under review

கார்த்திகேசு சிவத்தம்பி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Line 9: Line 9:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சிவத்தம்பி யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில், சைவப்புலவரான பண்டிதர் பொ. கார்த்திகேசு ஆசிரியருக்கும், வள்ளியம்மைக்கும் மே 10, 1932 அன்று பிறந்தார்.
சிவத்தம்பி யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில், சைவப்புலவரான பண்டிதர் பொ. கார்த்திகேசு ஆசிரியருக்கும், வள்ளியம்மைக்கும் மே 10, 1932 அன்று பிறந்தார்.
கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும், இளநிலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார். இங்கிலாந்திலுள்ள பெர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் 1970-ஆம் ஆண்டு சேர்ந்து, உலகப் புகழ் பெற்ற மார்க்சிய அறிஞரான பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டலில் 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் அரங்கியல்’ (Drama in Ancient Tamil Society) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.  

== கல்விப்பணி ==
== கல்விப்பணி ==
கா.சிவத்தம்பி நான்கு ஆண்டுகள் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1965வரை இலங்கைப் பாராளுமன்றத்தின் சமகால மொழிபெயர்ப்பாளராக (Simultaneous Interpreter) பதவி வகித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1978 முதல் 1996வரை பதினெட்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் உள்ள கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஸ்கேன்டினேவியா, ஸ்வீடனிலுள்ள உப்சலா பல்கலைக் கழகம், அமெரிக்காவிலுள்ள பெர்க்லி, விஸ்கான்சியன், ஹார்வார்ட், கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தின் தென் ஆசியமையம், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுக் கற்கை மையம், சென்னை அனைத்துலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 22: Line 20:
== நாடக வாழ்க்கை ==
== நாடக வாழ்க்கை ==
நாடகத்துறையில் பேராசிரியர் [[சு.வித்தியானந்தன்]], பேராசிரியர் [[க. கணபதிப்பிள்ளை]] ஆகியோரின் மாணவராக விளங்கிய கா.சிவத்தம்பி, அவர்கள் தயாரித்த நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். இலங்கை வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். [[இலங்கையர்கோன்]] எழுதிய 'விதானையார் வீட்டில்’ என்னும் நாடகத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்தார். 'உடையார் மிடுக்கு’ என்ற நாடகத்தில் 'உடையார்’ என்ற பாத்திரமேற்று நடித்தார். ’தவறான எண்ணம்’, ’சுந்தரம் எங்கே?’ போன்ற நாடகங்களிலும் நடித்தார்.  

இலங்கைக் கலைக் கழகத்தின் செயலாளராக இருந்து நாடக நெறியாள்கையிலும், கலைக்கழகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டார். அ.ந. கந்தசாமி எழுதிய 'மதமாற்றம்’ போன்ற நாடகங்களை இயக்கினார். பல்கலைக் கழகத்தில் 'நாடகமும் அரங்கியலும்’ என்ற பட்டப் படிப்பு பாடநெறியினை உருவாக்குவதில் பங்கு வகித்தார். சு.வித்தியானந்தனுடன் மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலையகம் என்று பல இடங்களுக்கும் சென்று அங்கு வழக்கிலிருந்த நாடகங்களையும், கூத்துக்களையும் ஆவணப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் பணியாற்றினார். கொழும்பு பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க நாடகங்களுக்கு நெறியாளராக இருந்து மூன்று நாடகங்களை நெறியாள்கை செய்தார். 1963 ஆம் ஆண்டு 'மார்க்கண்டன் வாளபிமான்’ என்னும் நாடகத்தைப் பதிப்பித்தார்.

தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் முனைவர்பட்ட ஆய்வேடு ஒரு முன்னோடியான நூல். அது நாடகத்தை கல்வித்துறை பாடமாக கொள்ளவும், ஆய்வுசெய்யவும் வழிவகுத்தது. [[சி.மௌனகுரு]] கா.சிவத்தம்பியின் மாணவர்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
கா.சிவத்தம்பியின் இலக்கிய வாழ்க்கை மூன்று களங்களைச் சேர்ந்தது. நாடகவியலில் ஆய்வுசெய்தபடி அவர் இலக்கியச் சூழலுக்குள் நுழைந்தார். நாடகத்தை ஒரு மக்கள் இயக்கமாகப் பார்க்கும் பார்வை கொண்டிருந்தார். கூத்து போன்ற நாட்டார் கலைகளுடன் இணைத்து அவற்றை ஆராய்ந்தார். அது அன்று இலங்கையில் உருவாகிக்கொண்டிருந்த இடதுசாரி இயக்கங்களுடன் அவரை இணையச் செய்தது. 1960ல் க.கைலாசபதியின் அழைப்புக்கு இணங்கி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார். மார்க்ஸியத்தின் ஆய்வுச்சட்டகங்களை இலக்கியத்திற்கு பயன்படுத்தி ஆய்வுகளும் விமர்சனங்களும் எழுதினார். கைலாசபதியுடன் இணைந்து இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முதன்மைச் சக்தியாகவும் நெறிகாட்டுனராகவும் செயல்பட்டார்.  

சோஷலிச யதார்த்தவாதமே நவீன இலக்கியத்தின் முதன்மை அழகியலாக இருக்கமுடியும் என்று நம்பிய கா. சிவத்தம்பி 'நவீன இலக்கியங்களின் வெற்றி தோல்வி என்பது அவை ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன’ என்னும் முடிவு கொண்டவர். (இலக்கியமும் கருத்து நிலையும்). ஆகவே அரசியல் நிலைபாடு, அவற்றை முன்வைத்து உருவாக்கும் தாக்கம் ஆகியவையே அவர் இலக்கியப்படைப்புகளை அளவிடும் அடிப்படைகளாக அமைந்தன. படைப்புகள் எந்த சமூக-அரசியல் புலத்தை காட்டுகின்றன என்பதையே அவர் முதன்மையாக ஆராய்ந்தார். ’காந்தியம் தமிழகத்தில் உருவாக்கிய தாக்கத்தை கல்கியின் தியாக பூமி காட்டுகிறது. தொழிற்சங்க இயக்கத்தின் ஆவணம் ரகுநாதனின் பஞ்சும் பசியும். கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்ததற்கு தி. ஜானகிராமன் நாவல்கள் ஆவணமாக உள்ளன’ என்பவை அவர் முன்வைக்கும் இலக்கிய முடிவுகள். இவை அவருடைய ஆய்வுநோக்கை காட்டுவன.

கா.சிவத்தம்பியின் இலக்கிய ஆய்வுகளின் வெற்றிகள் பழந்தமிழிலக்கியங்களின் அடிப்படையில் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிநிலைகளை அவர் வகுத்துக்காட்டியதிலும்; தமிழன், யாழ்ப்பாணத்தான் முதலிய பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள் திரண்டுவருவதிலுள்ள பண்பாட்டுப்பின்புலத்தை ஆராய்ந்ததிலும் உள்ளன. இலக்கிய விமர்சகர் என்பதைக் காட்டிலும் அவர் ஓரு பண்பாட்டு ஆய்வாளராகவே பெரும்பாலும் செயல்பட்டார். இலங்கைத் தமிழர் - யார், எவர்?,திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு, யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி, இலக்கணமும் சமூக உறவுகளும் போன்ற அவருடைய நூல்கள் முன்னோடியானவை. கா.சிவத்தம்பியின் இலக்கிய வரலாற்று நூல்களும் குறிப்பிடத்தக்கவை.தமிழில் இலக்கிய வரலாறு, தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற நூல்கள் கல்வித்துறை சார்ந்த முறைமை கொண்டவை.

== வரலாற்று ஆய்வுகள் ==
== வரலாற்று ஆய்வுகள் ==
Line 47: Line 40:
== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==
மதுரையில் 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், 'The Politicians as Players’ என்ற ஆய்வுக் கட்டுரை வாசிக்க மாநாட்டுக் குழுவினரால் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டார். அது ஊடகங்களால் கண்டிக்கப்பட்டது.

