தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1975) (தமுஎச, தமுஎகச) தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்பு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் கிளை அமைப்பு. தமிழகமெங்கும் கிளைகள் கொண்டது. தொடர்ச்சியாக கலையிலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்து வருகிறது
தொடக்கம்
இந்திய அளவில் என்னும் பண்பாட்டு அமைப்பு மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கைகளைப் பரப்பும்பொருட்டு உருவாக்கப்பட்டது. அதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்திலும் அவ்வண்ணம் ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய இதழான செம்மலரில் எழுதிய 13 எழுத்தாளர்களை திரட்டி 1971 ஆம் ஆண்டு கட்சி நடத்திய இலக்கியப் பயிற்சிப்பட்டறையில் என்.சங்கரய்யாவால் முன்வைக்கப்பட்டது.
அன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு 2024 வரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளன.
11 ஜூலை 1975 அன்று மதுரையில் நடைபெற்ற செம்மலர் இதழின் எழுத்தாளர்கள் மாநாட்டில் உருவானது. அதன்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தமுஎச) என்னும் அமைப்பு உருவானது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் அமைப்பு மாநாடு 1975 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் அமைப்பின் கொள்கை, சட்டவிதிகள் முடிவுசெய்யப்பட்டன. கே.முத்தையா முதல் தலைவராகவும் பேராசிரியர் இரா. கதிரேசன் முதல் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் இதில் கலைஞர்களும் சேர்க்கப்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.