under review

சி.வி. கார்த்திக் நாராயணன்

From Tamil Wiki
Revision as of 18:21, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கார்த்திக் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கார்த்திக் (பெயர் பட்டியல்)
நாராயணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாராயணன் (பெயர் பட்டியல்)
கார்த்திக் நாராயணன்
பொன்னியின் செல்வன்

சி.வி.கார்த்திக் நாராயணன் (C.V. Karthik Narayanan) (1938-டிசம்பர் 2017) கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் ஒருவர்.

தனிவாழ்க்கை

கார்த்திக் நாராயணன் தொழில்முறை பொறியாளர். கல்கத்தாவில் 1938-ல் பிறந்து தூத்துக்குடியில் கல்வி கற்றவர். மிருதங்கக் கலைஞர். மனைவி உமா பிரெஞ்சு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்பவர். உமா SOS Children's Villages of India-Chatnath Homes ன் நிர்வாகியாகவும் Karna Prayag Trust அறக்கட்டளைத் தலைவராகவும் இருக்கிறார்.ராம்கோபால், காயத்ரி மகனும் மகளும்.

கார்த்திக் நாராயணன் தொழிலதிபர். மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தினார். கார்த்திக் நாராயணன் இந்திய மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உட்பட பல முதன்மைப் பொறுப்புகளை வகித்தவர்.

கல்வி, இலக்கியப் பணிகள்

கார்த்திக் நாராயணன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் செனெட் உறுப்பினராகப் பணியாற்றினார்

மொழியாக்கம்

கார்த்திக் நாராயணன் 2002-ல் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மாக்மில்லன் நிறுவனம் அதை வெளியிட்டது.(Macmillan India Limited )

இறப்பு

கார்த்திக் நாராயணன் டிசம்பர் 2017-ல் சென்னையில் மறைந்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:59 IST