standardised

கண்ணதாசன்: Difference between revisions

From Tamil Wiki
m (Created/reviewed by Je)
(Moved to Standardised)
Line 1: Line 1:
[[File:கண்ணதாசன்.png|thumb|கண்ணதாசன்]]
[[File:கண்ணதாசன்.png|thumb|கண்ணதாசன்]]
கண்ணதாசன் (1927-  ) தமிழ்க் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். தமிழில் திரைப்படப்பாடல்கள் வழியாக பெரும்புகழ்பெற்ற கண்ணதாசன் திராவிட இயக்க ஆதரவாளராகவும் பின்னர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார். தமிழில் குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள் எழுதினார். மரபுக்கவிதையில் எழுதிய முக்கியமான இறுதிக்கட்ட கவிஞர் என அறியப்படுகிறார்
கண்ணதாசன் (ஜூன் 24, 1927 -  அக்டோபர் 17, 1981) தமிழ்க் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். தமிழில் திரைப்படப்பாடல்கள் வழியாக பெரும்புகழ்பெற்ற கண்ணதாசன் திராவிட இயக்க ஆதரவாளராகவும் பின்னர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார். தமிழில் குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள் எழுதினார். மரபுக்கவிதையில் எழுதிய முக்கியமான இறுதிக்கட்ட கவிஞர் என அறியப்படுகிறார்

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக 24 ஜூன் 1927ல் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர் ( ஆறு சகோதரிகள், மூன்று சகோதரிகள்) சிறு வயதில் இவரை பழனியப்பச் செட்டியார் -சிகப்பி ஆச்சி (மறைவு 25-12-1958) இணையர்  தத்து எடுத்துக்கொண்டார்கள். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.   
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8-வது மகனாக ஜூன் 24, 1927-ல் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர் (ஆறு சகோதரிகள், மூன்று சகோதரிகள்) சிறு வயதில் இவரை பழனியப்பச் செட்டியார் - சிகப்பி ஆச்சி (மறைவு டிசம்பர் 25, 1958) இணையர் தத்து எடுத்துக்கொண்டார்கள். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.   

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியில் முடித்தபின் அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.   
ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியில் முடித்தபின் அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.   
[[File:Kanna10.png|thumb|கண்ணதாசன் ஈ.வெ.ராமசாமி பெரியாருடன்]]
[[File:Kanna10.png|thumb|கண்ணதாசன் ஈ.வெ.ராமசாமி பெரியாருடன்]]
[[File:Kannam9.jpg|thumb|கண்ணதாசன் -எம்.ஜி.ஆர்]]
[[File:Kannam9.jpg|thumb|கண்ணதாசன் -எம்.ஜி.ஆர்]]
Line 12: Line 12:
கண்ணதாசன் 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்குச் சென்று சந்திரசேகரன் என்று புனைபெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். அஜக்ஸ் கம்பெனி, திருவற்றியூர் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. காரைக்குடிக்கு திரும்பி திருமகள் என்னும் இதழி பிழைதிருத்துபவராக பணிக்குச் சேர்ந்தார். அப்போதுதான் கண்ணதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டார்.  

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்,. கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள்  இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் இருக்கிறார்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் என்பவரோடு பிப்ரவரி 9, 1950 அன்று காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்,. கண்ணதாசன், பார்வதி என்பவரை நவம்பர் 11, 1951 அன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் இருக்கிறார்
[[File:Kanna3.jpg|thumb|கண்ணதாசன் குடும்பம்]]
[[File:Kanna3.jpg|thumb|கண்ணதாசன் குடும்பம்]]
[[File:Kanna5.jpg|thumb|கண்ணதாசன் மனைவியுடன்]]
[[File:Kanna5.jpg|thumb|கண்ணதாசன் மனைவியுடன்]]

== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
கண்ணதாசனின் முதல் கதை ’நிலவொளியிலே’ கிருகலட்சுமி இதழில் 1944ல் வெளிவந்தது. காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என பலபெயர்களில் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், திரைக்குறிப்புகள் எழுதினார். டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருக்கையில் 1952-1953 ல் தன் முதல் குறுங்காவியம் ‘மாங்கனி’யை எழுதினார்.
கண்ணதாசனின் முதல் கதை ’நிலவொளியிலே’ கிருகலட்சுமி இதழில் 1944-ல் வெளிவந்தது. காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என பலபெயர்களில் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், திரைக்குறிப்புகள் எழுதினார். டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருக்கையில் 1952-1953-ல் தன் முதல் குறுங்காவியம் ‘மாங்கனி’யை எழுதினார்.