கா.சிவத்தம்பி சித்தர் பாடல்களில் பொதுவுடைமைச் சித்தர் என்பரை மேற்கோள்காட்டி தன் நூல்களில் சித்தர்கள் முற்போக்கான அரசியல்பார்வை கொண்டவர் என எழுதினார். அது பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால் அந்தச் சித்தர் பாடல் [[ச.து.சு. யோகியார்]] சித்தர் பாடல்களை தொகுத்தபோது அவரே எழுதிச்சேர்த்தது என்பது பின்னர் நிறுவப்பட்டது. (கா. சிவத்தம்பி 'தமிழ் இலக்கியத் தில் மதமும் மானுடமும் 1984)  

== வாழ்க்கை வரலாறுகள்,நினைவுகள் ==
== வாழ்க்கை வரலாறுகள்,நினைவுகள் ==
Line 53: Line 45:
== பண்பாட்டு, இலக்கிய மதிப்பீடு ==
== பண்பாட்டு, இலக்கிய மதிப்பீடு ==
கா.சிவத்தம்பியின் இலக்கியப் பங்களிப்பை மூன்று வகைகளில் வகுத்துரைக்கலாம்.
கா.சிவத்தம்பியின் இலக்கியப் பங்களிப்பை மூன்று வகைகளில் வகுத்துரைக்கலாம்.
அ. தமிழின் மார்க்ஸிய அழகியல் அடிப்படைகொண்ட இலக்கிய விமர்சகர்களில் முன்னோடியானவர்.  
அ. தமிழின் மார்க்ஸிய அழகியல் அடிப்படைகொண்ட இலக்கிய விமர்சகர்களில் முன்னோடியானவர்.  
ஆ. தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களில் சமூகம்சார்ந்த கோணத்தில் இலக்கிய வரலாற்றை உருவாக்கியவர்
ஆ. தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களில் சமூகம்சார்ந்த கோணத்தில் இலக்கிய வரலாற்றை உருவாக்கியவர்
இ. நாடகம், திரைப்படம் உள்ளிட்ட கலைகளுக்கும் இலக்கியத்துக்குமான உறவையும் பண்பாட்டில் அவற்றின் இடத்தையும் ஆராய்ந்து வகுத்துரைத்தவர்.
இ. நாடகம், திரைப்படம் உள்ளிட்ட கலைகளுக்கும் இலக்கியத்துக்குமான உறவையும் பண்பாட்டில் அவற்றின் இடத்தையும் ஆராய்ந்து வகுத்துரைத்தவர்.
கா.சிவத்தம்பி மார்க்ஸிய அழகியலை இலக்கிய விமர்சனத்துக்கான அளவுகோலாக பயன்படுத்திய விமர்சகர். சோஷலிச யதார்த்தவாதத்தை முப்பதாண்டுக்காலம் இலக்கியக் களத்தில் முன்வைத்து இலக்கியப் படைப்புகளை மதிப்பிட்டும் வழிநடத்தியும் வந்தார். ’தரவு களை முறைப்படுத்தி அவற்றில் இருந்து பொதுமைப்பாடுகளைப் பெற்று கருத்துக்களை உருவாக்குவதில் அறிவியல் பூர்வமான அணுகு முறை சிவத்தம்பியிடம் காணப்படு கிறது. சிவத்தம்பியிடம் கல்விப்புலம் சார்ந்த புறவயமான முறைமை (மெதடாலஜி) ஓங்கிக் காணப்படு கிறது. அவ்வகையில் பார்த்தால் தமிழின் நவீன இலக்கியத்தில் செயல்பட்ட முதல் பெரும் கோட் பாட்டாளர் சிவத்தம்பியே. வரலாற்று முன்னோடி என்ற இந்த இடமே அவரை அடையாளம் காட்ட உரியதாகும்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார் ([https://www.jeyamohan.in/186/ கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு])  

