அமெரிக்க இலங்கை மிஷன்

From Tamil Wiki

அமெரிக்க இலங்கை மிஷன் (1813-1916) அமெரிக்க மறுமலர்ச்சி கிறீத்துவர்களால் இலங்க்கையில் துவங்கி நடத்தப்பட்ட மதபோதக அமைப்பாகும். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நவீன அடிப்படைக் கல்வியும், இரண்டம் நிலைக் கல்வியும் வழங்கிய முன்னோடிகள். ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாமல் தமிழிலும் கல்வி கற்பித்தனர். தமிழில் பல புத்தகங்களை மொழிபெயர்த்தும், புதிதாய் இயற்றியும் வெளியிட்டுள்ளனர். பொதுக்கல்விச் சாலைகள், மருத்துவக் கல்விச்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் குருமடங்களை நிறுவி மக்கள் பணி செய்தனர்.

அவர்கள் நிறுவிய வட்டுக்கோட்டை குருமடம் ஒரு பல்கலையைப் போன்ற அமைப்பு என்பதால் ஆசியாவிலேயே முன்னோடி நிறுவனம் என்று கருதப்படுகிறது.

துவக்கம்

யாழ்ப்பாணத்தில் 1540களில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்க மதபோதகர்கள் வந்து மதம் பரப்ப ஆரம்பித்தனர். 150 வருடங்களுக்குப் பின் 1658ல் டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்) துறைமுகத்தைக் கைப்பற்றினர். இதன்மூலம் டச்சு சீர்திருத்த சபை அங்கு பரவியது. 1796ல் ஆங்க்கிலேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். டச்சுக்காரர்களைப்போல் அல்லாமல் ஆங்க்கிலேயர் பிற கிறீத்துவ அமைப்புகளை ஆதரவுடன் நடத்தினர். இதனால் யாழ்ப்பாணத்தில் பல கிறித்துவ மதபரப்பு மையங்கள் (மிஷன்) உருவாகின. இவற்றில் அமெரிக்க இலங்கை மிஷன் முக்கியமானதாகும்.

1810ல் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்தினரால் உருவாக்கப்பட்ட மிஷனரி அமைப்பு (American Board of Commissioners for Foreign Missions (ABCFM)) வழியாக இலங்கை மிஷன் உருவாக்கப்பட்டது. 1812ல் முதல் மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து பயணத்தை ஆரம்பித்து கடுமையான பயணங்களுக்குப் பின் இந்தியா (கொல்கத்தா) வந்து சேர்ந்தனர்(ஜூன் 17, 1812). அங்கே அங்கிலேயர் பிற மத போதகர்களுக்கு அனுமதி வழங்காததால் பல்வேறு முயற்சிகளுக்குப்பின் பம்பாய் (மும்பை) மிஷனரிகளின் அழைப்பின் பேரில் ஸமுவேல் நெவெல் எனும் மிஷனரி பம்பாய்க்குப் பயணித்தார். தற்செயலாக அவரது கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்க்கூரமிட்டது. அதன் வழியாக அங்க்கிருந்த ஆட்சியாளர்களுடனும் மதப்பணியாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் நெவல். அங்கிருந்த ஆங்கிலேய ஆளுனர் அமெரிக்க மிஷனை இலங்க்கையில் துவங்க்கும்படி நெவலைக் கேட்டுக்கொண்டார். அமெரிக்கப் போர் முடிவடைந்ததும் ஐந்து மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இலங்க்கை வந்தனர். 1816ல் அமெரிக்க இலங்கை மிஷன் துவங்கப்பட்டது.

கல்விப்பணி

இலங்கை வந்து சில காலங்களிலேயே கல்வி வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க மிஷனரிகள் உள்ளூர் மக்களுக்குக் கல்வி வழங்கத் துவங்க்கினர். வட்டுக்கோட்டை குருமடமே அவர்களின் முதன்மையான நிறுவனமாகும். ரெவ். டாக்டர் டேனியேல் பூர் இக்காலகட்டத்தின் முன்னோடியாவர். இக்காலகட்டத்தில் இங்கிருந்து தேர்ச்சிபெற்று பின்னர் 1857 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற சி. டபிள்யூ. தாமோதரப்பிள்ளை முக்கியமான மாணவராகக் கருதப்படுகிறார். வட்டுக்கோட்டை குருமடம் ஐரோப்பிய கல்லூரிக்கு இணையானதாகக் கருதப்பட்டது.

மிஷன் துவங்கி நாற்பது ஆண்டுகளுக்குள் 1848ல் மொத்தம் 150 ஆரம்பப் பள்ளியில் பயின்ற மாணவர்களும் அவற்றிலிருந்து விடுதிப் பள்ளிகளில் சென்று படிக்கும் மாணவர்களுமாக மொத்தம் 30,000 மாணவர்கள் பயன்பெற்றனர். ஆங்கிலம் மட்டுமன்றி தமிழிலும் கல்வி வழங்கப்பட்டது.

பெண்கல்வி

திருமதி லெயிட்சும் உள்ளூர்ப் பெண்களும், 1880களில்

அக்கால இலங்கையில் பெண்கள் கல்வி கற்பது குறித்து மிக பழமையான கருத்துக்களே இருந்தன. அது தவறென்றும் கல்வி கற்றால் பெண்களுக்குத் திருமணம் நடைபெறாது என்றும் கருதப்பட்டது. பெண்கள் குழந்தை பெறவும் வீட்டுவேலை செய்யவும் மட்டுமே என்ற விலை இருந்தது. 1816ல் யாழ்ப்பாணத்தில் மொத்தம் 3 பெண்களுக்கே வாசிக்கத் தெரிந்திருந்தது. அமெரிக்க மிஷன் பெண்களுக்காக மூன்று வகைக் கல்விக்கூடங்களை உருவாக்கினர் இதில் ஒரு விடுதிப் பள்ளியும் அடக்கம். 1824ல் ஹரியட் வின்ஸ்லொவால் உடுவில்லில் துவங்கப்பட்ட இப்பள்ளி ஆசியாவிலே பெண்களுக்கான முதல் விடுதிப்பள்ளியாகும். உள்ளூர் எதிர்ப்புகளை தவிர்க்க துவக்கத்தில் பெண்களுக்கு திருமணத்தின்போது வரதட்சிணை வழங்குவது, ஆடைகள் வழங்க்குவது என சில சலுகைகளை வழங்கினர். 1850வாக்கில் உள்ளூர் மக்கள் பெண்கல்வி குறித்த பார்வைகளை மாற்றிக்கொண்டதால் இவ்வழக்கங்கள் கைவிடப்பட்டன.

இதைப் போல முதன் முதலாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வியைக் கொண்டு சேர்த்தவர்களும் அமெரிக்க சிலோன் மிஷனைச் சார்ந்தவர்களாகும்.

சுகாதாரம்

-சுகாதாரம் (மருத்துவமனைகள் .. காலரா)

தமிழ்ப்பணி

-தலித் கல்வி

- தமிழ்ப்பணி (மொழி பெயர்ப்புகள், நூல்கள், அச்சகம்)

-சுகாதாரம் (மருத்துவமனைகள் .. காலரா)


அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் - சி. டி. வேலுப்பிள்ளை

அமெரிக்க இலங்கை மிஷன் - சுருக்கப்பட்ட வரலாறு