இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1970
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது.இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1970
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | சிவன் சொத்து | வசுமதி ராமஸ்வாமி | கல்கி |
பிப்ரவரி | கருவேலங் காட்டிடையே ஒரு கிராமம் | கே. இராமசாமி | அமுதசுரபி |
மார்ச் | அயோத்தி | நகுலன் | ஞானரதம் |
ஏப்ரல் | பயணம் | இந்திரா பார்த்தசாரதி | தீபம் |
மே | எரிமலை | அகிலன் | கலைமகள் |
ஜூன் | மாலை மயக்கம் | வையவன் | ஆனந்த விகடன் |
ஜூலை | பொய் மான் | ஆத்மா | கல்கி |
ஆகஸ்ட் | பின்னணி | ஏ.எஸ். ராகவன் | கலைமகள் |
செப்டம்பர் | நான் தூக்கத்தில் நடக்கிறேன் | ஜீவ்ஸ் | தினமணி கதிர் |
அக்டோபர் | நாம் என்ன செய்வது ? | ஆர். சூடாமணி | கலைமகள் |
நவம்பர் | இருட்டில் தூங்காமல் இருந்தவன் | வல்லிக்கண்ணன் | கணையாழி |
டிசம்பர் | சிதம்பர ரகசியம் | ஶ்ரீவத்ஸன் | கலைமகள் |
ஆண்டின் சிறந்த சிறுகதை
1970 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, ஏ.எஸ். ராகவன் எழுதிய ‘பின்னணி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. மா. அனந்தநாராயணன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை எழில் முதல்வன் தேர்ந்தெடுத்தார்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.