தமிழின் கவிதையியல் குறித்தும், தமிழிலக்கியம் திரட்டி முன்வைக்கும் சமூக அறம் குறித்தும் விரிவாக எழுதியவர் கா.சிவத்தம்பி. தமிழ் இலக்கியங்கள் வழியாக தமிழ்ச்சமூகம் வேட்டைக்குடிகளில் இருந்து மருதநிலத்து வேளாண்குடிகளாக மாறிய பரிணாமத்தையும், அதன் விளைவான சமூக மோதல்களையும் ஆராய்ந்து சித்தரித்தார். தமிழியலாய்வு என்பது சமூகவியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் ஆகிய அனைத்தையும் இணைத்து ஒரு பொதுப்பார்வையை உருவாக்கிக்கொள்வதாகும் என்று கருதினார். ’தமிழியல் என்பது தமிழோடு தொடர்புடைய ஆய்வுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அரசியலாகவும், தொல்லியலாகவும், மானிடவியலாகவும், சமூகவியலாகவும், தமிழை தமிழில் இருக்கும் எழுத்துக்களை தமிழர் வாழ்க்கை பற்றிய சகல துறைகளையும் ஒன்றிணைத்து அந்தச் சமூகத்தை ஆய்வு செய்வதே தமிழியல் ஆய்வு’ என்று ஓர் ஆய்வுரையில் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

கா.சிவத்தம்பி மார்க்ஸியச் சட்டகத்திற்குள் நின்று சமூகவியல்பார்வையை மட்டுமே இலக்கியத்தில் முன்வைத்தவர் என்றும், அதனால் இலக்கியப்படைப்புகளின் நுண்ணிய தளங்களை அறியமுடியாமல் அவற்றின் அரசியல் உள்ளடக்கத்தை மட்டுமே பார்த்து மதிப்பிட்டவர் என்றும் இலக்கிய விமர்சகர்களான [[சுந்தர ராமசாமி]], [[வெங்கட் சாமிநாதன்]], [[எம். வேதசகாயகுமார்]] போன்றவர்கள் அவரை நிராகரித்தனர். இலங்கை இலக்கியச் சூழலில் முற்போக்கு இலக்கியம் என்னும் கட்சிசார்ந்த குழுவை முன்னின்று நடத்தியவர் என [[எஸ். பொன்னுத்துரை]] போன்றவர்களால் விமர்சிக்கப்பட்டார். தமிழ் தொல்லிலக்கியங்களின் சமூகவியல் கூறுகளை கண்டடைவது, அவற்றினூடாக ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை உருவாக்குவது ஆகியவற்றில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது.  

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 107: Line 93:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]

Revision as of 14:39, 3 July 2023

கா.சிவத்தம்பி
கார்த்திகேசு சிவதம்பி
க.சிவத்தம்பி, வல்லிக்கண்ணன்
கா.சிவத்தம்பி வாழ்க்கை வரலாறு
கா.சிவத்தம்பி உரை
கா.சிவத்தம்பி, முனைவர் பட்டம் பெற்றபோது
சிவத்தம்பி

கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10,1932-ஜூலை 6, 2011) (கா.சிவத்தம்பி) ஈழத்து தமிழ் அறிஞர். ஆசிரியர், எழுத்தாளர், பண்பாட்டு வரலாற்று ஆசிரியர். நாடக நடிகர். அவரது பங்களிப்பு மொழியியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல், அரசியல், வரலாறு என விரிவானது. மார்க்ஸிய அழகியல் அணுகுமுறை கொண்ட இலக்கிய விமர்சகர். இலக்கியவரலாற்றாசிரியராக அமெரிக்க ஆய்வுமுறைகளை கையாண்டவர்.

பிறப்பு, கல்வி

சிவத்தம்பி யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில், சைவப்புலவரான பண்டிதர் பொ. கார்த்திகேசு ஆசிரியருக்கும், வள்ளியம்மைக்கும் மே 10, 1932 அன்று பிறந்தார். கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும், இளநிலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார். இங்கிலாந்திலுள்ள பெர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் 1970-ஆம் ஆண்டு சேர்ந்து, உலகப் புகழ் பெற்ற மார்க்சிய அறிஞரான பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டலில் 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் அரங்கியல்’ (Drama in Ancient Tamil Society) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

கல்விப்பணி

கா.சிவத்தம்பி நான்கு ஆண்டுகள் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1965வரை இலங்கைப் பாராளுமன்றத்தின் சமகால மொழிபெயர்ப்பாளராக (Simultaneous Interpreter) பதவி வகித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1978 முதல் 1996வரை பதினெட்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் உள்ள கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஸ்கேன்டினேவியா, ஸ்வீடனிலுள்ள உப்சலா பல்கலைக் கழகம், அமெரிக்காவிலுள்ள பெர்க்லி, விஸ்கான்சியன், ஹார்வார்ட், கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தின் தென் ஆசியமையம், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுக் கற்கை மையம், சென்னை அனைத்துலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

தனிவாழ்க்கை

கா. சிவத்தம்பியின் மனைவியின் பெயர் ரூபவதி நடராசன். இவர்களுக்கு கிரித்திகா, தாரிணி, வர்த்தினி என்னும் மூன்று மகள்கள்.

