being created

இளநாகனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
This page is being created by ka. Siva
இளநாகனார், [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான [[நற்றிணை|நற்றிணையில்]] இடம் பெற்றுள்ளன.
 
இளநாகனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இளநாகனாரின் இயற்பெயர் நாகன் என்றும் நாகன் என்னும் பெயரில் வேறு புலவர்களும் உள்ளதால் இவரது இளமையை கருதி இளநாகனார் என வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இளநாகனார் இயற்றிய மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 151, 205 மற்றும் 231- வது பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இளநாகனார், உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள்களைக் கொண்டு அகப்பொருள் கருத்தை விளக்குவதில் திறன் படைத்தவர். ஆளி என்னும் கொடும் விலங்கு, செம்முக மந்தி,  எழு விண்மீன் போன்றவை இவரது பாடல்களில் பயின்று வருகின்றன.

== பாடல்களால் அறியவரும் செய்திகள் ==
== பாடல்களால் அறியவரும் செய்திகள் ==
===== நற்றிணை 151 =====
===== நற்றிணை 151 =====
* [[குறிஞ்சித் திணை]]  
* [[குறிஞ்சித் திணை]]  
* இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

Line 19: Line 12:
* இளந் தளிர்களை உண்டுகொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் பார்த்துவிடக் கூடாது என்று அஞ்சி, மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, செம்முக மந்திக்  கடுவனுக்குப்  குறியிடமாகக் காட்டும்.  

* பின்னர் பொன்னிறத்தில் பூத்துக் கிடக்கும் வேங்கைப் பூக்களைத் தின்னச் செல்லும். அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மந்தியின் தலை முடியைத் திருத்தும் கடுவன்களுள்ள குன்றுகளை உடையவன் குன்றநாடன்

===== நற்றிணை 205 =====
===== நற்றிணை 205 =====
* [[பாலைத் திணை]]  
* [[பாலைத் திணை]]  
* தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது.

Line 28: Line 19:
* குவளை மலர் போன்ற கண்ணை உடைய உன் காதலியை இங்கே இருக்கும்படி விட்டுவிட்டு பொருளீட்டச் செல்வாயானால்

* வளைந்த முள்ளினை உடைய ஈங்கை, உயர்ந்த மா மரம் ஆகியவற்றின் தளிர்கள் மழையில் நனைந்து காட்சி தருவது போல் விளங்கும் இவளது மாமை அழகு இன்றோடு அழிந்துவிடும்.

===== நற்றிணை 231 =====
===== நற்றிணை 231 =====
 
* [[நெய்தல் திணை]]
* நெய்தல் திணை
* சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.

* மாசற்று விளங்கிய நீல வானத்தில் கைகூப்பித் தொழும்படி எழுமீன் மண்டலம் விளங்குவது போல நீலநிறக் கடல் பரப்பின் மேலே சிறிய வெள்ளைக் காக்கைகள் பறக்கும் கடல் தனித்துக் கிடக்கிறதே!  

* தோழி! பழங்காலம் முதல்  ஊருக்குள்ளே வாழும் ஊர்க்குருவி முட்டையை உடைத்தது போன்று கருநிறக் காம்புகளில் புன்னைப் பூ பூத்துக்கிடக்கும் கானலில்  உள்ளம் கவர்ந்தவன் தந்த காதல், நெஞ்சை விட்டு நீங்காமல் உருத்திக் கொண்டிருக்கிறதே

== பாடல் நடை ==
== பாடல் நடை ==
===== நற்றிணை 151 =====
===== நற்றிணை 151 =====
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,

Line 62: Line 49:

குன்ற நாடன் இரவினானே!  
குன்ற நாடன் இரவினானே!  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai(14)adiyanvinnattanar.pdf சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்]

[http://vaiyan.blogspot.com/2016/10/agananuru-375.html?m=1 நற்றிணை 151,  தமிழ்த் துளி இணையதளம்]  
[https://vaiyan.blogspot.com/2016/10/agananuru-375.html?m=1 நற்றிணை 151,  தமிழ்த் துளி இணையதளம்]

[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_375.html நற்றிணை 151, தமிழ் சுரங்கம் இணையதளம்]  

[http://vaiyan.blogspot.com/2016/11/natrinai-205.html?m=1 நற்றிணை 205 தமிழ்த் துளி இணையதளம்]
[https://vaiyan.blogspot.com/2016/11/natrinai-205.html?m=1 நற்றிணை 205 தமிழ்த் துளி இணையதளம்]

[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/narrinai_205.html நற்றிணை 205 தமிழ் சுரங்கம் இணையதளம்]  

[http://vaiyan.blogspot.com/2016/11/natrinai-231.html?m=1 நற்றிணை 231, தமிழ்த் துளி இணையதளம்]
[https://vaiyan.blogspot.com/2016/11/natrinai-231.html?m=1 நற்றிணை 231, தமிழ்த் துளி இணையதளம்]

