வண்ணம் இலக்கியங்கள்
'வண்ணம் ' என்பது பாடலில் நிகழும் ஒசை விகற்பமாகிய சந்த வேறுபாடு. தொல்காப்பியர், செய்யுளியலில் செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கூறுகின்ற இடத்தில் 'வண்ணந்தாமே நாலைந் தென்ப' என்று குறிப்பிட்டுள்ளார். அதன் படி வண்ணங்கள் இருபது வகைப்படும்.
வண்ணம் விளக்கம்
"தலைவன் ஒருவனை வாழ்த்திப் புகழுமிடத்தும் , சான்றோர் குறிப்புகளை விளக்கிச் சொல்லுமிடத்தும் இசைத்துறைக்கு உரிய வண்ணங்கள் அமையப் பாடுதல் ஏற்றது" என்று தொல்காப்பியம் புறத்திணையியலில் விளக்குகிறது. நச்சினார்க்கினியர் தன் தொல்காப்பிய உரையில் வண்ணம் குறித்து விளக்கும்போது, "அவை நூறும் பலவுமாக வேறுபடக் கொள்ளினும் இவ்விருபதின்கண்ணே யடங்கும்; 'வேறு சந்த வேற்றுமை செய்யா' என்றற்கு, அது நுண்ணுணர்வுடையோர்க்குப் புலனாம் என்று உணர்க" என்று குறிப்பிட்டுள்ளார்.
வண்ணங்களின் வகைகள்
தொல்காப்பியர் இருபது வண்ணங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவை,
- பாஅ வண்ணம்
- தாஅ வண்ணம்
- வல்லிசை வண்ணம்
- மெல்லிசை வண்ணம்
- இயைபு வண்ணம்
- அளபெடை வண்ணம்
- நெடுஞ்சீர் வண்ணம்
- குறுஞ்சீர் வண்ணம்
- சித்திர வண்ணம்
- நலிபு வண்ணம்
- அகப்பாட்டு வண்ணம்
- புறப்பாட்டு வண்ணம்
- ஒழுகு வண்ணம்
- ஒரூஉ வண்ணம்
- எண்ணு வண்ணம்
- அகைப்பு வண்ணம்
- தூங்கல் வண்ணம்
- ஏந்தல் வண்ணம்
- உருட்டு வண்ணம்
- முடுகு வண்ணம்
இருபது வண்ணங்களின் ஐந்து வகைகள்
தொல்காப்பியர் கூறியிருக்கும் இவ்விருபது வண்ணங்களை, 'எழுத்து, சொல், தொடை, ஒசை, நடை' என ஐவகையாகப் பாகுபடுத்தலாம் எனத் தமிழண்ணல் குறிப்பிட்டுள்ளார். அவை,
எழுத்து அடிப்படை வண்ணம் (7)
- வல்லிசை வண்ணம்
- மெல்லிசை வண்ணம்
- இயைபு வண்ணம்
- நெடுஞ்சீர் வண்ணம்
- குறுஞ்சீர் வண்ணம்
- சித்திர வண்ணம்
- நலிபு வண்ணம்
சொல் அல்லது சீர் அடிப்படை வண்ணம் (3)
- பாஅ வண்ணம்
- எண் வண்ணம்
- ஏந்தல் வண்ணம்
தொடை அடிப்படை வண்ணம் (2)
- தாஅ வண்ணம்
- அளபெடை வண்ணம்
ஓசை அடிப்படை வண்ணம் (6)
- ஒழுகு வண்ணம்
- ஒரூஉ வண்ணம்
- அகைப்பு வண்ணம்
- தூங்கல் வண்ணம்
- உருட்டு வண்ணம்
- முடுகு வண்ணம்
நடை அல்லது வடிவ அடிப்படை வண்ணம் (2)
- அகப்பாடல் வண்ணம்
- புறப்பாடல் வண்ணம்
வண்ண இலக்கிய நூல்கள் பட்டியல்
| வரிசை எண் | நூல்கள் | ஆசிரியர் | காலம் |
| 1 | அண்ணாமலையார் வண்ணம் | சேறைக் கவிராச பிள்ளை | பொ.யு. 15-ம் நூற்றாண்டு |
| 2 | சந்திரசேகர வண்ணம் | சவ்வாதுப்புலவர் | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
| 3 | தஞ்சை நாயகன்பிள்ளை வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
| 4 | திருப்பூவன வண்ணம் | கந்தசாமிப் புலவர் | பொ.யு. 17-ம்நூற்றாண்டு |
| 5 | நாற்கவி வண்ணம் | இராசை. வடமலையப்ப பிள்ளை | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
| 6 | புட்பவனநாதர் வண்ணம் | கந்தசாமிப் புலவர் | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
| 7 | கூழங்கையர் வண்ணம் | கூழங்கைத் தம்பிரான் | பொ.யு. 18-ம் நூற்றாண்டு |
| 8 | சிதம்பரேசர் வண்ணம் | தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் | பொ.யு. 18-ம் நூற்றாண்டு |
| 9 | சீறாப்புராண வண்ணம் | கவிக்களஞ்சியப் புலவர் | பொ.யு. 18-ம் நூற்றாண்டு |
| 10 | அரிச்சந்திர வண்ணம் | பூ. ஆறுமுகம் பிள்ளை | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 11 | இராமவர்மா வண்ணம் | சுந்தரதாச பாண்டியர் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 12 | கந்தபுராண வசனம் | ந. இராமலிங்கம்பிள்ளை | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 13 | பழனி கலவி மகிழ்தல் வண்ணம் | தண்டபாணி சுவாமிகள் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 14 | மயூரகிரிநாதர் வண்ணம் | சிதம்பர பாரதி | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 15 | முருகன் வண்ணத்தாழிசை | விசுவநாத சாஸ்திரி | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 16 | வண்ணக்கவி | பிச்சையா நாவலர் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 17 | வண்ணம் | புரசை சபாபதி முதலியார் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