கண்ணதாசனின் கவிதையுலகம் மிக விரிந்தது. முழுமையாகவே மரபுக்கவிதை உலகைச் சேர்ந்தவர். குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் என தொடர்ச்சியாக எழுதினார். [[குமுதம்]] வார இதழில் அவர் எழுதிய மரபுக்கவிதைகள் பெரும்புகழ்பெற்றவை. மானுடரைப் பாடமாட்டேன் என அவர் எழுதிய கவிதைக்கு மானுடரைப் பாடுவோம் என சௌந்தரா கைலாசம் எழுதிய பதில்கவிதை புகழ்பெற்றது.

Line 24: Line 24:

== திரைவாழ்க்கை ==
== திரைவாழ்க்கை ==
கண்ணதாசன் 1949ல் ஜூபிடர் நிறுவன தயாரிப்பில் கே.ராம்நாத் இயக்கிய கன்னியின் காதலி படத்தில் கலங்காதிரு மனமே என்னும் பாடலை எழுதினார். அதன்பின் பாடலாசிரியராக முப்பதாண்டுகள் செயல்பட்டார். இல்லறஜோதி  (1954) முதல் பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.  [[File:Kanna2.jpg|thumb|கண்ணதாசன் தி.மு.க தலைவர்களுடன்]]
கண்ணதாசன் 1949-ல் ஜூபிடர் நிறுவன தயாரிப்பில் கே.ராம்நாத் இயக்கிய கன்னியின் காதலி படத்தில் கலங்காதிரு மனமே என்னும் பாடலை எழுதினார். அதன்பின் பாடலாசிரியராக முப்பதாண்டுகள் செயல்பட்டார். இல்லறஜோதி  (1954) முதல் பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.  [[File:Kanna2.jpg|thumb|கண்ணதாசன் தி.மு.க தலைவர்களுடன்]]

== இதழியல் ==
== இதழியல் ==
Line 38: Line 38:
== அரசியல் ==
== அரசியல் ==
[[File:Kanna6.jpg|thumb|கண்ணதாசன்  ]]
[[File:Kanna6.jpg|thumb|கண்ணதாசன்  ]]
1949 ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளில் பங்கெடுத்தார். 9 ஏப்ரல் 1961 ல்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகினார். 1957ல் திருக்கோஷ்டியூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1962 ல் ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். 1964 ல் அக்கட்சி தமிழ் தேசிய காங்கிரசுடன் இணந்தது.
1949-ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளில் பங்கெடுத்தார். ஏப்ரல் 9, 1961-ல்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகினார். 1957-ல் திருக்கோஷ்டியூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1962 ல் ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். 1964-ல் அக்கட்சி தமிழ் தேசிய காங்கிரசுடன் இணந்தது.

கண்ணதாசன் காங்கிரஸ் உறுப்பினராக ஆகி காமராஜரின் தீவிர ஆதரவாளராக அரசியல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காமராஜர் மறைவுக்குப்பின்  இந்திய தேசியக் காங்கிரஸ் (இந்திரா) பிரிவின் ஆதரவாளரானார். இறுதிவரை காங்கிரஸ் ஆதரவாளராக நீடித்தார். மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியமைத்தபோது அவரால் 28-மார்ச்-1978 ல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.
கண்ணதாசன் காங்கிரஸ் உறுப்பினராக ஆகி காமராஜரின் தீவிர ஆதரவாளராக அரசியல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காமராஜர் மறைவுக்குப்பின்  இந்திய தேசியக் காங்கிரஸ் (இந்திரா) பிரிவின் ஆதரவாளரானார். இறுதிவரை காங்கிரஸ் ஆதரவாளராக நீடித்தார். மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியமைத்தபோது அவரால் மார்ச் 28, 1978-ல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.
   
