second review completed

தி. தயானந்தன் பிரான்சிஸ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தி. தயானந்தன் பிரான்சிஸ், ஆகஸ்ட் 14, 1932 அன்று, ராணிப்பேட்டையில், ரெவரண்ட் எபநேசர் டிக்கிகஸ் - கிரேஸ் ராஜம்மாள் இணையருக்குப் பிறந்தார். வேலூர் ஊரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பெங்களூரில் ஐக்கிய இறையியல் கல்லூரியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்று பி.டி (Bachelor Of Divinity - B.D), பட்டம் பெற்றார். தொடர்ந்து மாஸ்டர் ஆஃப் தியாலஜி (M.Th) பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பயின்று மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று முதுநிலை முனைவர் (டி.லிட்) பட்டம் பெற்றார். இறையியல் கல்வியில் டி.டி. (Doctor Of Divinity - D.D) பட்டம் பெற்றார்.  
தி. தயானந்தன் பிரான்சிஸ், ஆகஸ்ட் 14, 1932 அன்று, ராணிப்பேட்டையில், ரெவரண்ட் எபநேசர் டிக்கிகஸ் - கிரேஸ் ராஜம்மாள் இணையருக்குப் பிறந்தார். வேலூர் ஊரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பெங்களூரில் ஐக்கிய இறையியல் கல்லூரியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்று பி.டி (Bachelor Of Divinity - B.D), பட்டம் பெற்றார். தொடர்ந்து இறையியலில் முதுகலைப் பட்டம் (Master of Theology) பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பயின்று மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று முதுநிலை முனைவர் (டி.லிட்) பட்டம் பெற்றார். இறையியல் கல்வியில் டி.டி. (Doctor Of Divinity - D.D) பட்டம் பெற்றார்.  


== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
Line 174: Line 174:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{First review completed}}
{{Second review completed}}

Revision as of 07:28, 6 May 2024

டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ்

தி. தயானந்தன் பிரான்சிஸ் (டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ்; முனைவர் தயானந்தன் பிரான்சிஸ்; டாக்டர் தயா) (ஆகஸ்ட் 14, 1932 – ஜூன் 9, 2007) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், பதிப்பாளர், கிறிஸ்தவ இலக்கிய ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார். இலக்கியம் சார்ந்தும் கிறிஸ்தவம் சார்ந்தும் நூற்றுக்கணக்கான நூல்களைப் பதிப்பித்தார். ‘கிறிஸ்தவ தமிழ்க் காவலர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தி. தயானந்தன் பிரான்சிஸ், ஆகஸ்ட் 14, 1932 அன்று, ராணிப்பேட்டையில், ரெவரண்ட் எபநேசர் டிக்கிகஸ் - கிரேஸ் ராஜம்மாள் இணையருக்குப் பிறந்தார். வேலூர் ஊரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பெங்களூரில் ஐக்கிய இறையியல் கல்லூரியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்று பி.டி (Bachelor Of Divinity - B.D), பட்டம் பெற்றார். தொடர்ந்து இறையியலில் முதுகலைப் பட்டம் (Master of Theology) பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பயின்று மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று முதுநிலை முனைவர் (டி.லிட்) பட்டம் பெற்றார். இறையியல் கல்வியில் டி.டி. (Doctor Of Divinity - D.D) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தயானந்தன் பிரான்சிஸ் மணமானவர். மனைவி: பத்மினி. இவர்களுக்கு மூன்று மகன்கள்.

கல்விப் பணிகள்

தயானந்தன் பிரான்சிஸ், 1956-ல், வேலூர் ஊரிஸ் கல்லூரியில், ஓராண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1971-ல், மதுரையில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இங்கிலாந்தில், லண்டன் பல்கலையைச் சார்ந்த கிங்க்ஸ் கல்லூரியில் இறையியல் துறை பேராசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

மதப்பணிகள்

தயானந்தன் பிரான்சிஸ், தென்னிந்தியத் திருச்சபை மதுரைப் பேராலயத்தில், 1972-ல் அருட்பொழிவு பெற்றார். இந்தியாவிலும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் இறையியல் கல்லூரிகளில் இறைப்பணியாற்றினார்.

டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தயானந்தன் பிரான்சிஸ், பச்சையப்பன் கல்லூரியில் தனது ஆசிரியர்களாக இருந்த அ.ச.ஞானசம்பந்தன், டாக்டர் மு. வரதராசன் போன்றோரால் இலக்கிய ஆர்வம் பெற்றார். 1954-ல், ‘மலை மா நதியோ மிகு ஆழ் கடலோ’ என்னும் தனது முதல் பாடலை எழுதினார். ‘தயா’ என்னும் புனைபெயரில் கிறிஸ்தவ இதழ்களில் கவிதைகள், கிறிஸ்தவ இசைப் பாடல்களை எழுதினார். விதயாதனம், மாலைமணி, திராவிடன், போர்வாள், பூக்கூடை, மனை மலர் போன்ற இதழ்களில் தயானந்தன் பிரான்சிஸின் கவிதை, கட்டுரைகள் வெளியாகின. பொன்னி, காதல், தேன்கூடு, பிரசண்ட விகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். 'வேலை-வில்லவன்', 'நந்தபிரான்', 'அமுதினி', 'பரிவன்பன்', 'தயவுடை நம்பி', 'தயாளன்', 'பத்மினிமணாளன்' போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், இசைப் பாடல்கள், சமய நூல்கள், இறையியல் நூல்கள், ஆய்வு நூல்கள் என எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். வானொலியில் பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.

மொழிபெயர்ப்பு

தயானந்தன் பிரான்சிஸ் வேதாகமச் சங்கத்தின் தமிழ்த் திருமுறை மொழிபெயர்ப்புக் குழுக்களில் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1995-ல், பரிசுத்த வேதாகமத்தின் பொது மொழிபெயர்ப்பு நூல் உருவானபோது அதில் பங்களித்தார்.

தனது இசைப் பாடல்கள், கீர்த்தனைகள் பலவற்றை அவற்றின் ராகங்கள் மாறாமல் ஆங்கிலத்தில் பாடலாக்கம் செய்தார்.

அமைப்புப் பணிகள்

தயானந்தன் பிரான்சிஸ், நண்பர்கள் சன்னி யேசுவடியான், டாக்டர். இஸ்ரேல் ஆகியோருடன் இணைந்து ‘நண்பர்கள் வட்டம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

தயானந்தன் பிரான்சிஸ் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணியாற்றும்போது பல இலக்கியக் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தினார். பல புத்தக விமர்சனக் கூட்டங்களை நடத்தினார். தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் நூலோர் குழுத் தலைவராகப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். அவற்றில் சில பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக வைக்கப்பட்டன.

பொறுப்புகள்

  • தேசிய மிஷனரி சங்கத்தின் (National Missionary Society) வாழ்நாள் உறுப்பினர்..
  • கிறிஸ்தவ இளைஞர்கள் சங்கத்தின் (Young Men's Christian Association) வாழ்நாள் உறுப்பினர்.
  • உலக கிறிஸ்தவ தமிழ் அகாடமியின் பொதுச் செயலாளர்.
  • இந்தியக் கிறிஸ்தவ பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர்.
  • சென்னை கிறிஸ்தவ கலை மற்றும் தகவல் தொடர்பு மையத்தின் தயாரிப்பு மேலாளர்.
  • வேலூர் சி.எஸ்.ஐ. பெத்தேல் சர்ச்சின் ஆட்சிக் குழு உறுப்பினர்
  • ஆசியவியல் நிறுவனத்தின் செயலாளர்

பதிப்பு

தயானந்தன் பிரான்சிஸ் இலக்கியம் சார்ந்தும் கிறிஸ்தவம் சார்ந்தும் நூற்றுக்கணக்கான நூல்களைப் பதிப்பித்தார்.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்

தயானந்தன் பிரான்சிஸ் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளராக 1979 முதல் 2002 வரை பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் பல நூல்கள் வெளிவரத் துணை நின்றார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், இலக்கிய நூல்கள் எனப் பல எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். கிறிஸ்தவம் சார்ந்த பல அரிய நூல்களை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார்.

