under review

சுமதி ராமசாமி

From Tamil Wiki
Revision as of 13:45, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:வரலாற்றாய்வாளர்கள் to Category:வரலாற்றாய்வாளர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
சுமதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுமதி (பெயர் பட்டியல்)
சுமதி ராமசாமி

சுமதி ராமசாமி கலாச்சார வரலாற்றாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர். அமெரிக்காவில் டியூக் பல்கலையில் பணிபுரிகிறார். குமரிக் கண்டம் என்னும் கருத்துருவை விரிவாக மறுத்து எழுதியவர்

கல்வி, பணிகள்

கலிபோர்னியா பெர்க்லி பல்கலையில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். டியூக் பல்கலையில் வரலாற்றாய்வுத்துறையில் பணிபுரிகிறார்.

பென்சில்வேனியா பல்கலையில் வரலாற்றாசிரியராகவும் பயிற்றுநராகவும் பணிபுரிந்தார். மிச்சிகன் பல்கலையில் துணைப்பேராசிரியர் தென்கிழக்கு ஆசிய ஆய்வு நிலையின் இயக்குநர், டியூக் பல்கலையின் செயல் அலுவலர், தென்னாசியாவின் பரப்பியல் காட்சிக்கலைகளை ஆவணப்படுத்தும் Tasveer Ghar நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர்.

குமரிக்கண்ட கருத்துவ மறுப்பு

சுமதி ராமசாமி எழுதிய The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories விரிவான தரவுகளுடன் குமரிக்கண்டம் என்னும் கருத்துருவம் பெரும்பாலும் ஓரிரு நூல்செய்திகளை விரிவுபடுத்தி, ஐரோப்பியர்களின் கற்பனைக்கதைகளை ஆய்வுத்தரவுகளாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது என முன்வைக்கிறது. 'போலித்தொல்லியல், போலிநிலவியல் ஆய்வுகள் வழியாக முன்வைக்கப்பட்ட கருத்து அது' என விவரிக்கிறது

சுமதி ராமசாமியின் தரப்பை தமிழில் சு.கி.ஜெயகரன் அவர் எழுதிய குமரி நில நீட்சி என்னும் நூலில் விவாதித்திருக்கிறார்.

விருதுகள்

  • J.B. Harley Research Fellow for postgraduate study in the history of cartography
  • 1997-98; Han Rosenhaupt Memorial Book Award, Woodrow Wilson National Fellowship Foundation
  • 1999, for Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891-1970
  • Frederick Burkhardt Fellow, American Council of Learned Societies,
  • 2001-02; Guggenheim Fellow, 2001.

நூல்கள்

  • Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891-1970, University of California Press (Berkeley, CA), 1997.
  • (Editor) Beyond Appearances? Visual Practices and Ideologies in Modern India, Sage Publications (Thousand Oaks, CA), 2003.
  • The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories, University of California Press (Berkeley, CA), 2004.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:05 IST