[[File:Kanna4.png|thumb|கண்ணதாசன் திருமணம்]]
[[File:Kanna4.png|thumb|கண்ணதாசன் திருமணம்]]
Line 50: Line 50:
== மறைவு ==
== மறைவு ==
[[File:Kanna8.jpg|thumb|கண்ணதாசன் ஜெயகாந்தனுடன்]]
[[File:Kanna8.jpg|thumb|கண்ணதாசன் ஜெயகாந்தனுடன்]]
கண்ணதாசன் பெதடின் போதையூசி போடும் வழக்கம் கொண்டிருந்தார். உடல்நலிந்து 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
கண்ணதாசன் பெதடின் போதையூசி போடும் வழக்கம் கொண்டிருந்தார். உடல்நலிந்து ஜூலை 24, 1981-ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-ல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-ல் எரியூட்டப்பட்டது.

== நினைவகங்கள், நினைவுகள் ==
== நினைவகங்கள், நினைவுகள் ==
[[File:Kanna7.jpg|thumb|கண்ணதாசன் காமராஜர்]]
[[File:Kanna7.jpg|thumb|கண்ணதாசன் காமராஜர்]]
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன  
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990-ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன  

2013ல் கண்ணதாசனுக்கு தபால்தலை வெளியிடப்பட்டது.    
2013-ல் கண்ணதாசனுக்கு தபால்தலை வெளியிடப்பட்டது.    

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
தமிழ் மரபுக்கவிதை [[சி.சுப்ரமணிய பாரதியார்]] ,[[பாரதிதாசன்]] ஆகியோருக்கு பின்னர் [[பாரதிதாசன் பரம்பரை]] யைச்சேர்ந்த கவிஞர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 1970களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தேக்கம் அடைந்தனர். பலர் [[வானம்பாடி கவிதை இயக்கம்]] வழியாக புதுக்கவிதை வடிவுக்கு வந்தனர். பாரதிதாசன் மரபைச் சேர்ந்த கவிஞர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல் சார்ந்த கவிதைகளை எழுதினர். ஆகவே மரபுக்கவிதையின் எல்லா சந்தங்களிலும் அவர்கள் செயல்பட இயலவில்லை. அவர்களில் பலர் மரபான உளநிலைகளை மறுப்பவர்கள். ஆகவே மரபுக்கவிதையுடன் அவர்களின் சொல்லமைவு இணையவில்லை. மரபுக்கவிதையின் சொல்லழகும் ஒலியழகும் அணியழகும் முழுமையாக வெளிப்பட்ட கடைசிக் கவிஞர் என்று கண்ணதாசன் கருதப்படுகிறார். யாப்பில் இருந்த பயிற்சியாலும், மரபிலக்கியத் தேர்ச்சியாலும் கண்ணதாசன் தன்னிச்சையான மொழியொழுக்குடன் யாப்பில் கவிதைகளை எழுதினார். கண்ணதாசனின் இலக்கிய இடம் அவர் எழுதிய மாங்கனி போன்ற குறுங்காவியங்கள் மற்றும் தனிக்கவிதைகளின் வழியாக அமைவது.
தமிழ் மரபுக்கவிதை [[சி.சுப்ரமணிய பாரதியார்]] ,[[பாரதிதாசன்]] ஆகியோருக்கு பின்னர் [[பாரதிதாசன் பரம்பரை]] யைச்சேர்ந்த கவிஞர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 1970-களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தேக்கம் அடைந்தனர். பலர் [[வானம்பாடி கவிதை இயக்கம்]] வழியாக புதுக்கவிதை வடிவுக்கு வந்தனர். பாரதிதாசன் மரபைச் சேர்ந்த கவிஞர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல் சார்ந்த கவிதைகளை எழுதினர். ஆகவே மரபுக்கவிதையின் எல்லா சந்தங்களிலும் அவர்கள் செயல்பட இயலவில்லை. அவர்களில் பலர் மரபான உளநிலைகளை மறுப்பவர்கள். ஆகவே மரபுக்கவிதையுடன் அவர்களின் சொல்லமைவு இணையவில்லை. மரபுக்கவிதையின் சொல்லழகும் ஒலியழகும் அணியழகும் முழுமையாக வெளிப்பட்ட கடைசிக் கவிஞர் என்று கண்ணதாசன் கருதப்படுகிறார். யாப்பில் இருந்த பயிற்சியாலும், மரபிலக்கியத் தேர்ச்சியாலும் கண்ணதாசன் தன்னிச்சையான மொழியொழுக்குடன் யாப்பில் கவிதைகளை எழுதினார். கண்ணதாசனின் இலக்கிய இடம் அவர் எழுதிய மாங்கனி போன்ற குறுங்காவியங்கள் மற்றும் தனிக்கவிதைகளின் வழியாக அமைவது.

