under review

குளம்பந்தாயனார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குளம்பந்தாயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

குளம்பந்தாயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தாயனார் என்னும் இயற்பெயரை கொண்டவர். குளம்பன் என்பது தந்தையின் பெயராக கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

குளம்பந்தாயனார் பாடிய பாடல் புறநானூறில் 253-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. காட்டில் நடந்த போரில் இறந்துபோன கணவனின் உடலருகே அமர்ந்து தன் ஆற்றாமையை புலம்பும் மனைவியின் குரலில் பொதுவியல் திணையில் முதுபாலை துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • வலிமையான நாரால் கட்டப்பட்ட பூமாலைகளை அணிந்து இளைஞர்கள் போரில் மகிழ்ச்சியாக ஈடுபடுவர்.
  • உவமை: கணவனின் இறப்பினால் ஏற்பட்ட துயரத்தால் கை வளையல்கள் உருவி கொண்டுவரும் அளவுக்கு உடல் மெலிந்த பெண்ணின் கைகள், நெல் முளைக்காத பசுமையான இளம் மூங்கிலின் பட்டையை உரித்தது போல வெளுத்திருந்தது.

பாடல் நடை

புறநானூறு - 253

  • திணை: பொதுவியல் துறை: முதுபாலை

 என்திறத்து அவலம் கொள்ளல் இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
நாகாஅல்என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
வளைஇல் வறுங்கை ஓச்சிக்
கிளையுள் ஒய்வலோ? கூறுநின் உரையே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:29:30 IST