| 18 | கண்டதேவி முருகர் வண்ணச் சந்தனமாலை | அரங்கையார் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
| 19 | திருவாமாத்தூர் வண்ணம் | காஞ்சி. நாகலிங்க முனிவர் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
| 20 | முருகக்கடவுள் வண்ணம் | மணிவாசக சரணாலய அடிகள் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
| 21 | வண்ணங்கள் | கருப்பையாப் பாவலர் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
| 22 | திருப்போரூர் சிகையறுத்தார் வண்ணம் | இராமசாமிக் கவிராயர் | பொ.யு. 20-ம் நூற்றாண்டு |
| 23 | முருகப்பெருமான் வண்ண மஞ்சரி | ௧. அருணாசல ஆச்சாரி | பொ.யு. 20-ம் நூற்றாண்டு |
| 24 | இரகுநாத நாயக்கன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 25 | இரத்தினகிரியப்பர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 26 | இராமநாதசுவாமி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 27 | இராமலிங்கசுவாமி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 28 | குமாரசாம்புவன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 29 | சடையப்பன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 30 | சந்திரமதி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 31 | சிதம்பரேசுவரர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 32 | சீரங்கநாதர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 33 | சூளாமணி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 34 | செண்டலங்காரன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 35 | செம்பை இளையான் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 36 | சொக்கநாதசுவாமி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 37 | சோழன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 38 | செளமிய நாராயணப் பெருமாள் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 39 | தியாகராசர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 40 | திருப்பெருந்துறை ஆளுடையார் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 41 | திவ்வியசூரி கதார்த்த வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 42 | நடராசர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 43 | நெல்லைநாதர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 44 | பலர் பேரில் பாடிய வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 45 | மெய்க்கண் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 46 | வராககிரி வீரசின்னையன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 47 | விட்டலராயச் சோழகன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 48 | வீரப்ப நாயக்கன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 49 | வீரராகவ முதலியார் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 50 | வெள்ளைச் செட்டியார் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 51 | வேங்கடபதி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 52 | வேங்கடாசலமகிபன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
| 53 | வேங்கடேசுவரன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
உசாத்துணை
- தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம்: பகுதி-2, ம.சா. அறிவுடை நம்பி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, முதல் பதிப்பு, டிசம்பர், 2003.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Nov-2023, 06:18:39 IST