கண்ணதாசனின் புனைவுகள் பொது வாசகர்களை கவரும் நோக்கம் கொண்டவை. அன்றைய பொதுவாசிப்புச் சூழலில் அவை விரும்பப்பட்டன.   
கண்ணதாசனின் புனைவுகள் பொது வாசகர்களை கவரும் நோக்கம் கொண்டவை. அன்றைய பொதுவாசிப்புச் சூழலில் அவை விரும்பப்பட்டன.   
Line 82: Line 82:
====== தொகுப்புகள் ======
====== தொகுப்புகள் ======

* கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
* கண்ணதாசன் கவிதைகள் - 1959, காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
* கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
* கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி - 1960, காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
* கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
* கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
* கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
* கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி - 1968, வானதி பதிப்பகம், சென்னை
* கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
* கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி - 1971, வானதி பதிப்பகம், சென்னை
* கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
* கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி - 1972, வானதி பதிப்பகம், சென்னை
* கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
* கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி - 1976, வானதி பதிப்பகம், சென்னை
* கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
* கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி - 1986, வானதி பதிப்பகம், சென்னை
* பாடிக்கொடுத்த மங்களங்கள்
* பாடிக்கொடுத்த மங்களங்கள்

Line 107: Line 107:
* கவிதாஞ்சலி
* கவிதாஞ்சலி

====== மொழிபெயர்ப்பு[தொகு] ======
====== மொழிபெயர்ப்பு ======

* பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
* பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
Line 120: Line 120:
* அரங்கமும் அந்தரங்கமும்
* அரங்கமும் அந்தரங்கமும்
* அதைவிட ரகசியம்
* அதைவிட ரகசியம்
* ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
* ஆச்சி - வானதி பதிப்பகம், சென்னை
* ஆயிரங்கால் மண்டபம்
* ஆயிரங்கால் மண்டபம்
* ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
* ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி - 1956, அருணோதயம், சென்னை
* ஊமையன்கோட்டை
* ஊமையன்கோட்டை
* ஒரு கவிஞனின் கதை
* ஒரு கவிஞனின் கதை
Line 151: Line 151:
* குட்டிக்கதைகள்
* குட்டிக்கதைகள்
* பேனா நாட்டியம்
* பேனா நாட்டியம்
* மனசுக்குத் தூக்கமில்லை )
* மனசுக்குத் தூக்கமில்லை
* செண்பகத்தம்மன் கதை
* செண்பகத்தம்மன் கதை
* செய்திக்கதைகள்
* செய்திக்கதைகள்
Line 166: Line 166:
==== கட்டுரைகள் ====
==== கட்டுரைகள் ====
* அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
* அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
* இலக்கியத்தில் காதல்
* இலக்கியத்தில் காதல்
* இலக்கிய யுத்தங்கள்
* இலக்கிய யுத்தங்கள்
* எண்ணங்கள் 1000
* எண்ணங்கள் 1000
Line 172: Line 172:
* கண்ணதாசன் கட்டுரைகள்   
* கண்ணதாசன் கட்டுரைகள்   
* கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
* கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
* கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை.
* கூட்டுக்குரல் - அருணோதயம், சென்னை
* குடும்பசுகம்
* குடும்பசுகம்
* சந்தித்தேன் சிந்தித்தேன்
* சந்தித்தேன் சிந்தித்தேன்
Line 184: Line 184:
* நம்பிக்கை மலர்கள்   
* நம்பிக்கை மலர்கள்   
* நான் பார்த்த அரசியல் - முன்பாதி
* நான் பார்த்த அரசியல் - முன்பாதி
* நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
* நான் பார்த்த அரசியல் - பின்பாதி
* நான் ரசித்த வர்ணனைகள்
* நான் ரசித்த வர்ணனைகள்
* புஷ்பமாலிகா
* புஷ்பமாலிகா
Line 194: Line 194:
==== ஆன்மீகம் ====
==== ஆன்மீகம் ====

* அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
* அர்த்தமுள்ள இந்து மதம் 1
* அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
* அர்த்தமுள்ள இந்து மதம் 2
* அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
* அர்த்தமுள்ள இந்து மதம் 3
* அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
* அர்த்தமுள்ள இந்து மதம் 4: துன்பங்களிலிருந்து விடுதலை
* அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
* அர்த்தமுள்ள இந்து மதம் 5: ஞானம் பிறந்த கதை
* அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
* அர்த்தமுள்ள இந்து மதம் 6: நெஞ்சுக்கு நிம்மதி
* அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
* அர்த்தமுள்ள இந்து மதம் 7: சுகமான சிந்தனைகள்
* அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
* அர்த்தமுள்ள இந்து மதம் 8: போகம் ரோகம் யோகம்
* அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
* அர்த்தமுள்ள இந்து மதம் 9: ஞானத்தைத்தேடி
* அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
* அர்த்தமுள்ள இந்து மதம்10: உன்னையே நீ அறிவாய்

==== நாடகங்கள் ====
==== நாடகங்கள் ====
Line 209: Line 209:
* அனார்கலி
* அனார்கலி
* சிவகங்கைச்சீமை
* சிவகங்கைச்சீமை
* ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
* ராஜ தண்டனை - 1956, அருணோதயம், சென்னை

=== உரை நூல்கள் ===
==== உரை நூல்கள் ====
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

Line 224: Line 224:
* பகவத் கீதை
* பகவத் கீதை

=== பேட்டிகள் ===
==== பேட்டிகள் ====

* கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
* கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
* சந்தித்தேன் சிந்தித்தேன்
* சந்தித்தேன் சிந்தித்தேன்

=== வினா-விடை ===
==== வினா-விடை ====

* ஐயம் அகற்று
* ஐயம் அகற்று
Line 237: Line 237:

* https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2019/07/47123/
* https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2019/07/47123/
* [https://kannadasan.wordpress.com/ கண்ணதாசன் இணையப்பக்கம்]
* [https://kannadasan.wordpress.com/ கண்ணதாசன் இணையப்பக்கம் - kannadasan.wordpress.com]
*
{{Standardised}}
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:02, 12 April 2022

கண்ணதாசன்

கண்ணதாசன் (ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981) தமிழ்க் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். தமிழில் திரைப்படப்பாடல்கள் வழியாக பெரும்புகழ்பெற்ற கண்ணதாசன் திராவிட இயக்க ஆதரவாளராகவும் பின்னர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார். தமிழில் குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள் எழுதினார். மரபுக்கவிதையில் எழுதிய முக்கியமான இறுதிக்கட்ட கவிஞர் என அறியப்படுகிறார்

பிறப்பு, கல்வி

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8-வது மகனாக ஜூன் 24, 1927-ல் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர் (ஆறு சகோதரிகள், மூன்று சகோதரிகள்) சிறு வயதில் இவரை பழனியப்பச் செட்டியார் - சிகப்பி ஆச்சி (மறைவு டிசம்பர் 25, 1958) இணையர் தத்து எடுத்துக்கொண்டார்கள். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியில் முடித்தபின் அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

கண்ணதாசன் ஈ.வெ.ராமசாமி பெரியாருடன்
கண்ணதாசன் -எம்.ஜி.ஆர்

தனிவாழ்க்கை

கண்ணதாசன் 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்குச் சென்று சந்திரசேகரன் என்று புனைபெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். அஜக்ஸ் கம்பெனி, திருவற்றியூர் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. காரைக்குடிக்கு திரும்பி திருமகள் என்னும் இதழி பிழைதிருத்துபவராக பணிக்குச் சேர்ந்தார். அப்போதுதான் கண்ணதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டார்.

