வாசகசாலை
வாசகசாலை தமிழில் செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு. வாசகசாலை பதிப்பகம், வாசகசாலை இணைய இதழ், புரவி அச்சிதழ் ஆகியவற்றையும் நடத்துகிறது. திரைக்களம் என்னும் சினிமா அமைப்பும் இதனுடன் இணைந்துள்ளது
தொடக்கம்
வாசகசாலை அமைப்பு கார்த்திகேயன் மற்றும் அருண் இருவராலும் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பு. 'வாசகசாலை' எனும் பெயரில் ஒரு முகநூல் குழு 15 ஆகஸ்ட் 2012 அன்று தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில், மாதம் ஒரு கூட்டம் என்ற அடிப்படையில் வாசகசாலையின் முதல் கூட்டம், 14 டிசம்பர் 2014 அன்று எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் '7.83 ஹெர்ட்ஸ்' எனும் அறிவியல் புனைவு நாவலுக்காக நடத்தப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
துணை அமைப்புகள்
வாசகசாலை இணைய இதழ்
இளம்படைப்பாளிகளுக்காக 16 அக்டோபர் 2016 ல் வாசகசாலை என்னும் பெயரில் இணைய இதழ் துவங்கப்பட்டது. அதற்கான அறிமுக வரைவினை நண்பர் பாஸ்கர் ராஜாவுடன் சேர்ந்து உருவாக்கியவர் எழுத்தாளர் விஷால்ராஜா. முதலாவது இதழில் அறிமுக எழுத்தாளரான தூயன் முதல் யுவன் சந்திரசேகர் வரை அனைவரது பங்களிப்பும் இருந்ததுவாசகசாலை பதிப்பகம்
புரவி அச்சிதழ்
கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பாரம்பரிய அச்சுப் பத்திரிகைகள் பெரிய முடக்கத்தைச் சந்தித்திருந்த வேளையில் 'புரவி' என்னும் கலை இலக்கிய அச்சு இதழை வாசகசாலை வெளியிட்டது. ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை 21 இதழ்கள் வெளிவந்தபின் நிதிச்சுமையால் நிறுத்தப்பட்டது.
திரைக்களம் அமைப்பு
திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதற்காக 22 மே 2017-ல் 'திரைக்களம்' என்றொரு தனியான பிரிவு துவங்கப்பட்டது.
வாசகசாலை பதிப்பகம்
இளம் படைப்பாளிகளுக்கு ஒரு களமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 27 டிசம்பர் 2016 ல் வாசகசாலை பதிப்பகம் துவங்கப்பட்டது. அதன் முதல் வெளியீடாக தஞ்சை பிரகாஷ் எழுதிய 'மிஷன் தெரு' குறுநாவல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது.
நிகழ்வுகள்
வாசகசாலை வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காகச் செய்து வரும் செயல்பாடுகள்:
சென்னையில்
- மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகள்: டிசம்பர் 2014 முதல் மாதாந்திர இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில கூட்டங்கள் மட்டும் 'கிளாசிக் சீரிஸ்' என்று பெயரிடப்பட்டு தமிழின் மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்டது. (தஞ்சை ப்ரகாஷ் - ஜனவரி 2015, ப.சிங்காரம் - ஜூலை 2015, ராசேந்திர சோழன் - அக்டோபர் 2016)
- முழுநாள் நிகழ்வுகள்: (ஆண்டிற்கு ஒருமுறை) 2015 முதல் நிகழ்கின்றது. 2017-ஆம் ஆண்டு நிகழ்வானது மூத்த ஆளுமை எஸ்.வி.ராஜதுரை அவர்களை கவுரவிக்கும் பொருட்டு ‘எஸ்.வி.ஆர் படைப்புலகம்’ என்னும் பெயரில் ஆகஸ்டு 15, 2017 அன்று நடைபெற்றது.
- கதையாடல்: ஒவ்வொரு மாதமும் அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து வெளியாகும் 5 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அந்த கதைகளைப் பற்றிய உரையாடல் நடத்தும் மாதாந்திர நிகழ்வு . ஜூன் 2016 முதல்.
- அண்ணா நூறாண்டு நூலக நிகழ்வுகள்: சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் சேர்ந்து தமிழ்ச் சிறுகதை விழா .2016 முதல். (நூறாவது வார நிகழ்வில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்)
- சென்னை அசோக் நகர் வட்டார நூலகத்துடன் இணைந்து பிரதி செவ்வாய் தோறும் மாலை வாராந்திர தொடர் நிகழ்வுகள். 18/04/2017 முதல்.
