under review

சம்முள்மேளம்

From Tamil Wiki
சம்முள்மேளம்.jpg

சம்முள்மேளம்: மண்பானை போன்ற இசைக்கருவி. சம்முள் மேளம் என்றால் இரட்டைக் கொட்டு என்று பொருள். மண் பானையால் செய்யப்பட்ட இசைக்கருவி.

வடிவமைப்பு

தண்ணீர் கொண்டிருக்கும் மண் பானையைப் போல் அகன்ற அளவில் வாய்ப்பகுதி உடைய இரண்டு மண் குடங்கள் சம்முள்மேளம். இதன் வாய்ப்பகுதி கன்றுக் குட்டியின் தோலால் மூடப்பட்டு, கழுத்துப் பகுதி தோல் வாறால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும்.

வாசிப்பு முறை

இந்தக் கொட்டைக் குச்சிக் கொண்டு அடித்து இசைப்பர். இக்கருவியில் அடிக்கப்படும் தாளத்திற்கு ஏற்ப 10-13 வயதில் இரண்டு சிறுமிகள் ஆடுவர். காலை அல்லது மாலை நேரங்களில் மூன்று வீதிகள் கூடும் சந்திகளில் இந்த ஆட்டம் நிகழும். இது தோல்பாவைக் கூத்து நிகழும் கிராமத்தை அடுத்த பகுதியில் நடைபெறும்.

சம்முள்மேளத்திற்கு கூலியாகக் கோந்தளக்காரர் பெறுவது அரிசி மட்டுமே. ஆட்டம் நிறைவு பெற்றதும் கோந்தளப் பெண் தலையில் கூடையுடன் கிராமத்து வீதிகளில் வருவாள். அவள் பின்னே கோந்தளக் கொட்டைக் கொட்டிக் கொண்டு ஒருவர் வருவார். கூடையில் அரிசி நிறைந்ததும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து பொங்கிச் சாப்பிடுவர்.

பயன்படுத்தும் சாதியினர்

இதனை கணிகர் இனக்குழுவின் ஒரு பிரிவினரான கொந்தள சாதியினர் பயன்படுத்தினர்.

முந்தைய காலங்களில் தோல்பாவைக் கூத்தின் பின்னணி இசைக்காக சம்முள்மேளம் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் தோல்பாவைக் கூத்தில் சம்முள்மேளத்தின் இடத்தை மிருதங்கம் பிடித்தது. (பார்க்க மண்டிகர், தோல்பாவைக் கூத்து)

உசாத்துணை

  • தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து, அ.கா. பெருமாள், காவ்யா பதிப்பகம் (2015)
  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் - அ.கா.பெருமாள்


✅Finalised Page