கா.சிவத்தம்பி வாழ்க்கை வரலாறு

அரசியல்

கா.சிவத்தம்பி இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவு அமைப்பான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டார். இடதுசாரிப் பார்வை கொண்டிருந்த அவர் இலங்கையில் தீவிர தமிழ் தேசியக் கருத்துக்கள் உருவாகி அவை செல்வாக்கு கொண்டபோது அவற்றின் ஆதரவாளராகவும் மாறினார். அவர் இரட்டை நிலைபாடு எடுக்கிறார் என கம்யூனிஸ்டுகளால் குற்றம் சாட்டப்பட்டார். இடதுசாரிப்பார்வையில் திராவிட அரசியல், தமிழியக்க அரசியல் ஆகியவற்றை விமர்சனம் செய்து வந்த அவர் அவ்விமர்சனங்களை தக்கவைத்துக்கொண்டே அவற்றின் ஆதரவாளராகவும் திகழ்ந்தார்.

நாடக வாழ்க்கை

நாடகத்துறையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோரின் மாணவராக விளங்கிய கா.சிவத்தம்பி, அவர்கள் தயாரித்த நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். இலங்கை வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில்’ என்னும் நாடகத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்தார். 'உடையார் மிடுக்கு’ என்ற நாடகத்தில் 'உடையார்’ என்ற பாத்திரமேற்று நடித்தார். ’தவறான எண்ணம்’, ’சுந்தரம் எங்கே?’ போன்ற நாடகங்களிலும் நடித்தார். இலங்கைக் கலைக் கழகத்தின் செயலாளராக இருந்து நாடக நெறியாள்கையிலும், கலைக்கழகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டார். அ.ந. கந்தசாமி எழுதிய 'மதமாற்றம்’ போன்ற நாடகங்களை இயக்கினார். பல்கலைக் கழகத்தில் 'நாடகமும் அரங்கியலும்’ என்ற பட்டப் படிப்பு பாடநெறியினை உருவாக்குவதில் பங்கு வகித்தார். சு.வித்தியானந்தனுடன் மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலையகம் என்று பல இடங்களுக்கும் சென்று அங்கு வழக்கிலிருந்த நாடகங்களையும், கூத்துக்களையும் ஆவணப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் பணியாற்றினார். கொழும்பு பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க நாடகங்களுக்கு நெறியாளராக இருந்து மூன்று நாடகங்களை நெறியாள்கை செய்தார். 1963 ஆம் ஆண்டு 'மார்க்கண்டன் வாளபிமான்’ என்னும் நாடகத்தைப் பதிப்பித்தார். தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் முனைவர்பட்ட ஆய்வேடு ஒரு முன்னோடியான நூல். அது நாடகத்தை கல்வித்துறை பாடமாக கொள்ளவும், ஆய்வுசெய்யவும் வழிவகுத்தது. சி.மௌனகுரு கா.சிவத்தம்பியின் மாணவர்.

