சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுகள்
From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சாகித்ய அகாதெமி நிறுவனம், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் யுவபுரஸ்கார் விருதினை வழங்குகிறது. 2011 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
யுவபுரஸ்கார் விருது
இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பாற்றும் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, சாகித்ய அகாதெமி நிறுவனம், ஆண்டுதோறும் யுவ புரஸ்கார் விருதினை வழங்குகிறது. 2011 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஐம்பதாயிரம் ரூபாய் பரிசினையும், சால்வையையும், கேடயத்தையும் கொண்டது.
யுவபுரஸ்கார் விருதாளர்கள் - 2022 வரை
ஆண்டு | நூலாசிரியர் | படைப்பு | படைப்பின் தன்மை |
---|---|---|---|
2011 | ம. தவசி | சேவல்கட்டு | நாவல் |
2012 | மலர்வதி | தூப்புக்காரி | நாவல் |
2013 | கதிர் பாரதி | மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள் | கவிதை |
2014 | ஆர். அபிலாஷ் | கால்கள் | நாவல் |
2015 | வீரபாண்டியன் | பருக்கை | நாவல் |
2016 | லக்ஷ்மி சரவணகுமார் | கானகன் | நாவல் |
2017 | மனுஷி (ஜெ. ஜெயபாரதி) | ஆதிக் காதலின் நினைவு குறிப்புகள் | கவிதை |
2018 | சுனில் கிருஷ்ணன் | அம்பு படுக்கை | சிறுகதைத் தொகுப்பு |
2019 | சபரிநாதன் | வால் | கவிதை |
2020 | சக்தி | மரநாய் | கவிதை |
2021 | கார்த்திக் பாலசுப்ரமணியன் | நட்சத்திரவாசிகள் | நாவல் |
2022 | ப. காளிமுத்து | தனித்திருக்கும் அரளிகளின் மதியம் | கவிதை |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.