under review

டி.ஆர். சுப்பிரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
[[File:TRSubramaniyam.webp|thumb]]
[[File:TRSubramaniyam.webp|thumb|325x325px]]
[[File:டி.ஆர். சுப்பிரமணியன்1.png|thumb|295x295px|டி.ஆர். சுப்பிரமணியன்]]
டி.ஆர். சுப்பிரமணியன் (திருநாகேஸ்வரம் வாத்திய பத்மம் டி.ஆர். சுப்பிரமணியன்) (பிறப்பு: ஜனவரி  3, 1950) தவில் கலைஞர். வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையின் மாணவர். வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை, சிதம்பரம் எஸ். ராதாகிருஷ்ணன் பிள்ளை ஆகியோருடன் வாசித்தவர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
[[File:TR-Subramaniyam-1.webp|thumb]]
டி.ஆர். சுப்பிரமணியன் தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் ஜனவரி 3, 1950 அன்று தவில் வித்வான் திருநாகேஸ்வரம் கே. ரத்தினசாமி பிள்ளை, ஆர். சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் டி.ஆர். கோவிந்தராஜன் (தவில் கலைஞர்), டி.ஆர். கதிர்வேலாயுதம், ஆர். கமலா, ஆர். ராஜலட்சுமி.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
[[File:TR-Subramaniyam-2.webp|thumb]]
டி.ஆர். சுப்பிரமணியன் எஸ். கஸ்தூரி என்கிற தையல்நாயகியை 1972-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுப்பிரமணியன், கஸ்தூரி தம்பதியருக்கு காவேரி, மாலதி, வேம்பு, ஜெயந்தி, மணிகண்டன், ஜயப்பன் என ஆறு குழந்தைகள். எஸ். மணிகண்டன் மிருதங்க கலைஞர்; எஸ். ஐயப்பன் கஞ்சிரா கலைஞர்.

== இசை வாழ்க்கை ==
== இசை வாழ்க்கை ==
[[File:TR-Subramaniyam-4.webp|thumb]]
[[File:டி.ஆர். சுப்பிரமணியன்2.png|thumb|டி.ஆர். சுப்பிரமணியன்]]
திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியன் தவில் வாசிப்பின் ஆரம்பக் கல்வியைத் தன் தந்தை ரத்தினசாமி பிள்ளையிடம் கற்றபின் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தவில் ஆசிரியராக இருந்த வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையிடம் மூன்று ஆண்டுகள் கற்றார்.  தன் ஒன்பதாவது வயதில் குரு வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையுடன் இணைந்து திருவாவடுதுறை ஆதீனம் முன்பாக வாசித்தது அவரது முதல் மேடை அரங்கேற்றம்.   

Line 24: Line 23:
டி.ஆர். சுப்பிரமணியன் தவில் இசை வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திப் பல மாணவர்களை உருவாக்கினார். அவரது குருகுலத்தில் தென்னிந்தியா, ப்ரான்ஸ், மலேசியா, இலங்கை, கனடா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வந்து தங்கி மாணவர்கள் பயின்றுள்ளனர். அவரது மாணவர்களில் பலர் மாவட்ட இசைப்பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக உள்ளனர். டி.ஆர். சுப்பிரமணியன் இந்திய அரசு மற்றும் தமிழக அரசால் சிறப்பு ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டு பல இளம் மாணவர்களை பயிற்றுவித்துள்ளார்.  

== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==
டி.ஆர். சுப்பிரமணியனுக்கு நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மூன்று மணி நேரம் தொடர்ந்து வாசித்தாலும் ஒரே சொற்கட்டுகள் திரும்ப வராதபடிக்கு வாசிப்பதில் திறனாளர். தவிலை மிருதங்கங்கம் போல கையாளும் மிகச்சில கலைஞர்களில் ஒருவர். ஒலிவாங்கி இல்லாமலேயே இவருடைய தவிலிசை கேட்பதற்கு இனிமையானது. மரபின் வேர்களை அறுக்காமல் புதிய பரிமாணங்களுடனான வாசிப்பை நிகழ்த்துபவர். ஒழுங்கமையில்லாமல் வாசித்தால் தான் தவிலிசையில் அறிவுஜீவி என்று இல்லை என நிரூபித்தவர்.
டி.ஆர். சுப்பிரமணியனுக்கு நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மூன்று மணி நேரம் தொடர்ந்து வாசித்தாலும் ஒரே சொற்கட்டுகள் திரும்ப வராதபடிக்கு வாசிப்பதில் திறனாளர். தவிலை மிருதங்கம் போல மென்மையாகக் கையாளும் மிகச்சில கலைஞர்களில் ஒருவர். ஒலிவாங்கி இல்லாமலேயே இவருடைய தவிலிசை கேட்பதற்கு இனிமையானது. மரபின் வேர்களை அறுக்காமல் புதிய பரிமாணங்களுடனான வாசிப்பை நிகழ்த்துபவர். ஒழுங்கமையில்லாமல் வாசித்தால் தான் தவிலிசையில் அறிவுஜீவி என்று இல்லை என நிரூபித்தவர்.
 
== உடன் வாசித்தவர்கள் ==
== உடன் வாசித்தவர்கள் ==
[[File:TR-Subramaniyam-5.webp|thumb]]
[[File:TR-Subramaniyam-5.webp|thumb|395x395px]]

=== தவில் கலைஞர்கள் ===
=== தவில் கலைஞர்கள் ===
Line 63: Line 63:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல், [[மு. இளங்கோவன்|முனைவர் மு. இளங்கோவன்]]

* [https://solvanam.com/2024/04/14/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/ வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல் - சொல்வனம், ஏப்ரல் 14, 2024]
* [https://solvanam.com/2024/04/14/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/ வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல் - சொல்வனம்: லலிதாராம்]
* [https://carnaticmusicreview.wordpress.com/2024/04/12/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/ வித்வான் டி.ஆர்.சுப்ரமணியம் – வாழ்நாள் சாதனையாளர் விருது: லலிதாராம்]

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

Latest revision as of 16:52, 5 May 2024

TRSubramaniyam.webp
டி.ஆர். சுப்பிரமணியன்

டி.ஆர். சுப்பிரமணியன் (திருநாகேஸ்வரம் வாத்திய பத்மம் டி.ஆர். சுப்பிரமணியன்) (பிறப்பு: ஜனவரி 3, 1950) தவில் கலைஞர். வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையின் மாணவர். வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை, சிதம்பரம் எஸ். ராதாகிருஷ்ணன் பிள்ளை ஆகியோருடன் வாசித்தவர்.

பிறப்பு, கல்வி

டி.ஆர். சுப்பிரமணியன் தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் ஜனவரி 3, 1950 அன்று தவில் வித்வான் திருநாகேஸ்வரம் கே. ரத்தினசாமி பிள்ளை, ஆர். சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் டி.ஆர். கோவிந்தராஜன் (தவில் கலைஞர்), டி.ஆர். கதிர்வேலாயுதம், ஆர். கமலா, ஆர். ராஜலட்சுமி.

தனி வாழ்க்கை

டி.ஆர். சுப்பிரமணியன் எஸ். கஸ்தூரி என்கிற தையல்நாயகியை 1972-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுப்பிரமணியன், கஸ்தூரி தம்பதியருக்கு காவேரி, மாலதி, வேம்பு, ஜெயந்தி, மணிகண்டன், ஜயப்பன் என ஆறு குழந்தைகள். எஸ். மணிகண்டன் மிருதங்க கலைஞர்; எஸ். ஐயப்பன் கஞ்சிரா கலைஞர்.

இசை வாழ்க்கை

டி.ஆர். சுப்பிரமணியன்

திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியன் தவில் வாசிப்பின் ஆரம்பக் கல்வியைத் தன் தந்தை ரத்தினசாமி பிள்ளையிடம் கற்றபின் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தவில் ஆசிரியராக இருந்த வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையிடம் மூன்று ஆண்டுகள் கற்றார். தன் ஒன்பதாவது வயதில் குரு வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையுடன் இணைந்து திருவாவடுதுறை ஆதீனம் முன்பாக வாசித்தது அவரது முதல் மேடை அரங்கேற்றம்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் டி.ஆர். சுப்பிரமணியன் வாசிப்பதைப் பார்த்த ஏ.கே.சி. நடராஜன் அவரைத் தன் குழுவில் சேர்த்துக் கொண்டார். அதன்பின் சிதம்பரம் கோவிலில் ஆஸ்தான வித்வானாக இருந்த இராதாகிருஷ்ணன் பிள்ளையிடம் சேர்ந்து வாசித்தார். சிதம்பரத்தில் இருந்த போது ஆண்டான்கோவில் செல்வரத்னம் பிள்ளை, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, திருவதிகை வேணு பிள்ளை, திருச்சேறை சிவசுப்ரமண்ய பிள்ளை ஆகியோரின் கச்சேரிகளில் தவில் வாசித்துள்ளார்.

