under review

தங்கம்மா சந்திசேகரம் முருகுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:46, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தங்கம்மாள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தங்கம்மாள் (பெயர் பட்டியல்)

தங்கம்மா சந்திசேகரம் முருகுப்பிள்ளை (பிறப்பு: ஜூன் 1, 1931) ஈழத்து கிராமியக் கலைஞர், நாடக நடிகர். கரகம், கொம்பு முறிநடனம், காவடிஆட்டம் ஆகிய கிராமிய நடனங்களைத் தயாரித்து அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தங்கம்மா சந்திசேகரம் முருகுப்பிள்ளை இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திக் ஆரையம்பதியில் ஜூன் 1, 1931-ல் பிறந்தார்.

கலை வாழ்க்கை

தங்கம்மா சந்திசேகரம் முருகுப்பிள்ளை சிறுவயதிலிருந்தே கிராமியக்கலையில் ஈடுபட்டார். கரகம், கொம்புமுறிநடனம், காவடிஆட்டம் மற்றும் பல கிராமிய நடனங்களை இவர் தயாரித்தார். 1954 முதல் காவடிப்பாடல், ஊஞ்சல்பாடல், தாலாட்டுப்பாடல், கவி போன்றவற்றைப் பாடினார். இப்பாடல்களைப் பதிப்பித்தார். 1971-ல் வானொலிக்கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு 1980 வரை கிராமியப் பாடல்கள், கிராமிய நாடகங்களை வானொலியில் பாடி, நடத்தினார்.

நாடக வாழ்க்கை

வடமோடி, தென்மோடி கூத்துகளைத் தயாரித்துள்ளதுடன் 1980-ல் 'அலங்காரரூபன்' தென்மோடிக்கூத்தில் நடித்தார். நாடகக் கலைஞரான ஆரையூர் இளவலுடன் இணைந்து பல நாடகங்களை நடித்தார்.

விருதுகள்

  • இவர் தயாரித்துள்ள பல நிகழ்ச்சிகள் தமிழ்தினப்போட்டியில் பங்குபெற்று முதலிடத்தைப் பெற்றன.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 21:49:39 IST