியார் அரசனாக நடித்தார். தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் இந்த நாடகத்தை அரங்கேற்றுமளவு பிரபலமானதாக இருந்தது.

கதாப்பாத்திரங்கள்
  • புருஷோத்தமன் - சோழநாட்டரசன்
  • மனோஹரன் - புருஷோத்தமன் புதல்வன்
  • சத்தியசீலர் - சோழதேசத்து பிரதான மந்திரி
  • ராஜப்பிரியன் - மனோஹரன் தோழன்
  • பெளத்தாயனன் - ஒரு மந்திரி
  • ரணவீரகேது - சோழசேனாதிபதி
  • விகடன் - அரண்மனை விதூஷகன்
  • அமிர்தகேசரி - ஒரு வைத்தியன்
  • வசந்தன் - கேசவர்மனுக்கும் வசந்தசேனைக்கும் பிறந்தவன்
  • பத்மாவதி - புருஷோத்தமன் மனைவி
  • விஜயா - மனோஹரன் மனைவி
  • வசந்தசேனை - அரண்மனை தாசி
  • நீலவேணி - தாதி
  • புருஷோத்தமன் குரு
  • சேனை வீரர்கள்
  • சோழ வீரர்கள்
  • சோழ பாண்டிய சைனியங்கள்
  • கேசரிவர்மன் அருவம்
  • தாதியர்
கதை நிகழும் இடம்
  • சோழ நாடும் அதன் அருகிலுள்ள பிரதேசங்களும்
கதைச்சுருக்கம்

புருஷோத்தமன் அரசி பத்மாவதிக்கு துரோகம் செய்து வசந்தசேனையுடன் உறவில் இருப்பார். பத்மாவதியை துரத்திவிடுவார். வசந்தசேனை சூழ்ச்சியால் மொத்த தேசத்தையும் தன் கைக்குள் கொண்டு வரத் திட்டமிடுவார். புருஷோத்தமனையும் சிறையில் அடைப்பாள் வசந்தசேனை. துரோகத்தால் குலைந்து போன அவரின் மகன் மனோகரா போராடி வெற்றிபெறுவார்.

மதிப்பீடு

"மனோகரா, இரண்டு நண்பர்கள் ஆகிய இரு நாடகங்களும் உலகத் தரம் வாய்ந்த நாடகங்கள்" என அவ்வை தி.க. சண்முகம் மதிப்பிடுகிறார்.

மனோகரா திரைப்படம்

மனோகரா (திரைப்படம்)

மனோகரா நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 3, 1954-ல் அதே பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது. எல். வி. பிரசாத் இயக்கத்தில், மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. ஆர். ராஜகுமாரி, கிரிஜா, காகா ராதாகிருஷ்ணன், கண்ணாம்பா ஆகியோர் நடித்தனர். 'பொறுத்தது போதும் மனோகரா, பொங்கியெழு’ என்ற வசனம் இன்றளவிலும் பிரபலமானது.

இணைப்புகள்


✅Finalised Page