டி.ஆர். சுப்பிரமணியன் மலேசியாவில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் திருப்பாம்புரம் டி.கே.எஸ். சுவாமிநாதன், டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம் சகோதரர்களுடன் இணைத்து புதிய இசைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.

டி.ஆர். சுப்பிரமணியன் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் 'ஏ-ஹை' (A-High) கிரேட் தவில் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இசை வகுப்புகள்

TR-Subramaniyam-3.webp

டி.ஆர். சுப்பிரமணியன் தவில் இசை வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திப் பல மாணவர்களை உருவாக்கினார். அவரது குருகுலத்தில் தென்னிந்தியா, ப்ரான்ஸ், மலேசியா, இலங்கை, கனடா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வந்து தங்கி மாணவர்கள் பயின்றுள்ளனர். அவரது மாணவர்களில் பலர் மாவட்ட இசைப்பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக உள்ளனர். டி.ஆர். சுப்பிரமணியன் இந்திய அரசு மற்றும் தமிழக அரசால் சிறப்பு ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டு பல இளம் மாணவர்களை பயிற்றுவித்துள்ளார்.

மதிப்பீடு

டி.ஆர். சுப்பிரமணியனுக்கு நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மூன்று மணி நேரம் தொடர்ந்து வாசித்தாலும் ஒரே சொற்கட்டுகள் திரும்ப வராதபடிக்கு வாசிப்பதில் திறனாளர். தவிலை மிருதங்கம் போல மென்மையாகக் கையாளும் மிகச்சில கலைஞர்களில் ஒருவர். ஒலிவாங்கி இல்லாமலேயே இவருடைய தவிலிசை கேட்பதற்கு இனிமையானது. மரபின் வேர்களை அறுக்காமல் புதிய பரிமாணங்களுடனான வாசிப்பை நிகழ்த்துபவர். ஒழுங்கமையில்லாமல் வாசித்தால் தான் தவிலிசையில் அறிவுஜீவி என்று இல்லை என நிரூபித்தவர்.

உடன் வாசித்தவர்கள்

TR-Subramaniyam-5.webp

தவில் கலைஞர்கள்

டி.ஆர். சுப்பிரமணியன் உடன் வாசித்த தவில் கலைஞர்கள்,

நாதஸ்வரக் கலைஞர்கள்

டி.ஆர். சுப்பிரமணியன் உடன் வாசித்த நாதஸ்வரக் கலைஞர்கள்,

விருதுகள்

  • லய கான குபேர தவில் சக்கிரவர்த்தி விருது, தவில் இசை கலைஞர்கள் சங்கம், கோலாலம்பூர், மலேசியா - 1993
  • தவில் சொற்சுவை விருது, தமிழ் சங்கம், டில்லி - 1995
  • தவில் செல்வம் விருது, தமிழக அரசு - 2000
  • 'வித்யா தன கர்ணா', நெல்லூர் (ஆந்திரா) இசை சங்கம், 2006
  • சிறப்பு விருது, இலங்கை நாதஸ்வர தவில் கலைஞர்கள் நலம் மற்றும் முன்னேற்ற சங்கம், இலங்கை - 2010
  • தவில் கலை உலக மாமணி, சிதம்பரம் 2013
  • வலையப்பட்டி விருது, வலையபட்டி ஏ.ஆர். சுப்பிரமணியன், சென்னை
  • 'கலா சிகரம்' விருது, வழங்கியவர் - பத்மஸ்ரீ ஹரிதுவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஏ.கே.பி. ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை - 2015

உசாத்துணை

வெளி இணைப்புகள்

✅Finalised Page