under review

திருவாவடுதுறை ஆதீனம்

From Tamil Wiki
Revision as of 20:33, 18 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "thumb|திருவாடுதுறை ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம் (துறைசை ஆதீனம்)(திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்) (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) சைவ மடம். தென் இந்தியா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருவாடுதுறை ஆதீனம்

திருவாவடுதுறை ஆதீனம் (துறைசை ஆதீனம்)(திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்) (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) சைவ மடம். தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம். இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சமயம் ஆகியவற்றை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்ற தமிழறிஞர்களை உருவாக்கிய ஆதீனம்.

வரலாறு

திருவாவடுதுறை காவிரி ஆற்றின் தென்கரையில் தேவாரம் பாடப்பட்ட சிவஸ்தலங்களுள் ஒன்று. இது கும்பகோணத்திரிலிருந்து மயூரம் செல்லும் வழியில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற நமச்சிவாய தேசிக மூர்த்தியால் பொ.யு 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று. கைலாயப்பரம்பரையில் வந்த ஆதீனமாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவெண்ணெய்நல்லூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக எழுபத்தி ஐந்து கோவில்கள் உள்ளன.

குருமகா சந்நிதானம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த நமசிவாயமூர்த்திகள்.

  • ஸ்ரீலஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் (ஆதின நிறுவனர், குரு முதல்வர்)
  • ஸ்ரீலஸ்ரீ மறைஞான தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ உருத்திரகோடி தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்
  • ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்(1622-1625)
  • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் (1625-1658)
  • ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க தேசிகர் (1658-1678)
  • ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் (1678-1700)
  • ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் (1700-1730)
  • ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் (1730-1770)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் காலம் 1770-1789
  • ஸ்ரீலஸ்ரீ வேளூர் சுப்பிரமணிய தேசிகர் (1789-1845)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1845-1869)
  • ஸ்ரீலஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் (1869- 1888)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (07-01-1888 - 15-04-1920)
  • ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (15-04-1920 - 05-02-1922)
  • ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் (05-02-1922 - 1937)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1937 - 13-04-1951)
  • ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (13-04-1951 - 23-09-1967)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (23-09-1967 - 07-04-1983)
  • ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் (07-04-1983 - 23-11-2012)
  • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் (23-11-2012 - தற்பொழுது வரை)

தமிழ் இலக்கியப்பங்களிப்பு

திருவாவடுதுறை ஆதீனம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டும், மறுபதிப்பும் செய்துள்ளது. திருக்குறளை முதன்முதலில் அடி, சீர் அமைத்து வெளியிட்டது. திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம், இலக்கணம், நாடகம், புராணம் எனப் பலதுறை சார்ந்த அரிய பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23-ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும், புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கிளைமடங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாவடுதுறை ஆதீன அறிஞர்கள்

உசாத்துணை

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.