under review

மோளாதாளா

From Tamil Wiki

மோளாதாளா: மண்டிகர் சாதியில் வழக்கில் இருக்கும் தட்சணை, அபராதம் ஆகியவற்றைக் குறிக்கும் சொல். டோர்கர் அல்லது சவான் சாதிக்காரர்கள் நாணி பூஜிதாலா சடங்கைச் செய்து மோளாதாளா தட்சணை பெறுவர். தகாத பாலுறவில் ஈடுபடுபவனுக்குக் கொடுப்படுவது மோளாதாளா அபராதம்.

மோளாதாளா

மோளாதாளா மண்டிகர் பஞ்சாயத்தில் வசூலிக்கப்படும் அபராதத்தைக் குறிக்கும் சொல். மண்டிகர் சடங்கில் கொடுக்கும் தட்சணைக்கும் இச்சொல்லையே பயன்படுத்துவர்.

மோளாதாளா ஒரே குடும்பத்துள் நிகழும் பிரிவினைக்கும் விதிக்கின்றனர். ஆனால் அதில் சில வரையறையை கடைபிடிக்கின்றனர். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இருவர் தங்களுக்குள் எந்த ரத்த பந்தமும் இல்லை என கணிகர் பதினோரு சாதியின் முன்னிலையில் ஒருவர் சொல்லிவிட்டால் அண்ணன் தம்பி உறவு முறிந்துவிடும். அதற்கு அந்தச் சாதிக்காரனுக்கு மோளாதாளா (தட்சணையும், அபராதமும்) கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.

அண்ணன், தம்பி உறவு முறந்த பின் அவர்கள் இருவருக்குள்ளும் பணம் கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை. அதையும் மீறி பணம் கொடுக்க வாங்கல் நிகழ்ந்தால் பஞ்சாயத்தில் மோளாதாளா (குற்றத்திற்கான அபராதம்) செலுத்த வேண்டும். ஊர் பஞ்சாயத்தில் அண்ணன் அல்லது தம்பிக்கு மோளாதாளா விதித்தால் அது விதிக்கப்பட்டவரை மட்டும் பாதிக்கும். அவர்கள் இருவருக்குள்ளும் சொத்துரிமையும் கிடையாது. பொது அபராதம் போடப்பட்டால் அது இரு குடும்பத்தினருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும்.

உசாத்துணை

  • தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து, அ.கா. பெருமாள், காவ்யா பதிப்பகம் (2015)


✅Finalised Page