under review

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

From Tamil Wiki
Revision as of 11:53, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆனந்த் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆனந்த் (பெயர் பட்டியல்)
சீனிவாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீனிவாசன் (பெயர் பட்டியல்)
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன் (பிறப்பு: பிப்ரவரி 1, 1965) தமிழில் எழுதிவரும் மொழிபெயர்ப்பாளர், பிழைதிருத்துநர்.

பிறப்பு, கல்வி

ஆனந்த் ஸ்ரீனிவாசன் ராகவன், ருக்மணி இணையருக்கு மகனாக சென்னை மாம்பலத்தில் பிப்ரவரி 1, 1965 அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு அண்ணன், ஒரு தங்கை. சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார். சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் தமிழில் ஆய்வியல் நிறைஞர் (MPhil) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஆனந்த் ஸ்ரீனிவாசன் அக்டோபர் 21, 1992 அன்று சுதாவைத்திருமணம் செய்து கொண்டார். மகன் அம்ருத் வர்ஷன். தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையில் ஸ்டெனோவாக 2005 வரை பணிபுரிந்தார். 2005 முதல் ஆளுநரின் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலராக இருந்து 2018-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

சுதா, ஆனந்த் ஸ்ரீநிவாசன் தம்பதியர்

இலக்கிய வாழ்க்கை

ஆனந்த் ஸ்ரீனிவாசன் அ. முத்துலிங்கம், டால்ஸ்டாய், ஜெயமோகன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். 2012 முதல் 'குரு நித்யா' என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து குரு நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வருகிறார். ஆனந்த் ஸ்ரீனிவாசனின் முதல் மொழிபெயர்ப்பு 'கூண்டுக்குள் பெண்கள்' நற்றிணை வெளியீடாக 2019-ல் வெளியானது. இது விலாஸ் சாரங்கின் ”Women in Cages” என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஹெச்.எஸ் சிவப்ரகாஷின் 'Guru: Ten Doors to Ancient Wisdom' என்ற ஆங்கில நூலை 'குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். அனிதா அக்னிஹோத்ரியின் நாவலை ‘உயிர்த்தெழல்’ என்ற பெயரில் 2022-ல் மொழியாக்கம் செய்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் 2014-ல் தொடங்கி 2020 வரை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் எழுதிய வெண்முரசு நாவல் வரிசையை, ஒவ்வொரு நாளும் பிழைதிருத்தி, தகவல்களைச் சரிபார்த்து உதவிய சுதா, ஆனந்த் ஸ்ரீனிவாசன் தம்பதிகளை வெண்முரசின் இணையாசிரியர்களாகக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • கூண்டுக்குள் பெண்கள் (2019, நற்றிணை)
  • குரு பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் (2019, நற்றிணை)
  • உயிர்த்தெழல் (2022, தமிழ்வெளி)
படைப்பு இடம்பெற்ற தொகுப்புகள்
  • வேங்கைச் சவாரி தொகுப்பு
  • யதி தத்துவத்தில் கனிதல்

இணைப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 20:54:20 IST