சரஸ்வதி ராம்நாத், தி. பாக்கியமுத்து, திருச்சி பாரதன், கார்த்திகா ராஜ்குமார், செ. யோகநாதன், டேவிட் சித்தையா, டி. செல்வராஜ், ஜி.எஸ். வேதநாயகர், கல்வி கோபாலகிருஷ்ணன், வே. சேனாபதி, பூவை எஸ். ஆறுமுகம், த. கோவேந்தன், ஆர்.எஸ். ஜேக்கப், கிரேஸ் செல்வராஜ், பொன்னு ஆ. சத்தியசாட்சி, ம.இலெ. தங்கப்பா என நூற்றுக்கணக்கானவர்களது நூல்களைப் பதிப்பித்தார்.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார். கருத்தரங்குக் கட்டுரைகளைப் பதிப்பித்து நூல்களாக வெளியிட்டார்.

இதழியல்

தயானந்தன் பிரான்சிஸ் ’தொடர்பு’, ‘இறையியல் மலர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘பூக்கூடை’ இதழின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றினார்.

நாடகம்

தயானந்தன் பிரான்சிஸ் நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவற்றில் சில வானொலியில் ஒலிபரப்பாகின. ’கூட்டங்கள்’, ’கற்கள்’, ‘தமிழகத்தில் தோமையார்’ போன்ற நாடகங்களை எழுதினார்.

இசை வாழ்க்கை

தயானந்தன் பிரான்சிஸ் இருநூற்றிற்கும் மேற்பட்ட இசைப் பாடல்களை எழுதினார். அவை இரண்டு தொகுதிகளாக வெளியாகின. பாடல்களில் சில ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் வெளிவந்தன. தயானந்தன் பிரான்சிஸின் பல பாடல்கள் தமிழ்த் திருச்சபைகளில் பாடப்பட்டன.

விருதுகள்

  • கிறிஸ்தவத் தமிழ் அகாடமி அளித்த கிறிஸ்தவக் காவலர் பட்டம்
  • இலக்கியச் செல்வர் பட்டம்

மறைவு

தயானந்தன் பிரான்சிஸ் ஜூன் 9, 2007 அன்று வேலூரில் காலமானார்.