இலக்கிய வாழ்க்கை

கா.சிவத்தம்பியின் இலக்கிய வாழ்க்கை மூன்று களங்களைச் சேர்ந்தது. நாடகவியலில் ஆய்வுசெய்தபடி அவர் இலக்கியச் சூழலுக்குள் நுழைந்தார். நாடகத்தை ஒரு மக்கள் இயக்கமாகப் பார்க்கும் பார்வை கொண்டிருந்தார். கூத்து போன்ற நாட்டார் கலைகளுடன் இணைத்து அவற்றை ஆராய்ந்தார். அது அன்று இலங்கையில் உருவாகிக்கொண்டிருந்த இடதுசாரி இயக்கங்களுடன் அவரை இணையச் செய்தது. 1960ல் க.கைலாசபதியின் அழைப்புக்கு இணங்கி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார். மார்க்ஸியத்தின் ஆய்வுச்சட்டகங்களை இலக்கியத்திற்கு பயன்படுத்தி ஆய்வுகளும் விமர்சனங்களும் எழுதினார். கைலாசபதியுடன் இணைந்து இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முதன்மைச் சக்தியாகவும் நெறிகாட்டுனராகவும் செயல்பட்டார். சோஷலிச யதார்த்தவாதமே நவீன இலக்கியத்தின் முதன்மை அழகியலாக இருக்கமுடியும் என்று நம்பிய கா. சிவத்தம்பி 'நவீன இலக்கியங்களின் வெற்றி தோல்வி என்பது அவை ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன’ என்னும் முடிவு கொண்டவர். (இலக்கியமும் கருத்து நிலையும்). ஆகவே அரசியல் நிலைபாடு, அவற்றை முன்வைத்து உருவாக்கும் தாக்கம் ஆகியவையே அவர் இலக்கியப்படைப்புகளை அளவிடும் அடிப்படைகளாக அமைந்தன. படைப்புகள் எந்த சமூக-அரசியல் புலத்தை காட்டுகின்றன என்பதையே அவர் முதன்மையாக ஆராய்ந்தார். ’காந்தியம் தமிழகத்தில் உருவாக்கிய தாக்கத்தை கல்கியின் தியாக பூமி காட்டுகிறது. தொழிற்சங்க இயக்கத்தின் ஆவணம் ரகுநாதனின் பஞ்சும் பசியும். கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்ததற்கு தி. ஜானகிராமன் நாவல்கள் ஆவணமாக உள்ளன’ என்பவை அவர் முன்வைக்கும் இலக்கிய முடிவுகள். இவை அவருடைய ஆய்வுநோக்கை காட்டுவன. கா.சிவத்தம்பியின் இலக்கிய ஆய்வுகளின் வெற்றிகள் பழந்தமிழிலக்கியங்களின் அடிப்படையில் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிநிலைகளை அவர் வகுத்துக்காட்டியதிலும்; தமிழன், யாழ்ப்பாணத்தான் முதலிய பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள் திரண்டுவருவதிலுள்ள பண்பாட்டுப்பின்புலத்தை ஆராய்ந்ததிலும் உள்ளன. இலக்கிய விமர்சகர் என்பதைக் காட்டிலும் அவர் ஓரு பண்பாட்டு ஆய்வாளராகவே பெரும்பாலும் செயல்பட்டார். இலங்கைத் தமிழர் - யார், எவர்?,திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு, யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி, இலக்கணமும் சமூக உறவுகளும் போன்ற அவருடைய நூல்கள் முன்னோடியானவை. கா.சிவத்தம்பியின் இலக்கிய வரலாற்று நூல்களும் குறிப்பிடத்தக்கவை.தமிழில் இலக்கிய வரலாறு, தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற நூல்கள் கல்வித்துறை சார்ந்த முறைமை கொண்டவை.

வரலாற்று ஆய்வுகள்

கா. சிவத்தம்பி இலக்கியநூல்களை முன்வைத்து பண்பாட்டுப் பரிணாமத்தை ஆய்வுசெய்தவர். ஆனால் தமிழக வரலாற்றின் பல குறிப்பிடத்தக்க கேள்விகளுக்கு அவருடைய ஆய்வுகள் விடையளித்துள்ளன. பழந்தமிழகத்தின் அரசு, அரசன் ஆகியவற்றின் உருவாக்கம் ஆகியவற்றை இறை, அரைசு, மன்னன் என்னும் சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் கொண்டு அவர் விளக்கினார். தென்னாட்டில் முறைப்படுத்தப்பட்ட அரசதிகாரமும் இறையாண்மை கொண்ட அரசனும் இல்லை, இங்கிருந்தது கூறாக்க அரசு முறை (Segmentary lineage)தான் என்னும் பர்ட்டன் ஸ்டெயினின் கருத்தை விரிவாக மறுத்து இனக்குழுத்தலைமையில் இருந்து உருவான அரசன் என்னும் அதிகார மையம் எவ்வண்ணம் தமிழ்ப்பண்பாட்டில் நிலைகொண்டிருந்தது என விளக்கினார்.

