நூல்கள் நாட்டுடைமை
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூல்களை உலகளாவிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் தமிழக அரசால் பொதுவுரிமை ஆக்கப்படுவதே நூல்கள் நாட்டுடைமைத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படும் அறிஞர்களின் மரபுரிமையருக்கு தமிழக அரசு பரிவுத்தொகை வழங்குகிறது.
நோக்கம்
தமிழ் வளர்ச்சிக்காகவும், உயர்வுக்காகவும் உழைத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்களின் சிந்தனைகளும் கருத்துக்களும் மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களது தமிழ் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. அவர்களது மரபுரிமையருக்கு, நாட்டுடைமையாளர்களின் பங்களிப்புகளுக்கேற்ப பரிவுத் தொகை வழங்கப்படுகிறது.
பயன்பாடு
நாட்டுடைமை ஆக்கப்படும் நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால மின்னூலாக்கம் செய்யப்பட்டு ‘தமிழ் இணையக் கல்விக் கழகம்’ இணையதளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள எவரும் இந்நூல்களை எவ்விதக் கட்டணமுமின்றிப் பயன்படுத்தலாம்.
படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர்கள் பட்டியல் (2024 வரை)
உசாத்துணை
- தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்
- தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
- நாட்டுடைமை நூல்கள் தினமலர் செய்திக் குறிப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Aug-2023, 08:19:03 IST