being created

கணிகர்

From Tamil Wiki
Revision as of 13:17, 10 September 2022 by Navingssv (talk | contribs) (Created page with "கணிகர்: மராட்டியைத் தாய் மொழியாகக் கொண்ட பன்னிரெண்டு நாடோடி சாதிக் குழுக்கள். ராவ் என்ற சாதிய பெயரைக் கொண்டவர்கள். == கணிகர் பிரிவுகள் == கணிகர் கோந்தளா, சவான், சஸான், சாஸ்தா, டொர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கணிகர்: மராட்டியைத் தாய் மொழியாகக் கொண்ட பன்னிரெண்டு நாடோடி சாதிக் குழுக்கள். ராவ் என்ற சாதிய பெயரைக் கொண்டவர்கள்.

கணிகர் பிரிவுகள்

கணிகர் கோந்தளா, சவான், சஸான், சாஸ்தா, டொர்கர், பாங்கோத், பாங்கா, புத்ரீகர், மண்டிகர், முத்ரீகர், வாக்டுகர், வாவுடுகள் எனப் பன்னிரெண்டு சாதிகளை உள்ளடக்கியவர்கள். இவை தவிர தேளிராஜா, அம்பிளியா, கோண்டு, மெகார், அடகா ஆகிய பிரிவுகளும் உள்ளது என நாகர்கோவிலைச் சேர்ந்த தோல்பாவைக் கூத்து கலைஞர் சுப்பையாராவ் குறிப்பிடுகிறார். இதில் மண்டிகரைத் தவிர பிற அனைவரும் சோதிடம் பார்க்கும் தொழிலைச் செய்பவர்கள்.

கோந்தளா சாதியினர் கோந்தளா என்னும் இசைக்கருவியை இசைப்பதால் இப்பெயரைப் பெற்றனர். கணிகர் சமயச் சடங்குகளில் கோந்தளா இசைக்கும் வழக்கம் உள்ளது. இச்சமூகத்தில் சிலர் பொய்க்கால் குதிரை ஆட்டமும் நிகழ்த்துகின்றனர். 1940 களுக்கு முன்னர் சம்முள்மேளம் என்ற கலையை கோந்தளா பிரிவினர் நிகழ்த்தியிருக்கின்றனர். மண்டிகர்கள் தோல்பாவைக் கூத்து நிகழ்த்தும் ஊரில் பகல்வேளைகளில் சம்முள்மேளம் இசைத்தனர்.

சவான் சாதியினர் ராசி சோட்ட சவான், பினாட்டிவாலா என்னும் இரு உட்பிரிவுகளைக் கொண்டவர்கள். முந்தைய காலங்களில் கணிகரின் பஞ்சாயத்தில் சவான் பிரிவினரே நீதி வழங்கும் உரிமை பெற்றிருந்தனர். சஸான் (சாஸ்னா) ஷாஹிபர் ஷாஷா என்ற முயலைக் குறிக்கும் சொல்லில் இருந்து சஸான் என்ற பெயர் பெற்றனர். இச்சாதியினரின் மரபுச் சின்னம் முயல். இவை வேட்டையாடினாலும் முயலை வேட்டையாடும் வழக்கம் இவர்களிடமில்லை. இவர்களின் முன்னோர் வழிப்பாட்டுத் தெய்வமாக முயல் உள்ளது.

சாஸ்தா ப்ரிவினர் திருமணச் சடங்கிலும் பிற சடங்குகளிலும் சிவப்பு அரிசியைப் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள். டொர்கர் மண்டிகரைப் போல் தோல்பாவைக் கூத்து நடத்தும் உரிமைக் கொண்டவர்கள். டொர்கரில் துமலா, மண்டீப்பகர் என இரு உட்பிரிவுகள் உண்டு. வாகுடக்காப் சாதியினரின் ஹெமிக்ரி என்ற பாவையை தங்கள் மரபு சின்னமாகக் கொண்டிருந்தனர்.

கணிகரின் பன்னிரெண்டு பிரிவுகளில் அடங்காத கோண்டு சாதியினரின் சின்னமாகக் கஞ்சித்தண்ணீர் இருந்தது. இவர்களும் அம்பிலியா பிரிவினரும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. மெகார் பிரிவினரின் மரபு சின்னமாக மயில் இருந்தது. இவர்கள் மயிலை வேட்டையாட மாட்டார்கள். அடகா சூரியனின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தங்களை ரகுவம்சத்தினர் எனக் கூறுகின்றனர்.

இந்தப் பிரிவுகளில் அடக்காதவர்கள் மண்லிக்கர் சாதியினர். இவர்களை 1/4 பிரிவாக கணக்கிடுகின்றனர். கணிகரின் வெவ்வேறு பிரிவுகளில் முறை தவறி உடலுறவு கொண்டவர்கள். ஒழுக்கம் குறைந்த ஆண், பெண் உட்பிரிவுகளில் அல்லது வேறு சாதியில் உடலுறவு வைத்துக் கொண்டவர்களை மண்லிக்கர் என்றழைக்கின்றனர். மண்லிக்கருடன் பிற கணிகர் பிரிவினர் மண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. மண்லிக்கருக்கு கணிகரின் மோளாதாளாவில் உரிமையும் இல்லை. இப்பிரிவு இன்று வழக்கில் இல்லை. இவர்கள் கணிகரின் மற்ற பன்னிரெண்டு பிரிவில் கலந்துவிட்டனர்.

வாழும் இடங்கள்

கணிகர் இனத்தவர்கள் மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள கடச்சானத்தல் பகுதியில் பெருமளவு வசிக்கின்றனர். கோவில்பட்டி, தோவாளை பகுதியிலும் அதிகளவில் உள்ளனர். நாடோடி வாழ்க்கை வாழும் இவர்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைந்தளவில் வசிக்கின்றனர்.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.