அமைப்புப்பணிகள்

  • 1946-ல் தொடங்கப்பட்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1960ல் இணைந்த சிவத்தம்பி தொடர்ச்சியாக அதன் பணிகளில் ஈடுபட்டார்.
  • 1984-86 ஆண்டுகளில் இலங்கை வடக்கு, கிழக்கு பிரதேசத்தின் பிரஜைகள் கண்காணிப்புக் குழு ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார்.
  • 1986-1998 காலப் பகுதியில் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக பணியாற்றினார்.
  • 2010-ல் தமிழகத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் ஆய்வு மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவின் தலைவராக பணியாற்றினார்.
கார்த்திகேசு சிவதம்பி

விருது

  • கா.சிவத்தம்பிக்கு தமிழக அரசு திரு.வி.க. விருது அளித்தது.

மறைவு

கார்த்திகேசு சிவத்தம்பி 79-வது வயதில் ஜூலை 6, 2011-ல் கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார்.

விவாதங்கள்

மதுரையில் 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், 'The Politicians as Players’ என்ற ஆய்வுக் கட்டுரை வாசிக்க மாநாட்டுக் குழுவினரால் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டார். அது ஊடகங்களால் கண்டிக்கப்பட்டது. கா.சிவத்தம்பி சித்தர் பாடல்களில் பொதுவுடைமைச் சித்தர் என்பரை மேற்கோள்காட்டி தன் நூல்களில் சித்தர்கள் முற்போக்கான அரசியல்பார்வை கொண்டவர் என எழுதினார். அது பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால் அந்தச் சித்தர் பாடல் ச.து.சு. யோகியார் சித்தர் பாடல்களை தொகுத்தபோது அவரே எழுதிச்சேர்த்தது என்பது பின்னர் நிறுவப்பட்டது. (கா. சிவத்தம்பி 'தமிழ் இலக்கியத் தில் மதமும் மானுடமும் 1984)

வாழ்க்கை வரலாறுகள்,நினைவுகள்

சிவத்தம்பியின் ஆளுமை வெளிப்படும் வகையில் கரவையூற்று எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை, நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கரவையூற்று நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம்.