[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/narrinai_231.html நற்றிணை 231, தமிழ் சுரங்கம் இணையதளம்] {{Being created}}

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:05, 30 November 2022

இளநாகனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இளநாகனாரின் இயற்பெயர் நாகன் என்றும் நாகன் என்னும் பெயரில் வேறு புலவர்களும் உள்ளதால் இவரது இளமையை கருதி இளநாகனார் என வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இளநாகனார் இயற்றிய மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 151, 205 மற்றும் 231- வது பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இளநாகனார், உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள்களைக் கொண்டு அகப்பொருள் கருத்தை விளக்குவதில் திறன் படைத்தவர். ஆளி என்னும் கொடும் விலங்கு, செம்முக மந்தி,  எழு விண்மீன் போன்றவை இவரது பாடல்களில் பயின்று வருகின்றன.

பாடல்களால் அறியவரும் செய்திகள்

நற்றிணை 151
  • குறிஞ்சித் திணை
  • இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
  • குன்ற நாட! நீ வராமையால், இவள் நெற்றி பசந்தாலும், தோள் வாடினாலும், இரவில் நீ வரவேண்டாம்.
  • தன்னைக் கொல்லக்கூடிய புலியை அதன் குகைக்கே சென்று குத்திக் கொன்ற யானை, குருதி படிந்த தன் கொம்புகளை கல்லில் கொட்டும் அருவி நீரில் கழுவும் வழியில் வரவேண்டாம்.
  • இளந் தளிர்களை உண்டுகொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் பார்த்துவிடக் கூடாது என்று அஞ்சி, மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, செம்முக மந்திக்  கடுவனுக்குப்  குறியிடமாகக் காட்டும்.
  • பின்னர் பொன்னிறத்தில் பூத்துக் கிடக்கும் வேங்கைப் பூக்களைத் தின்னச் செல்லும். அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மந்தியின் தலை முடியைத் திருத்தும் கடுவன்களுள்ள குன்றுகளை உடையவன் குன்றநாடன்
நற்றிணை 205
  • பாலைத் திணை
  • தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது.
  • அருவி ஒலிக்கும் மலையடுக்கத்தில் ஆளி  வேட்டைக்கு எழுந்து, பற்றும் நகங்களும், மேனியில் புள்ளிகளும் கொண்ட புலியைக் கொல்லும். ஆளி தன் வலிமையான நகங்களால்  யானையைப் பற்றி இழுக்கும்.
  • இப்படிப்பட்ட நெருங்கமுடியாத காடாயிற்றே என்று, என் நெஞ்சே! நீ எண்ணிப்பார்க்கவில்லை.
  • குவளை மலர் போன்ற கண்ணை உடைய உன் காதலியை இங்கே இருக்கும்படி விட்டுவிட்டு பொருளீட்டச் செல்வாயானால்
  • வளைந்த முள்ளினை உடைய ஈங்கை, உயர்ந்த மா மரம் ஆகியவற்றின் தளிர்கள் மழையில் நனைந்து காட்சி தருவது போல் விளங்கும் இவளது மாமை அழகு இன்றோடு அழிந்துவிடும்.
நற்றிணை 231
  • நெய்தல் திணை
  • சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.
  • மாசற்று விளங்கிய நீல வானத்தில் கைகூப்பித் தொழும்படி எழுமீன் மண்டலம் விளங்குவது போல நீலநிறக் கடல் பரப்பின் மேலே சிறிய வெள்ளைக் காக்கைகள் பறக்கும் கடல் தனித்துக் கிடக்கிறதே!
  • தோழி! பழங்காலம் முதல்  ஊருக்குள்ளே வாழும் ஊர்க்குருவி முட்டையை உடைத்தது போன்று கருநிறக் காம்புகளில் புன்னைப் பூ பூத்துக்கிடக்கும் கானலில்  உள்ளம் கவர்ந்தவன் தந்த காதல், நெஞ்சை விட்டு நீங்காமல் உருத்திக் கொண்டிருக்கிறதே

பாடல் நடை

நற்றிணை 151

நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,

கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்

செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை

கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்

வாரற்கதில்ல- தோழி!- கடுவன்,

முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,

கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த

செம் முக மந்தி செய்குறி, கருங் கால்

பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,

குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்

புன் தலைப் பாறு மயிர் திருத்தும்

குன்ற நாடன் இரவினானே!

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நற்றிணை 151,  தமிழ்த் துளி இணையதளம்

நற்றிணை 151, தமிழ் சுரங்கம் இணையதளம்

நற்றிணை 205 தமிழ்த் துளி இணையதளம்

நற்றிணை 205 தமிழ் சுரங்கம் இணையதளம்

நற்றிணை 231, தமிழ்த் துளி இணையதளம்

நற்றிணை 231, தமிழ் சுரங்கம் இணையதளம்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.