being created

எயிற்றியனார் (சங்ககாலப் புலவர்)

From Tamil Wiki

எயிற்றியனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

எயிற்றியனார் என்னும் பெயர் காரணப்பெயராக இருக்கலாம். இவர் தனது பாடலில் "முன் எயிற்று அமிழ்தம் ஊறும் அம் செவ்வாய்" என தலைவியின் பற்களை சிறப்பித்துப் பாடியுள்ளதால் எயிற்றியனார் என்னும் பெயரை குறுந்தொகையை தொகுத்த இவருக்கு சூட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

எயிற்றியனார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 286-வது குறிஞ்சித்திணைப் பாடலாக உள்ளது. பிரிந்திருக்கும் தலைவியை மனதில் எண்ணி அவளின் அழகை தலைவன் பாராட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 286
  • குறிஞ்சித் திணை
  • தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.
  • கூர்மையான பல், அமிழ்தம் ஊறும் சிவந்த வாய், அகில் சந்தனம் புகையூட்டிக் கமழும் கூந்தல், என்னை எதிர்த்துப் போரிடும் ஈரமுள்ள கண்கள் புன்னகை மதமதப்பான பார்வை
  • இவற்றைக் கொண்ட கொடிச்சியான அவள், என் நினைவை விட்டு அகலாமல் இருக்கிறாள்.

பாடல் நடை

குறுந்தொகை 286

உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறும் அறல்போற் கூந்தல்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.