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் என்பவரோடு பிப்ரவரி 9, 1950 அன்று காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்,. கண்ணதாசன், பார்வதி என்பவரை நவம்பர் 11, 1951 அன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் இருக்கிறார்

கண்ணதாசன் குடும்பம்
கண்ணதாசன் மனைவியுடன்

இலக்கியவாழ்க்கை

கண்ணதாசனின் முதல் கதை ’நிலவொளியிலே’ கிருகலட்சுமி இதழில் 1944-ல் வெளிவந்தது. காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என பலபெயர்களில் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், திரைக்குறிப்புகள் எழுதினார். டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருக்கையில் 1952-1953-ல் தன் முதல் குறுங்காவியம் ‘மாங்கனி’யை எழுதினார்.

கண்ணதாசனின் கவிதையுலகம் மிக விரிந்தது. முழுமையாகவே மரபுக்கவிதை உலகைச் சேர்ந்தவர். குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் என தொடர்ச்சியாக எழுதினார். குமுதம் வார இதழில் அவர் எழுதிய மரபுக்கவிதைகள் பெரும்புகழ்பெற்றவை. மானுடரைப் பாடமாட்டேன் என அவர் எழுதிய கவிதைக்கு மானுடரைப் பாடுவோம் என சௌந்தரா கைலாசம் எழுதிய பதில்கவிதை புகழ்பெற்றது.

கண்ணதாசன் அவர் நடத்திய தென்றல் இதழில் தொடங்கி எளிமையான பொதுவாசிப்புக்குரிய இதழான ராணி வாராந்தரி வரை தொடர்கதைகளாக நாவல்களை எழுதினார். அவை பொதுவாசிப்புக்குரியவை, பாலியல் சார்ந்த அக்கால எல்லைகளை சற்று கடந்தவை. சேரமான் காதலி, குமரிக்கண்டன் போன்ற சரித்திர மிகுபுனைவுகளையும் எழுதினார்.

திரைவாழ்க்கை

கண்ணதாசன் 1949-ல் ஜூபிடர் நிறுவன தயாரிப்பில் கே.ராம்நாத் இயக்கிய கன்னியின் காதலி படத்தில் கலங்காதிரு மனமே என்னும் பாடலை எழுதினார். அதன்பின் பாடலாசிரியராக முப்பதாண்டுகள் செயல்பட்டார். இல்லறஜோதி (1954) முதல் பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.

கண்ணதாசன் தி.மு.க தலைவர்களுடன்

இதழியல்

கண்ணதாசன் பல இதழ்களை தொடங்கி நடத்தியிருக்கிறார். பல இதழ்களின் செயல்பாட்டில் உடன் இருந்திருக்கிறார்.

  • சண்டமாருதம்
  • முல்லை
  • மேதாவி
  • தென்றல்
  • தென்றல்திரை
  • கண்ணதாசன்

அரசியல்

கண்ணதாசன்

1949-ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளில் பங்கெடுத்தார். ஏப்ரல் 9, 1961-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகினார். 1957-ல் திருக்கோஷ்டியூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1962 ல் ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். 1964-ல் அக்கட்சி தமிழ் தேசிய காங்கிரசுடன் இணந்தது.

