under review

தேவகுலத்தார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேவகுலத்தார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

தேவகுலத்தார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தேவகுலம் என்னும் சொல் இறையின் கோயில் என பொருள் கொண்டது.

இலக்கிய வாழ்க்கை

தேவகுலத்தார் பாடிய பாடல் குறுந்தொகையில் 3-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுக்கும் தனக்குமான உறவின் மேன்மையை தலைவி தோழிக்கு உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச்செடியின் பூக்களிலிருந்து தேன் ஊறிஞ்சி சேர்க்கும் தேனீக்கள் அமைந்த மலை நாட்டினன் தலைவன்.
  • உவமை: தலைவனுக்கும் தலைவிக்குமான நட்பு, நிலத்தைவிடப் பெரியது, வானை விட உயர்ந்தது, நீரைவிட ஆழமானது.

பாடல் நடை

குறுந்தொகை - 3

  • திணை: குறிஞ்சி
  • துறை: தலைமகள் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித்தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.

 நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 18:41:56 IST