- திரைக்களம் மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகள்: (மாதம் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையில் தமிழ் மட்டுமல்லாது இந்திய மற்றும் அந்நிய மொழித் திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல்) 22/05/2017
- திரைக்களம் வழங்கும் 'ஒளியும் ஒலியும்': திரைப்படப் பாடல்களின் வழியாக நினைவுகளை மீட்டெடுக்கும் ஓர் இசைவெளிப் பயணமாக அமைந்த மாதாந்திர தொடர் நிகழ்வு வரிசை . 03/11/2017 முதல்
- வாசகசாலை வழங்கும் 'ஈழத் தமிழ் எழுத்தாளர் வரிசை' ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள் பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்வு வரிசை 27/08/2016 முதல்
- ஆழ்வார்பேட்டை வட்டார நூலகத்துடன் வாசகசாலை இணைந்து வழங்கும் 'குழந்தைகளுக்கான கொண்டாட்டம்':பிரதி ஞாயிறு காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குழந்தைகளுக்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னிறுத்திய வாராந்திர தொடர் நிகழ்வு வரிசை. 28/10/18 முதல்
- பெரம்பூர் பெரியார் நகர் முழு நேர கிளை நூலகத்துடன் வாசகசாலை இணைந்து வழங்கும் 'வடசென்னையில் வாசகசாலை' 07/01/18 முதல்
- திரைக்களம் வழங்கும் 'இணைத்திரை': திரைப்படத்திற்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் வலைத்தொடர்களை பற்றிய மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு வரிசை. 21/07/2019 முதல்
- திரைக்களம் வழங்கும் 'குறுந்திரை' :எதிர்கால திரைப்பட இயக்குநர்களை உருவாக்குவதற்கான ஆயத்த களமாக விளங்கும் குறும்படங்களைப் பற்றி திரையிடல் மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் அமைந்த மாதாந்திர நிகழ்வு வரிசை. 15/05/22 முதல்
- வாசகசாலை வழங்கும் 'மேடை': சமூகம் சார்ந்த நூல்களை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நிகழ்வு வரிசை29/06/19 முதல்
- வாசகசாலை வழங்கும் 'முகங்கள்': பல்துறை சார் ஆளுமைகளை அறிமுகம் செய்வதற்காமன மாதாந்திர நிகழ்வு வரிசை11/10/19 முதல்
- எழுத்தாளர் பெரியார்: ஈ.வெ.ராமசாமி பெரியாரின் கருத்துகள் குறித்து விவாதத்திற்காக ' 2017-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஐ ஒட்டி முதல் முழுநாள் நிகழ்வு நடத்தப்பட்டது.
- எழுத்தாளர் அம்பேத்கர்: அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்காக ஏப்ரல் 14-ஆம் தேதியை ஒட்டி முதல் முழு நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. 2018 முதல் .
- எழுத்தாளர் மார்க்ஸ்: கார்ல் மார்க்ஸ் குறித்து விவாதிப்பதற்காக ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள்ளான மே ஐந்தாம் தேதியை ஒட்டி 'எழுத்தாளர் மார்க்ஸ்' என்ற பெயரில் முதல் முழு நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. 2020 முதல்
வெளியூர் நிகழ்வுகள்
சென்னைக்கு வெளியே இலக்கிய நிகழ்வுகள் பிப்ரவரி 2018-ல் தொடங்கப்பட்டன.
- மதுரை - மூட்டா அரங்கு, ஸ்ரீராம் ஹோட்டல் உள்ளிட்ட வெளி இடங்கள்
- கோவை - பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி மற்றும் மாவட்ட மைய நூலகம் (தற்போது மாவட்ட மைய நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது)
- திருப்பூர் - மாவட்ட மைய நூலகம் மற்றும் குமரன் விடுதி
- திருச்சி - மாவட்ட மைய நூலகம்
- வேலூர் - மாவட்ட மைய நூலகம்
- சேலம் - மாவட்ட மைய நூலகம்
- திருவாரூர் - மாவட்ட மைய நூலகம்
- தூத்துக்குடி - மாவட்ட மைய நூலகம்
- நெல்லை - மாவட்ட மைய நூலகம்
- செங்கல்பட்டு - மாவட்ட மைய நூலகம்
- கும்பகோணம் - கார்த்திக் டியூஷன் சென்டர்
- தஞ்சாவூர் - பெசண்ட் அரங்கு
- காரைக்குடி - ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி
- திண்டுக்கல் - மாவட்ட மைய நூலகம் & வாழ்க வளமுடன் அரங்கம்
- சின்னமனூர் - கிளை நூலகம்
- புதுக்கோட்டை - மாவட்ட மைய நூலகம்
- விழுப்புரம் - மாவட்ட மைய நூலகம்
- ராஜபாளையம் - முழு நேர கிளை. நூலகம்
- திருவண்ணாமலை - மாவட்ட மைய நூலகம்
- திருவள்ளூர் - கிளை நூலகம்
- ஈரோடு - மாவட்ட மைய நூலகம்
- நாகர்கோயில்.கன்னியாகுமரி - மாவட்ட மைய நூலகம்
- காஞ்சிபுரம் - அறிஞர் அண்ணா கிளை நூலகம்
- விருதுநகர் - மாவட்ட மைய நூலகம்
- ராமநாதபுரம் - மாவட்ட மைய நூலகம்
வெளிமாநில நிகழ்வுகள்
- புதுச்சேரி - யூனியன் பிரதேசம் - விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையம், லாஸ்பேட்
- பெங்களூரு - வாசகசாலை மற்றும் திரைக்களம் என இரண்டு வகையான நிகழ்வுகள் நடைபெற்றது - பெங்களூர் தமிழ் சங்கம், உல்சூர்.
- மும்பை - தமிழ் பள்ளி, தாராவி
உசாத்துணை
- வாசகசாலை இணையப் பக்கம்
- வாசகசாலை- எஸ்.ராமகிருஷ்ணன்
- வாசிப்பால் இணைந்த இளைஞர்கள் குங்குமம்
- வாசகசாலை அருண் - கார்த்திகேயன் பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 22:07:01 IST