being created

இராசேந்திர சோழன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:
[[File:எழுத்தாளர் இராசேந்திர சோழன்.jpg|thumb|நன்றிjeyamohan.in ]]
[[File:எழுத்தாளர் இராசேந்திர சோழன்.jpg|thumb|நன்றிjeyamohan.in ]]
எழுத்தாளர் இராசேந்திர சோழன் (பிறப்பு 17-12 1945) (மற்ற பெயர்காள்: ராஜேந்திர சோழன், அஸ்வகோஷ், அஸ்வகோஸ்) தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். இவரது படைப்புகள் சமுகப்படிநிலையில் எளிய வர்க்கத்தைச்சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை, மனிதர்களின் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கும் உளவியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும், அரசியல், அறிவியல்,தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர். அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் படைப்புக்களை எழுதுகிறார்.
எழுத்தாளர் இராசேந்திர சோழன் (பிறப்பு 17-12 1945) (மற்ற பெயர்கள்: ராஜேந்திர சோழன், அஸ்வகோஷ், அஸ்வகோஸ்) தமிழின் எளிய மக்களின் வாழ்க்கையை எழுதிய  முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். இவரது படைப்புகள் சமுகப்படிநிலையில் எளிய வர்க்கத்தைச்சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை, மனிதர்களின் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கும் உளவியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும், அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர். அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் படைப்புக்களை எழுதுகிறார்.

=== பிறப்பு ===
=== பிறப்பு ===
Line 9: Line 9:

== இலக்கிய பங்களிப்பு ==
== இலக்கிய பங்களிப்பு ==
மார்க்க்சிய கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். 1970ல் ஆனந்தவிகடன் நடத்திய வட்டார அளவில் சிறுகதை போட்டியில் 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதை மூலம் படைப்பூக்கத்திற்குள் அறிமுகமாகி செம்மலர் , தீக்கதிர் போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கினார்.
மார்க்க்சிய கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். 1970ல் ஆனந்தவிகடன் நடத்திய வட்டார அளவில் சிறுகதை போட்டியில் 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதை மூலம் படைப்பூக்கத்திற்குள் அறிமுகமாகி செம்மலர் , தீக்கதிர் போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கினார். பெரும் தமிழுணர்வாளராக தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று .’ஐ’ என்ற உயிரெழுத்தொடு புணரும் மெய்யெழுத்துக்களை யானைக்கொம்பு போட்டு எழுதும் வழக்கத்தில் இருந்தது .அதை மாற்றி தற்போது நாம் எழுதும் நடைமுறைப்பழக்கத்திற்கு கொண்டுவந்தவர் .

=== இதழியல் ===
=== இதழியல் ===
Line 16: Line 16:
=== நாடகத்துறை ===
=== நாடகத்துறை ===
நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டு,  தில்லி தேசிய நாடகப் பள்ளி தமிழகத்தில் திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில் 10 வார காலம் நடத்திய தீவிர நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஊதியமில்லா விடுப்பு போட்டு கலந்து கொண்டார். பயிற்சி முடிந்து நெய்வேலியில் அனல் மின் நிலையத் தோழர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழுவை ‘செஞ்சுடர் கலாமன்றம்’ என்கிற பெயரில் தொடங்கி, நகரங்களிலும், சிற்றூர் புறங்களிலும் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

=== சமூக சீர்திருத்தம் ===
மார்க்க்சிய செயல்பாட்டாளராக பல்வேறு சமுதாய சீர்திருத்த நிகழ்வில் பெரும்பங்காற்றியுளார்.பெரும் தமிழுணர்வாளராக தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று .’ஐ’ என்ற உயிரெழுத்தொடு புணரும் மெய்யெழுத்துக்களை யானைக்கொம்பு போட்டு எழுதும் வழக்கத்தில் இருந்தது .அதை மாற்றி தற்போது நாம் எழுதும் நடைமுறைப்பழக்கத்திற்கு கொண்டுவந்தவர் .

== படைப்புகள் ==
== படைப்புகள் ==
Line 77: Line 74:
இராசேந்திர சோழனின் படைப்புக்கள் மனிதனின் ஆதார பண்புகளையும், இயங்குநிலையையும் பேசுகின்றன.[[அசோகமித்திரன்]] இராசேந்திர சோழனை ‘promising writer‘ எனக் குறிப்பிட்டார். [[ஜெயமோகன்]] இராசேந்திர சோழனின் பாசிகள், புற்றில் உறையும் பாம்புகள், வெளிப்பாடுகள் ஆகிய சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். புற்றில் உறையும் பாம்புகள் தமிழில் பாலியல் எழுத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்கிறார்.[[எஸ்._ராமகிருஷ்ணன்|எஸ். ராமகிருஷ்ணனும்]] புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதையை தமிழின் 100 சிறுகதைகளில் ஒன்றாக கருதுகிறார். 2020ல் இவரின் வாழ்வை ‘அஸ்வகோஷ்’ என்கிற தலைப்பில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளனர்.

* உசாத்துணை
* http://www.tamilwriters.in/2021/05/blog-post_29.html
* http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9287
* https://www.hindutamil.in/news/literature/592284-rajendra-chozhan-interview.html
{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:38, 10 February 2022

நன்றிjeyamohan.in

எழுத்தாளர் இராசேந்திர சோழன் (பிறப்பு 17-12 1945) (மற்ற பெயர்கள்: ராஜேந்திர சோழன், அஸ்வகோஷ், அஸ்வகோஸ்) தமிழின் எளிய மக்களின் வாழ்க்கையை எழுதிய முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். இவரது படைப்புகள் சமுகப்படிநிலையில் எளிய வர்க்கத்தைச்சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை, மனிதர்களின் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கும் உளவியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும், அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர். அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் படைப்புக்களை எழுதுகிறார்.