கண்ணதாசன் காங்கிரஸ் உறுப்பினராக ஆகி காமராஜரின் தீவிர ஆதரவாளராக அரசியல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காமராஜர் மறைவுக்குப்பின் இந்திய தேசியக் காங்கிரஸ் (இந்திரா) பிரிவின் ஆதரவாளரானார். இறுதிவரை காங்கிரஸ் ஆதரவாளராக நீடித்தார். மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியமைத்தபோது அவரால் மார்ச் 28, 1978-ல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

கண்ணதாசன் திருமணம்

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

மறைவு

கண்ணதாசன் ஜெயகாந்தனுடன்

கண்ணதாசன் பெதடின் போதையூசி போடும் வழக்கம் கொண்டிருந்தார். உடல்நலிந்து ஜூலை 24, 1981-ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-ல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-ல் எரியூட்டப்பட்டது.

நினைவகங்கள், நினைவுகள்

கண்ணதாசன் காமராஜர்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990-ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன

2013-ல் கண்ணதாசனுக்கு தபால்தலை வெளியிடப்பட்டது.  

இலக்கிய இடம்

தமிழ் மரபுக்கவிதை சி.சுப்ரமணிய பாரதியார் ,பாரதிதாசன் ஆகியோருக்கு பின்னர் பாரதிதாசன் பரம்பரை யைச்சேர்ந்த கவிஞர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 1970-களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தேக்கம் அடைந்தனர். பலர் வானம்பாடி கவிதை இயக்கம் வழியாக புதுக்கவிதை வடிவுக்கு வந்தனர். பாரதிதாசன் மரபைச் சேர்ந்த கவிஞர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல் சார்ந்த கவிதைகளை எழுதினர். ஆகவே மரபுக்கவிதையின் எல்லா சந்தங்களிலும் அவர்கள் செயல்பட இயலவில்லை. அவர்களில் பலர் மரபான உளநிலைகளை மறுப்பவர்கள். ஆகவே மரபுக்கவிதையுடன் அவர்களின் சொல்லமைவு இணையவில்லை. மரபுக்கவிதையின் சொல்லழகும் ஒலியழகும் அணியழகும் முழுமையாக வெளிப்பட்ட கடைசிக் கவிஞர் என்று கண்ணதாசன் கருதப்படுகிறார். யாப்பில் இருந்த பயிற்சியாலும், மரபிலக்கியத் தேர்ச்சியாலும் கண்ணதாசன் தன்னிச்சையான மொழியொழுக்குடன் யாப்பில் கவிதைகளை எழுதினார். கண்ணதாசனின் இலக்கிய இடம் அவர் எழுதிய மாங்கனி போன்ற குறுங்காவியங்கள் மற்றும் தனிக்கவிதைகளின் வழியாக அமைவது.

கண்ணதாசனின் புனைவுகள் பொது வாசகர்களை கவரும் நோக்கம் கொண்டவை. அன்றைய பொதுவாசிப்புச் சூழலில் அவை விரும்பப்பட்டன.

நூல்கள்

கவிதை

காப்பியங்கள்
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • இயேசு காவியம்
  • ஐங்குறுங்காப்பியம்
  • கல்லக்குடி மகா காவியம்
  • கிழவன் சேதுபதி
  • பாண்டிமாதேவி
  • பெரும்பயணம்
  • மலர்கள்
  • மாங்கனி
  • முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
  • கண்ணதாசன் கவிதைகள் - 1959, காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  • கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி - 1960, காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  • கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
  • கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி - 1968, வானதி பதிப்பகம், சென்னை
  • கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி - 1971, வானதி பதிப்பகம், சென்னை
  • கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி - 1972, வானதி பதிப்பகம், சென்னை
  • கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி - 1976, வானதி பதிப்பகம், சென்னை
  • கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி - 1986, வானதி பதிப்பகம், சென்னை
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
  • அம்பிகை அழகுதரிசனம்
  • கிருஷ்ண அந்தாதி
  • கிருஷ்ண கானம்
  • கிருஷ்ண மணிமாலை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  • ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  • தைப்பாவை
கவிதை நாடகம்
  • கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
  • பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
  • பஜகோவிந்தம்
கண்ணதாசன் மணிமண்டபம்
கண்ணதாசன் தபால்தலை