பண்பாட்டு, இலக்கிய மதிப்பீடு

கா.சிவத்தம்பியின் இலக்கியப் பங்களிப்பை மூன்று வகைகளில் வகுத்துரைக்கலாம். அ. தமிழின் மார்க்ஸிய அழகியல் அடிப்படைகொண்ட இலக்கிய விமர்சகர்களில் முன்னோடியானவர். ஆ. தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களில் சமூகம்சார்ந்த கோணத்தில் இலக்கிய வரலாற்றை உருவாக்கியவர் இ. நாடகம், திரைப்படம் உள்ளிட்ட கலைகளுக்கும் இலக்கியத்துக்குமான உறவையும் பண்பாட்டில் அவற்றின் இடத்தையும் ஆராய்ந்து வகுத்துரைத்தவர். கா.சிவத்தம்பி மார்க்ஸிய அழகியலை இலக்கிய விமர்சனத்துக்கான அளவுகோலாக பயன்படுத்திய விமர்சகர். சோஷலிச யதார்த்தவாதத்தை முப்பதாண்டுக்காலம் இலக்கியக் களத்தில் முன்வைத்து இலக்கியப் படைப்புகளை மதிப்பிட்டும் வழிநடத்தியும் வந்தார். ’தரவு களை முறைப்படுத்தி அவற்றில் இருந்து பொதுமைப்பாடுகளைப் பெற்று கருத்துக்களை உருவாக்குவதில் அறிவியல் பூர்வமான அணுகு முறை சிவத்தம்பியிடம் காணப்படு கிறது. சிவத்தம்பியிடம் கல்விப்புலம் சார்ந்த புறவயமான முறைமை (மெதடாலஜி) ஓங்கிக் காணப்படு கிறது. அவ்வகையில் பார்த்தால் தமிழின் நவீன இலக்கியத்தில் செயல்பட்ட முதல் பெரும் கோட் பாட்டாளர் சிவத்தம்பியே. வரலாற்று முன்னோடி என்ற இந்த இடமே அவரை அடையாளம் காட்ட உரியதாகும்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார் (கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு) தமிழின் கவிதையியல் குறித்தும், தமிழிலக்கியம் திரட்டி முன்வைக்கும் சமூக அறம் குறித்தும் விரிவாக எழுதியவர் கா.சிவத்தம்பி. தமிழ் இலக்கியங்கள் வழியாக தமிழ்ச்சமூகம் வேட்டைக்குடிகளில் இருந்து மருதநிலத்து வேளாண்குடிகளாக மாறிய பரிணாமத்தையும், அதன் விளைவான சமூக மோதல்களையும் ஆராய்ந்து சித்தரித்தார். தமிழியலாய்வு என்பது சமூகவியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் ஆகிய அனைத்தையும் இணைத்து ஒரு பொதுப்பார்வையை உருவாக்கிக்கொள்வதாகும் என்று கருதினார். ’தமிழியல் என்பது தமிழோடு தொடர்புடைய ஆய்வுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அரசியலாகவும், தொல்லியலாகவும், மானிடவியலாகவும், சமூகவியலாகவும், தமிழை தமிழில் இருக்கும் எழுத்துக்களை தமிழர் வாழ்க்கை பற்றிய சகல துறைகளையும் ஒன்றிணைத்து அந்தச் சமூகத்தை ஆய்வு செய்வதே தமிழியல் ஆய்வு’ என்று ஓர் ஆய்வுரையில் சிவத்தம்பி குறிப்பிடுகிறார். கா.சிவத்தம்பி மார்க்ஸியச் சட்டகத்திற்குள் நின்று சமூகவியல்பார்வையை மட்டுமே இலக்கியத்தில் முன்வைத்தவர் என்றும், அதனால் இலக்கியப்படைப்புகளின் நுண்ணிய தளங்களை அறியமுடியாமல் அவற்றின் அரசியல் உள்ளடக்கத்தை மட்டுமே பார்த்து மதிப்பிட்டவர் என்றும் இலக்கிய விமர்சகர்களான சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், எம். வேதசகாயகுமார் போன்றவர்கள் அவரை நிராகரித்தனர். இலங்கை இலக்கியச் சூழலில் முற்போக்கு இலக்கியம் என்னும் கட்சிசார்ந்த குழுவை முன்னின்று நடத்தியவர் என எஸ். பொன்னுத்துரை போன்றவர்களால் விமர்சிக்கப்பட்டார். தமிழ் தொல்லிலக்கியங்களின் சமூகவியல் கூறுகளை கண்டடைவது, அவற்றினூடாக ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை உருவாக்குவது ஆகியவற்றில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது.

நூல் பட்டியல்

தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்
  • இலக்கியத்தில் முற்போக்குவாதம்; 1977
  • இலக்கியமும் கருத்துநிலையும்; 1982
  • தமிழில் இலக்கிய வரலாறு
  • நாவலும் வாழ்க்கையும்; 1978
  • தமிழ்ப் பண்பாட்டில் சினிமா; மக்கள் வெளியீடு
  • இலங்கைத் தமிழர் - யார், எவர்?
  • திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு
  • யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
  • மதமும் கவிதையும்
  • தமிழ் கற்பித்தலில் உன்னதம்
  • Drama in Ancient Tamil Society; 1981
  • பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி. ;மக்கள் வெளியீடு
  • ஈழத்தில் தமிழ் இலக்கியம்; 1978
  • தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1967
  • தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி; 1979
  • சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்
  • தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; 1981 டிசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
  • The Tamil Film as a Medium of Political Communication 1980
  • இலக்கணமும் சமூக உறவுகளும்

பதிப்பித்த நூல்கள்

  • இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்; 1980
  • மார்க்கண்டன் வாளவிமான் நாடகம்; 1966

கா.சிவத்தம்பியின் பெரும்பாலான நூல்கள் இணையநூலக சேமிப்பில் உள்ளன

இணைப்புகள்

உசாத்துணை

✅Finalised Page