being created

யசோதர காவியம்

From Tamil Wiki
Revision as of 23:00, 4 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யசோதர காவியம், ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று.  யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் ஆகிய மூன்று மட்டுமே ஐஞ்சிறு காப்பியங்களில் ‘காவியம்’ என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள சூளாமணி, நீலகேசி இரண்டும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. ஜைன புராணமான வடமொழி உத்தர புராணத்தில் ‘யசோதரன் சரிதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மன்னன் பற்றி தமிழில் வெளியாகியிருக்கும் ஒரே நூல் இதுதான்.

யசோதரன் சரிதத்தை வடமொழியில் சோமதேவ சூரி , வாதிராஜ சூரி, அரிபத்திரர் புட்பதந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர். வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் ‘யசோதர காவியம்’ படைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.