இரா. கதிரேசன்
இரா. கதிரேசன் (பிறப்பு: ஆகஸ்ட் 19, 1971) தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இரா. கதிரேசன், ஆகஸ்ட் 19, 1971-ல், கும்பகோணத்தில், இராசகோபால் - அஞ்சம்மாள் இணையருக்குப் பிறந்தார். மேல்நிலை வகுப்பு வரை கல்வி பயின்றார்.
நாடக வாழ்க்கை
இரா. கதிரேசன், 1985 முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 'வள்ளி' என்ற புனை பெயரில் அறியப்பட்டார். கதிரேசன் நடித்ததில், 'திருவிளையாடல்', 'நீயா நானா சரிதானா?', 'மறதியால் தண்டனை', 'பெரிய வீடு', 'மேகக் கூட்டங்கள்', 'கூட்டுறவே நாட்டுயர்வு', 'கதாநாயகன் தேவை' முதலான நாடகங்கள் குறிப்பிடத் தகுந்தவை.
நாடகப் பங்களிப்புகள்
கதிரேசன், 'முத்தமிழ் நாடக மன்றம்', 'மலரும் பூக்கள் வளர் மன்றம்', 'ஃபைவ் ஸ்டார் நாடக மன்றம்' முதலான நாடகக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு நடித்து வருகிறார்.
பரிசு
இரா. கதிரேசன், கும்பகோணம் சுழற்சங்கம் நடத்திய நாடகப் போட்டியில் பங்கு பெற்றுச் சிறந்த நடிகருக்கான பரிசும் பாராட்டும் பெற்றார்.
மதிப்பீடு
இரா. கதிரேசன் தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
உசாத்துணை
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Oct-2025, 05:51:15 IST