அ.கா. பெருமாள்

From Tamil Wiki
Revision as of 23:48, 27 January 2022 by Navingssv (talk | contribs)

Work in progress

அ.கா. பெருமாள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பதில் முக்கியப் பங்காற்றிய ஆய்வாளர். குமரி மாவட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

வெங்கட் சாமிநாதன் தந்த ஊக்கத்தில் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். அருள்பணி ஜெயபதி, சுந்தர ராமசாமி இருவரின் தாக்கமும் உண்டு. வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர்தான் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.

பிறப்பு, இளமை

அ.கா. பெருமாள் 1947-இல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்). இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். தாயார் பகவதி அம்மாள்.

தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற பின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் இவருடன் படித்தவர்.

ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராக (ஓய்வு) பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

குடும்பம்

அ.கா. பெருமாளின் மனைவி பெயர் தேவகுமாரி. மகள் ரம்யா.

ஆய்வு பணி

இவர் எண்பதிற்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, தமிழ் அறிஞர்கள், நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு, கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார்.

தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார்.

பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும்.

குமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை), இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.

நூல் பட்டியல்

வ.எண். நூலின் பெயர் பதிப்பகம் ஆண்டு
1. நாட்டார் கதைகள் பகுதி 1 கோமளா ஸ்டோர்,

நாகர்கோவில் சோபிதம், நாகர்கோவில்.

1978

1986

2. புதிய தமிழில் பழைய கவிதை மீனாட்சி புத்தக நிலையம்,

மதுரை.

1979
3. கன்னியாகுமரி அன்னை மாயம்மா கன்னியா பிரசுராலயம்,

நாகர்கோவில்.

1979
4. தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி க்ரியா,

சென்னை.

1983
5. கவிமணியின் இன்னொரு பக்கம் பயோனீர் புக் சர்வீஸஸ்,

சென்னை.

1990
6. தொல்பழம் சமயக்கூறுகள் பயோனீர் புக் சர்வீஸஸ்,

சென்னை.

1990
7. ஆய்வுக்கட்டுரைகள் பத்மா புக்ஸ் ஏஜென்சி,

பப்ளிஷர்ஸ், நாகர்கோவில்.

1993

1997 2003 2005 2007

8. கன்னியாகுமரி மாவட்ட வரலாறு சுபா பதிப்பகம்,

நாகர்கோவில்.

1995
9. நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி ரோகிணி பிரிண்டர்ஸ் (பி)லிட் நாகர்கோவில். 1995
10. பொதுக்கட்டுரைகள் பத்மாபுக்ஸ்டால்,

நாகர்கோவில்.

1997

2000 2001

11. பெயரில் என்ன இருக்கிறது பத்மா புக்ஸ் ஏஜென்சி,

பப்ளிஷர்ஸ், நாகர்கோவில்.

1997
12. கோவில் சார்ந்த நாட்டார் கலைகள் வருண் பதிப்பகம்,

நாகர்கோவில்.

1997
13. பொன்னிறத்தாள்கதை (ப.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,

சென்னை.

1997
14. தோல்பாவைக் கூத்து வருண் பதிப்பகம்,

நாகர்கோவில்.

1998
15. வில்லுப்பாட்டுப் புராணக்கதைகள் வருண் பதிப்பகம்,

நாகர்கோவில்.

1998
16. முல்லைப்பாட்டு (உரையும் விளக்கமும்) உமா பதிப்பகம்,

சென்னை.

1998
17. குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும், கலைஞரும் வருண் பதிப்பகம்,

நாகர்கோவில்.

1999
18. தம்பிமார் கதை (ப.ஆ) (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) ஆசியவியல் நிறுவனம்,

சென்னை.

1999
19. நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள் ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

1999
20. நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம் மக்கள் வெளியீடு,

சென்னை.

1999
21.அ. தமிழ் இலக்கிய வரலாறு நிர்மால்யம்,

நாகர்கோவில்.

2000

2001 2002 2003 2004

21.ஆ. தமிழ் இலக்கிய வரலாறு சுதர்சன் புக்ஸ்,

நாகர்கோவில். (முழுவதும் திருத்தப்பட்ட பதிவு)

2005

2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014

22. இராம கீர்த்தனம் (ப.ஆ) ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2000
23. நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம்,

சென்னை.

2001
24. கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் (மொ.ப) ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2001
25. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள் ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2001
26. குமரி நாட்டுப்புறவியல் (ப.ஆ) தன்னனானே பாங்களுர். ஜுன், டிச.2001
27. சுசீந்திரம் கோவில் வருண் பதிப்பகம்,

நாகர்கோவில்.

2001
28. கம்பரின் தனிப்பாடல்கள் ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2001
29. இயக்கியம்மன் கதையும் வழிபாடும் (ப.ஆ) ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2002
30. தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து தன்னனானே பதிப்பகம்,

சென்னை.

2002
31. கவிமணியின் கவிதைகள் முழுதும் அடங்கிய ஆய்வுப்பதிப்பு (ப.ஆ) ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2002
32. ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும் ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2003
33. பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் ரோகிணி ஏஜென்சிஸ்,

நாகர்கோவில்.

2003
34. இராமாயணத் தோல்பாவைக் கூத்து தன்னனானே பதிப்பகம்,

சென்னை.

2003
35. தெய்வங்கள் முளைக்கும் நிலம் தமிழினி,

சென்னை.

2003
36. குருகுல மக்கள் கதை (ப.ஆ) ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

சென்னை.

2003
37. தென்குமரியின் கதை யுனைடெட் ரைட்டர்ஸ்,

சென்னை

2003
38. நல்லதங்காள் (ப.ஆ) தன்னனானே பதிப்பகம்,

சென்னை

2004
39. நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி தமிழினி,

சென்னை.

2004
40. ஒரு குடும்பத்தின் கதை யுனைடெட் ரைட்டர்ஸ்,

சென்னை.

2004
41. வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு யுனைடெட் ரைட்டர்ஸ்,

சென்னை.

2004
42. கவிமணியின் கட்டுரைகள் தமிழினி,

சென்னை.

2004
43. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் தமிழினி,

சென்னை.

2004
44. சனங்களின் சாமி கதைகள் யுனைடெட் ரைட்டர்ஸ்,

சென்னை.

2004
45. சித்தூர் தளவாய் மாடன் கதை (ப.ஆ) காவ்யா, சென்னை 2004
46. கானலம் பெருந்துறை (ப.ஆ) தமிழினி,

சென்னை.

2005