நாவல்கள்

  • அவளுக்காக ஒரு பாடல்
  • அவள் ஒரு இந்துப் பெண்
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • அதைவிட ரகசியம்
  • ஆச்சி - வானதி பதிப்பகம், சென்னை
  • ஆயிரங்கால் மண்டபம்
  • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி - 1956, அருணோதயம், சென்னை
  • ஊமையன்கோட்டை
  • ஒரு கவிஞனின் கதை
  • கடல் கொண்ட தென்னாடு
  • காமினி காஞ்சனா
  • சரசுவின் செளந்தர்ய லஹரி
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • சிங்காரி பார்த்த சென்னை
  • சுருதி சேராத ராகங்கள்
  • சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  • தெய்வத் திருமணங்கள்
  • நடந்த கதை
  • பாரிமலைக்கொடி
  • பிருந்தாவனம்
  • மிசா
  • முப்பது நாளும் பவுர்ணமி
  • ரத்த புஷ்பங்கள்
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • வேலங்குடித் திருவிழா
  • ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

  • ஈழத்துராணி
  • ஒரு நதியின் கதை
  • கண்ணதாசன் கதைகள்
  • காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
  • குட்டிக்கதைகள்
  • பேனா நாட்டியம்
  • மனசுக்குத் தூக்கமில்லை
  • செண்பகத்தம்மன் கதை
  • செய்திக்கதைகள்
  • தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  • எனது வசந்த காலங்கள்
  • வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
  • எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
  • மனவாசம் (காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
  • எனது சுயசரிதம்

கட்டுரைகள்

  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • இலக்கியத்தில் காதல்
  • இலக்கிய யுத்தங்கள்
  • எண்ணங்கள் 1000
  • கடைசிப்பக்கம்
  • கண்ணதாசன் கட்டுரைகள்
  • கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
  • கூட்டுக்குரல் - அருணோதயம், சென்னை
  • குடும்பசுகம்
  • சந்தித்தேன் சிந்தித்தேன்
  • சுகமான சிந்தனைகள்
  • செப்புமொழிகள்
  • ஞானமாலிகா
  • தமிழர் திருமணமும் தாலியும்
  • தென்றல் கட்டுரைகள்
  • தெய்வதரிசனம்
  • தோட்டத்து மலர்கள்
  • நம்பிக்கை மலர்கள்
  • நான் பார்த்த அரசியல் - முன்பாதி
  • நான் பார்த்த அரசியல் - பின்பாதி
  • நான் ரசித்த வர்ணனைகள்
  • புஷ்பமாலிகா
  • போய் வருகிறேன்
  • மனம்போல வாழ்வு
  • ராகமாலிகா
  • வாழ்க்கை என்னும் சோலையிலே

ஆன்மீகம்

  • அர்த்தமுள்ள இந்து மதம் 1
  • அர்த்தமுள்ள இந்து மதம் 2
  • அர்த்தமுள்ள இந்து மதம் 3
  • அர்த்தமுள்ள இந்து மதம் 4: துன்பங்களிலிருந்து விடுதலை
  • அர்த்தமுள்ள இந்து மதம் 5: ஞானம் பிறந்த கதை
  • அர்த்தமுள்ள இந்து மதம் 6: நெஞ்சுக்கு நிம்மதி
  • அர்த்தமுள்ள இந்து மதம் 7: சுகமான சிந்தனைகள்
  • அர்த்தமுள்ள இந்து மதம் 8: போகம் ரோகம் யோகம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் 9: ஞானத்தைத்தேடி
  • அர்த்தமுள்ள இந்து மதம்10: உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை - 1956, அருணோதயம், சென்னை

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

  • அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  • ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
  • ஆண்டாள் திருப்பாவை
  • ஞானரஸமும் காமரஸமும்
  • சங்கர பொக்கிஷம்
  • சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  • சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
  • திருக்குறள் காமத்துப்பால்
  • பகவத் கீதை

பேட்டிகள்

  • கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
  • சந்தித்தேன் சிந்தித்தேன்

வினா-விடை

  • ஐயம் அகற்று
  • கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

உசாத்துணை

⨮ Standardised

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.