under review

சாந்துப்புலவர்

From Tamil Wiki
Revision as of 11:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சாந்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கை வரலாறு

சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

சாந்துப்புலவர் 1778-ல் மயூரகிரிக்கோவை நூலை இயற்றி அரங்கேற்றினார்.

மறைவு

சாந்துப்புலவர் 1801-ல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.

நூல்கள்

  • மயூரகிரிக்கோவை

உசாத்துணை


✅Finalised Page