under review

தூயன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
(Corrected error in line feed character)
 
(One intermediate revision by the same user not shown)
Line 11: Line 11:
[[File:Irumunai.png|thumb|commonfolks.in]]
[[File:Irumunai.png|thumb|commonfolks.in]]
தூயனின் இருமுனை சிறுகதைத் தொகுப்பை மதிப்பிடும் [[எம்.கோபாலகிருஷ்ணன்|எம்.கோபால கிருஷ்ணன்]] "தூயனின் கதைகள் அடர்த்தியானவை. சற்றும் ஆசுவாசத்தைத் தராமல் தொடர்ந்து வாழ்வின் இருண்ட மலினம் நிறைந்த பகுதிகளின் துயரையும் கசப்பையும் திரட்டித் தருபவை. கதைகளினூடாகச் சொல்லப்படும் துல்லியமான தகவல்களும் அவற்றின் சித்தரிப்பும் கதையின் மையத்தை மேலும் கூர்மையடையச் செய்கின்றன. மனம் கூசச் செய்யும் தருணங்கள் பலவும் கட்டற்ற மூர்க்கத்துடன் வெளிப்படுகின்றன" என்கிறார்.

கதீட்ரல் நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கோடை மலையின் செண்பகனூர் கிறிஸ்துவ தேவலாயமொன்றில் நீட்ஷன் எனும் பாதிரியார் நிகழ்த்தும் ரகசிய ஆராய்ச்சிகளை கதைக்களமாய் கொண்டது. "வழக்கமான நேர்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச்சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது" என மோகனரங்கன் குறிப்பிடுகிறார்.

==நூல்கள்==
==நூல்கள்==

Latest revision as of 20:14, 12 July 2023

தூயன்

தூயன் (மே 16, 1986) தமிழில் எழுதும் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். வரலாற்றையும் கருத்தில்கொண்டு புதிய புனைவு உத்திகள் வழியாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தூயன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரிமளம் என்ற ஊரில் ராணி, முனுசாமி தம்பதியினருக்கு மே 16, 1986 அன்று மகனாகப் பிறந்தார். சகோதரி நிலா. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கிண்டி கிங் அரசு ஆய்வுக்கூட கல்லூரியில் தொழிற்கல்வியும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுநிலை நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றார். தூயன் ஜூன் 2014-ல் பவித்ராவை மணந்தார். இவர்களுக்கு லெவின் என்னும் மகனும் இதா என்னும் மகளும் உள்ளனர். தற்போது புதுக்கோட்டை ESI மருத்துவமனை ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.

கதீட்ரல் நாவல்

இலக்கிய வாழ்க்கை

தூயனின் முதல் கதை கணையாழியில் 2012-ல் வெளியானது. தீராநதி, உயிர் எழுத்து, காலச்சுவடு, மணல்வீடு போன்ற இதழ்களிலும் கதைகள் வெளியாகின. ஆதர்ச எழுத்தாளர்களாக சாருநிவேதிதா மற்றும் ஜெயமோகனைக் குறிப்பிடுகிறார். இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களாக பா.வெங்கடேசன், புதுமைப்பித்தன், உம்பர்டோ ஈகோ (Umberto Eco), மிலன் குந்தேரா(Milan Kundera) ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

'யாவரும்' பதிப்பகம் 2016-ல் வெளியிட்ட தூயனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'இருமுனை’ பரவலாக கவனத்திற்கு உள்ளானது. முதல் நாவலான 'கதீட்ரல்’ 2021-ல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'டார்வினின் வால்’ 2021-ல் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கட்டுரைகளும் இலக்கிய விமர்சனங்களும் தொடர்ந்து எழுதி வருகிறார். பரிசோதனை இதழுக்காக Etger Keret குறுங்கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

இலக்கிய இடம்

commonfolks.in

தூயனின் இருமுனை சிறுகதைத் தொகுப்பை மதிப்பிடும் எம்.கோபால கிருஷ்ணன் "தூயனின் கதைகள் அடர்த்தியானவை. சற்றும் ஆசுவாசத்தைத் தராமல் தொடர்ந்து வாழ்வின் இருண்ட மலினம் நிறைந்த பகுதிகளின் துயரையும் கசப்பையும் திரட்டித் தருபவை. கதைகளினூடாகச் சொல்லப்படும் துல்லியமான தகவல்களும் அவற்றின் சித்தரிப்பும் கதையின் மையத்தை மேலும் கூர்மையடையச் செய்கின்றன. மனம் கூசச் செய்யும் தருணங்கள் பலவும் கட்டற்ற மூர்க்கத்துடன் வெளிப்படுகின்றன" என்கிறார்.

கதீட்ரல் நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கோடை மலையின் செண்பகனூர் கிறிஸ்துவ தேவலாயமொன்றில் நீட்ஷன் எனும் பாதிரியார் நிகழ்த்தும் ரகசிய ஆராய்ச்சிகளை கதைக்களமாய் கொண்டது. "வழக்கமான நேர்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச்சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது" என மோகனரங்கன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்
  • கதீட்ரல் (2021)
சிறுகதைகள்
  • இருமுனை (2016)
  • டார்வினின் வால் (2021)

உசாத்துணை

✅Finalised Page