மதிப்பீடு

தயானந்தன் பிரான்சிஸ் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், சமயம் சார்ந்த பல நூல்கள் வெளிவரக் காரணமானார். பல எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுடைய படைப்புகளை வெளியிட்டார். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் மூலம் நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டார். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் மூலம் இலக்கிய வளர்த்த முன்னோடிகளுள் ஒருவராக தயானந்தன் பிரான்சிஸ் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • வாழ்வளிக்கும் வள்ளல்
  • இறைவனின் திருமைந்தன்
  • உயர்தனிப் பாடல்
  • கிறிஸ்து நெறிக் கவிதைகள்
  • அருள்நாதர் அந்தாதி (இதயாஞ்சலி)
  • கிறிஸ்து என் காதலர்
  • ஒரு பாதிரியின் பார்வையில் (புதுக்கவிதை)
கட்டுரை நூல்கள்
  • கிறிஸ்தவ அருட் கவிஞர்கள்
  • கிறிஸ்து நெறிப் பாவலர்கள்
  • கிறிஸ்தவத் தமிழிலக்கியம்
  • கிறிஸ்தவக் கவிஞர்களும் தமிழ்ப்பண்பாடும்
  • விசுவாசத்தில் மார்ட்டின் லூதர்
  • நிமிடச் செய்திகள்
  • இந்து சமய நெறி
  • இஸ்லாமிய நெறி
  • தமிழ்ச் சைவம்
  • இருபெரும் சமயங்கள்
  • இறைவனின் திருமைந்தர்
  • திருச்சபை தெருச்சபையாக வேண்டும்
  • தொடர்கின்ற பயணம்
  • சிலுவைக் காட்சி பார்க்கையில்
  • ஒரு புத்தகம் உங்களைப் படிக்கிறது
  • உரையாடும் உள்ளங்கள்
  • துதித்தலுடனே
  • நாளொரு வசனம் பொழுதொரு தியானம் (ஆறு பாகங்கள்)
சிறுகதைத் தொகுப்பு
  • மஞ்சள் கயிறு
  • டாக்டர் தயாவின் சிறுகதைத் தொகுப்பு
நாடகம்
  • கற்கள்
  • கூட்டங்கள்
  • கண்கள் திறக்கின்றன
  • தமிழகத்தில் தோமையார்
இசைப் பாடல் நூல்கள்
  • மலைமாநதியோ
  • நானுமக்குச் சொந்தமானவன்
  • நீர் எனக்குத் தஞ்சமானவர்
  • கிறிஸ்தவக் கீர்த்தனைகளும் புத்தெழுச்சிப் பாடல்களும்
  • அருளிசையமுது
  • அப்போஸ்தலர் மொழிக்குறள்
கடித நூல்
  • உறவாடும் உள்ளங்கள்
குறுங்காவியம்
  • அன்பழைப்பு
பதிப்பித்த நூல்கள்
  • படைப்பிலக்கியப் பார்வையில் எண்பதுகளும் தொண்ணூறுகளும்
  • படைப்பாளர்கள் பார்வையில் மானுடத்தின் காயங்கள்
  • தற்காலப் படைப்பிலக்கியத்தில் மத நல்லிணக்கமும் மனித நேயமும்
  • பண்பாட்டுச் சீரழிவுகள் படைப்பாளர்கள் பார்வையும் பாராமுகமும் (ஸ்வீட்லின் பிரபாகர் உடன் இணைந்து பதிப்பித்தது)
  • மக்கள் இலக்கியமும் திறனாய்வுப் போக்குகளும் (ஸ்வீட்லின் பிரபாகர் உடன் இணைந்து பதிப்பித்தது)
  • இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வீச்சும் எழுச்சி மிக்க படைப்பாளர்களும் (ஸ்வீட்லின் பிரபாகர் உடன் இணைந்து பதிப்பித்தது)
ஆங்கில இசைப் பாடல் நூல்கள்
  • My Great Redeemer's Praise
  • Hold Fast the Shield of Faith
ஆங்கில நூல்கள்
  • Christian Poets and Tamil Culture
  • Reflections on Inter Faith Themes
  • The Mission and Message of Ramalinga Swamy
  • Sadhu Sunder Singh - The Lover of the Cross
  • Called to Communicate
  • Aspects of Christian and Hindu Bhakthi
  • New Approaches to Inter Faith Dialogue
  • Tamil Saivism Transcending Message of Ramalinga Swamy
  • The Relevance of Hindu Ethos for Christian Presence
  • The relevance of Hindu ethos for Christian presence: a Tamil perspective
  • The Good news of Jesus Christ in the Indian setting
  • A.J. Appasamy: A Christian Forerunner of Inter-religious Dialogue in India
  • The contribution of Protestant missionaries to Tamil prose and Bible translation
  • The Christian bhakti of A. J. Appasamy: (a collection of his writings)
  • The Christian witness of Sadhu Sundar Singh: a collection of his writings
  • Many voices in Christian mission: essays in honour of J. E. Lesslie Newbiggin, world Christian leader, presented on the occasion of his 85th birthday
  • Asian expressions of Christian commitment: a reader in Asian theology
  • The contribution of Protestant missionaries to Tamil prose and Bible translation
  • Toward a humanist theology of religious harmony: insights from the writings of Dayanandan Francis (with Selvanayagam Israel)

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.