பிறப்பு

இராசேந்திர சோழன் 1945, டிசம்பர் 17ல் தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

இராசேந்திர சோழன் 1965ல் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியராகி இருபதாண்டுகாலம் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலத்தில் வசிக்கிறார்.

இலக்கிய பங்களிப்பு

மார்க்க்சிய கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். 1970ல் ஆனந்தவிகடன் நடத்திய வட்டார அளவில் சிறுகதை போட்டியில் 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதை மூலம் படைப்பூக்கத்திற்குள் அறிமுகமாகி செம்மலர் , தீக்கதிர் போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கினார். பெரும் தமிழுணர்வாளராக தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று .’ஐ’ என்ற உயிரெழுத்தொடு புணரும் மெய்யெழுத்துக்களை யானைக்கொம்பு போட்டு எழுதும் வழக்கத்தில் இருந்தது .அதை மாற்றி தற்போது நாம் எழுதும் நடைமுறைப்பழக்கத்திற்கு கொண்டுவந்தவர் .

இதழியல்

செம்மலர், தீக்கதிர், கணையாழி, கசடதபற , அஃக் மற்றும்  ஆனந்த விகடன் இதழ்களிலும் எழுதினார். இரண்டாண்டு காலம் சென்னைத் தோழர்களுடன் இணைந்து ‘பிரச்சனை’ ,  ‘உதயம்’ இதழ்களை நடத்தி அதில் நிறைய எழுதினார். ’மண்மொழி’ என்ற  சமூக மேம்பாட்டு இதழை நடத்தியுள்ளார்.

நாடகத்துறை

நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டு,  தில்லி தேசிய நாடகப் பள்ளி தமிழகத்தில் திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில் 10 வார காலம் நடத்திய தீவிர நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஊதியமில்லா விடுப்பு போட்டு கலந்து கொண்டார். பயிற்சி முடிந்து நெய்வேலியில் அனல் மின் நிலையத் தோழர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழுவை ‘செஞ்சுடர் கலாமன்றம்’ என்கிற பெயரில் தொடங்கி, நகரங்களிலும், சிற்றூர் புறங்களிலும் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

படைப்புகள்

புனைவிலக்கியம்

  • இராசேந்திரசோழன் குறுநாவல்கள்        
  • சிறகுகள் முளைத்து (1988)
  • பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம் (1997)
  • இராசேந்திரசோழன் சிறுகதைகள்  
  • 21வது அம்சம்
  • பதியம் நாவல்          
  • காவலர் இல்லம் நாவல்
  • புற்றில் உறையும் பாம்புகள்
  • சவாரி

நாடகம்

  • தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
  • மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்  
  • அஸ்வகோஷ் நாடகங்கள்  
  • அரங்க ஆட்டம்
  • கட்டுரைகள்
  • கருத்தியல் மதம் சாதி பெண்        
  • மண் மொழி மனிதம் நீதி  
  • மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி        
  • தமிழகம் தேசம் மொழி சாதி        
  • பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்    
  • மொழிக் கொள்கை
  • சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை    
  • இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்      
  • அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்
  • திராவிடம் மார்க்சியம் தமிழ்த் தேசியம்  
  • பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்  
  • தலித்தியம் - நோக்கும் போக்கும்  
  • தமிழ்த் தேசமும் தன்னுரிமையும்  
  • தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்        

தத்துவம்

  • பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?    
  • பின் நவீனத்துவம் -பித்தும் தெளிவும்        
  • மார்க்சிய மெய்யியல் ,கடவுள் என்பது என்ன?( 1995 )
  • சொர்க்கம் எங்கே இருக்கிறது?( 2006)  
  • தமிழ்த் தேசியம் என்றால் என்ன?  
  • பொதுவுடைமையும் தமிழர்களும்

அறிவியல்

  • அணுசக்தி மர்மம்  
  • அணு ஆற்றலும் மானுட வாழ்வும்  
  • அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்

விருதுகள்

  • விஜயா வாசகர் வட்ட விருது (2020)
  • புனைவிலக்கியத்துக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது(2021)

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கள்

  • திலிப் குமார் தொகுத்த The Tamil Story மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இவரது ‘சாவி’ சிறுகதை ஆங்கிலத்தில் ‘The Key’  என்று வெளியாகியுள்ளது.

இலக்கிய இடம்

இராசேந்திர சோழனின் படைப்புக்கள் மனிதனின் ஆதார பண்புகளையும், இயங்குநிலையையும் பேசுகின்றன.அசோகமித்திரன் இராசேந்திர சோழனை ‘promising writer‘ எனக் குறிப்பிட்டார். ஜெயமோகன் இராசேந்திர சோழனின் பாசிகள், புற்றில் உறையும் பாம்புகள், வெளிப்பாடுகள் ஆகிய சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். புற்றில் உறையும் பாம்புகள் தமிழில் பாலியல் எழுத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்கிறார்.எஸ். ராமகிருஷ்ணனும் புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதையை தமிழின் 100 சிறுகதைகளில் ஒன்றாக கருதுகிறார். 2020ல் இவரின் வாழ்வை ‘அஸ்வகோஷ்’ என்கிற தலைப்பில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளனர்.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.