under review

வாயில் இளங்கண்ணன்

From Tamil Wiki
Revision as of 01:04, 13 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வாயில் என்ற ஊரில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வாயில் இளங்கண்ணன் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 346-வது பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் தலைவிக்கு, தலைவனின் உள்ள குறிப்பை உணர்த்தும் தோழி என்னும் துறையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவனின் உள்ளத்து விருப்பத்தைத் தோழி தலைவிக்கு உரைத்தலாக அமைந்த பாடல்

  • இளம் பெண்யானையை தேடி மூங்கில்போல நீண்ட தந்தம் உடைய ஆண் யானை குறவர் வாழும் குன்றாகிய ஊருக்குள் நுழையும். அதனைக் குறவ மக்கள் எதிர்த்து விரட்டுவர்.
  • சுனையில் மலர்ந்த குவளை பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்வர்.
  • திணை கொல்லையில் காவல் இருந்து தானிய கதிர்களைக் கொறிக்க வரும் கிளி முதலான பறவைகளை விரட்டியடிப்பர்.

பாடல் நடை

குறுந்தொகை - 346

திணை: குறிஞ்சி துறை: தலைவனின் உள்ள குறிப்பைத் தலைவிக்கு உரைத்தல்

நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தஃகி யோனே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:29:53 IST