under review

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

From Tamil Wiki
Revision as of 15:47, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்க காலத்து துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 342-வது பாடலாக அமைந்துள்ளது. இல்லக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள தலைவிக்ச் சந்திக்க வரும் தலைவனிடத்து, முறையாகத் தலைவியை மணந்து கொள்ளச் சொல்லும் தோழியின் கூற்றாக குறிஞ்சி திணையில் இடம்பெற்றுள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பெரிய அளவிலான பலாப்பழங்கள் விளையும் மலைநாட்டு தலைவர், அப்பழங்களை ஆண்குரங்குகள் பாழ்படுத்தாது இருக்க, ஒவ்வொரு மரத்திலும் குரங்குகள் மாட்டிக்கொள்ளுமாறு வலைகளை விரித்து வைப்பர்.
  • மகளிர் தங்களது தழைகளாலான இடையாடையில் பசுமையான குளத்தில் மலர்ந்த குளிர்ச்சியான குவளை மலர்களை அலங்கரிப்பர்.

பாடல் நடை

குறுந்தொகை - 342

திணை: குறிஞ்சி

  • துறை: இல்லத்து காண்காணிப்பில் உள்ள தலைவியை உரிய முறையில் மணம் செய்து களவொழுக்கம் மறந்து கற்பு ஒழுக்க நெறியை கடைப்பிடிக்க தோழி தலைவனுக்கு கூறுவது.

கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Dec-2024, 07:16:36 IST